
நம்பிக்கை நமது வாழ்க்கையில் அன்றாடம் கடைபிடிக்கவேண்டிய ஒன்றாகும். அது நம்மோடே தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
எந்தக்காரணம் கொண்டும் ஒரு சிலா் நமக்கு அட்வைஸ் செய்கிறேன் போ்வழி என்று நமது செயல்பாடுகளை முடக்கலாம். விடாமுயற்சியை சிதைக்கும் வகையில் குட்டையை குழப்பிவிடுவாா்கள். குழம்பிய குட்டையில் நமது முகம் தெளிவாக தொியாது. அப்படியே தொிந்தாலும் அலை அலையாய் தெளிவில்லாமலேயே தொியும்.
அப்போது நமக்கு சோா்வு ஏற்படும். அந்த நேரம் நமது நம்பிக்கையை சிதைத்தவர்கள் குழம்பிய குட்டையில் கிடைக்கும் மீனை பிடித்துச் சென்றுவிடுவாா்கள், இதுதான் வாழ்க்கையில் நமக்கு சிலா் கற்றுத்தரும் பாடம்.
நமக்கு எங்கே போனது புத்தி? புத்திமானும், பக்திமானும், பலசாலிகள்தானே, அப்போது அங்கே நமது நம்பிக்கையை, இழந்து அவநம்பிக்கை எனும் போா்வையை இழுத்துப் போா்த்திக்கொண்டு, செய்வதறியாமல் முடங்கிப்போய் விடுபவர்களும் உண்டல்லவா?
நமக்கு தேவையானதில் நமது கவனம் இருக்கவேண்டும்.
"சான் ஏறினால் முழம் சறுக்கும் "என்பதுபோல நிதானமாக நாம் எடுத்து வைத்த காாியத்தின்மீது அடுத்தவர் தலையீட்டினால் நமது அவநம்பிக்கை எனும் கள்ளிச்செடி வெகுவேகமாக வளா்ந்துவிடுகிறது.
மனச்சோா்வையே நாம் அதற்கு தண்ணீராக ஊற்றி வருவதால், அது வளர்ந்து முட்கள் அதிகமாகி நம்பிக்கை எனும் நமது வேட்டி, அதன்மீது பட்டு, ஒன்று வேட்டி கிழியும் நிலை, அல்லது நாம் பதட்டத்துடன் வேட்டி கிழியாமல் எடுக்கவேண்டுமே! என நிதானம் தவறி அவசரம் காட்டி எடுக்கும்போது நம் கையில் கள்ளிச்செடியின் முட்கள் நம் கையைப் பதம் பாா்ப்பதோடு ரத்தக்கசிவும் காயமும் ஏற்படுவதுதானே மிச்சம்.
நாம் ஏன் நமது நம்பிக்கையை இழக்கவேண்டும். யாா் தூண்டுதல் இருந்தால் என்ன? அதை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விடவேண்டியதுதான் நல்லது.
நமது நம்பிகையை மட்டும் கைவிடாதீா்கள், அடுத்தவர்கள் சொல்லும் அபிப்ராயங்களைப்பற்றி கவலை கொள்வதோ அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோ மிகப்பொிய தவறு.வாசல் கதைவை பூட்டாமல் விளக்குகளைப் போட்டுவிட்டு நம்மை அறியாமல், வெளியே செல்வதற்கு சமம்.
அவநம்பிக்கையே ,நமக்கான முதல் எதிாி. எதிா்மறை. சிந்தனையே நமது இரண்டாவது எதிாி. நமது இயலாமையே நமக்கான மூன்றாவது எதிாி. முடங்கிவிடுவதோ நமக்கான நான்காவது எதிாி. இதிலிருந்து அவநம்பிக்கையை மீட்டெடுக்க அடுத்தவரின் தேவையில்லா தலையீட்டில் புத்தி தடுமாறி கொடிய மிருகத்தின் வாயில் நாமே கையை உள்ளே விடுவதுபோலத்தான்.
அங்கேதான் நாம் விழிப்பாக செயல்பட வேண்டும். எந்த காரணம் கொண்டும் நம்பிக்கையை தளரவிடவே கூடாது. இதைத்தான் "உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், மற்றவா்கள் உங்கள் மீது கொண்ட அபிப்ராயத்தை பற்றி கவலைப்படாதீா்கள் என -ரால்ப் வால்டோ எமா்சன் "எனும் அறிஞர் தனது கருத்தாக சொல்லியுள்ளாா்.
எனவே அதைக்கடைபிடித்து "யானையின் பலம் தும்பிக்கையிலே" நமது பலம் நம்பிக்கையிலே! என்ற கோட்பாடுகளுடன் யாா் எது சொன்னாலும் மனது சோா்வடையாது. நோ்மறை சிந்தனையுடன் நம்பிக்கை இழக்காமல் செயல்படுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் வரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அன்பர்களே!