

வாழ்க்கையில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது, நல்ல மனோபாவம் அவசியம் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. பொறுமை, சாந்தம், கருணை போன்ற குணங்கள் மனநிலையை சீராக வைத்துக் கொண்டு சோகத்திலும் ஒளிக்கீற்றை காண உதவுகின்றன. நம்பிக்கை, உத்சாகம், அன்பு ஆகியவை வாழ்க்கையை மேம்படுத்தும் சக்திகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
மகிழ்ச்சி என்பது மனநிலையைக் பொறுத்தது. பொறுமை, சாந்தம், கருணை போன்றவை மனநிலையை சீராக வைக்க உதவும். நீங்கள் அடுத்தவருக்கு நன்மை தேடும்போது உங்களுக்கும் அது கிடைத்துவிடும் என்றார் கிரேக்க விஞ்ஞானி ப்ளேட்டோ. மிகப்பெரிய சோகம் என்று எதுவுமே இல்லை. நல்ல மனநிலை உடையவர்களுக்கு அந்த சோகத்திலிருந்தே தனக்குத் தேவையான ஆறுதலையும் தேறுதலையும் பெற்றுவிடலாம்.
இருண்ட வேகத்திலும் ஒரு ஒளிக்கீற்றை அவர் கண்டுபிடித்துவிடுவார். சூரியன் தென்படாத நிலையிலும் அது இருப்பதாக ஒரு நினைவை தோற்றுவித்துக் கொள்வார். பரந்த மனப்பான்மை உடையவர்கள் எல்லாம் உத்சாகமும், நம்பிக்கையும் இனிமையும் பெற்றவர்களாகவே விளங்குகிறார்கள். மற்றவர்கள் அவர்களைப் பார்த்து பொறாமை படக்கூடச் செய்வார்கள். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதிலும், மோசமாக்கிக் கொள்வதும் நம்பிக்கையில்தான் இருக்கிறது.
எப்போதுமே வாழ்க்கைக்கு நாணயத்தைப்போல் இரண்டு பக்கங்கள். எதைத் தேடுவது என்பது அவரவர் மனோசக்தியைப் பொறுத்தது. மனநிலையை சீராக வைத்திருப்பவர் உங்கே விழிகளில் சந்தோஷ கிண்ணம் வந்து தங்கும். கடுங்குளிரில் சூட்டையும், கஷ்டத்தில் சுகத்தையும், அறியாமையில் ஒளியையும் கொண்டுவருவது அந்த மனநிலைச் சீர்பாடுதான்.
நல்ல மனோபாவம் உள்ளவர் அனுபவங்களிலிருந்து ஆதாயம் அடைகிறார். சுயக்கட்டுப்பாட்டின் மூலம் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு விடுகிறார். அவருடைய வளர்ச்சி நல்ல விதமாக அமைகிறது அனுபவங்களின் மூலம் பதப்படாதவர் மோசமான நிலையை அடையும்படி ஆகிறது. அறிவியல் உன்னதர்களான கலிலியோ, ந்யூட்டன் போன்றவர்கள் பொறுப்பே, உழைப்பு, உத்சாகம் கொண்டவர்களாகத் திகவழ்ந்திருக்கிறார்கள்.
களிப்பு நிறைந்த இதயம் சகலநோய்களையும் தீர்க்கும் சஞ்சீவினி. மருந்துகளைப் காட்டிலும் உத்சாகமே அத்புத மருந்து என்கிறார் டாக்டர் மார்ஷல் ஹால். உல்லாசமும் தைரியமும் சோக நிவாரணி என்று இளைஞர்களுக்கு சிபாரிசு செய்கிறார் லூத்தர். இதயத்தின் இதமான காலநிலை உத்சாகம் அது ஆன்மாவிற்கு ஆறுதல் அளிக்கிறது.
பல சோதனைகளில் அவதிப்பட்ட விஞ்ஞானி மில்டன் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. டாக்டர் சாமுவேல் ஜான்சன் வாழ்க்கையில் ஒருபக்கம் விதியோடு போராடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் துணிச்சலாக இருந்து வெற்றி பெற்றார்.
சிலர் இளமையிலேயே முதுமை அடைந்துவிடுகிறார்கள். சிலரோ முதுமையிலும் இளமையாக இருக்கிறார்கள். உற்சாகமும், சந்தோஷமும் கொண்டவர்கள் வயதானாலும் இளைஞர்கள்தான். உத்சாகமற்ற பேர்வழிகள் இளமையிலேயே கிழவராகி விடுகின்றனர் என்றார் அறிஞர் எட்மண்ட் பர்க். சிலர் உத்சாகத்திற்கும், சந்தோஷத்திற்கும் கதவைத் திறப்பதில்லை. வருத்தத்தில் ஏறே இருப்பார்கள் மற்றவர்களைப் பற்றிக் கடுமையாக தீர்ப்பு எழுதுவார்கள்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் இந்த உலகம் உங்கள் கண்களுக்குப்படும். இருட்டையோ, வெளிச்சத்தையோ உங்களால் தேர்ந்துகொள்ள முடியும். நல்லதை பின்பற்றுவதும் தீயதை விலக்குவது மண் உங்களுக்கு முடிகிற காரியம்தான். மனிதமனம் கடுமையானவற்றை எதிர்க்கும் மென்மைக்கு வளைந்து கொடுக்கும்.
உத்சாகத்தின் அடிப்படையே அன்பு ,பொறுமை, நம்பிக்கைதான். அன்றிலிருந்து அன்பு பிறக்கிறது. ஒருவிளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு இதைப்போன்று அன்பைத் தருகிறா.ர் அன்பைப் பெறுகிறார் நம்பிக்கைதான் எல்லா முயற்சிக்கும், உழைப்புக்கும் தாய். நம்பிக்கைதான் ஏழையின் கையில் ரொட்டித்துண்டு. அதுவே உங்கள் மனோபாவத்தை நல்லவிதமாக வைத்துக்கொள்ள உதவும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எப்போதுமே புத்துணர்ச்சியுடனும் ஆக்கப்பூர்வமான எண்ணத்துடனும் வாழ்வதற்கான வழிகளைப் பெறலாம்.