அற்புதத்தில் அசத்தும் அரிய 10 தமிழகக் கோயில்கள்!

அற்புதத்தில் அசத்தும் அரிய 10 தமிழகக் கோயில்கள்!
Published on

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாடம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது தேனுபுரீசுவரர் கோயில். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் உள்ளது. இங்குள்ள சிவனை ஒரு ஜான் உயரமும், மூன்று விரற்கடை கனமும் கொண்ட மிகச் சிறிய வடிவில் தரிசிக்கலாம்.

மிழகத்தில் சிற்பக்கலையின் நுட்பமாகத் திகழும் சேலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது கண்ணனூர் மாரியம்மன் கோயில். தாரமங்கலத்தை சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்களும், இந்த மாரியம்மனை குலதெய்வமாகக் கொண்டாடி வழிபட்டு வருகின்றனர். பொதுவாக கோயில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மன் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கே ஒரே பீடத்தில் இரண்டு அம்மன்கள் .வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருப்பது வியப்பான விஷயம்.

திருச்சி மாவட்டம், உத்தமர்கோவில் அருள்மிகு புருஷோத்தம பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 3வது திவ்ய தேச தலமாக அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற தலம் ஆகும். பிரம்மா, திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்களின் தேவியர்களுடன் தம்பதி சமேதராக அருளும் தலம். கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மும்மூர்த்திகளுக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக வீதியுலா நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கற்பூர ஆரத்தியின் 7 முக்கியப் பலன்கள்!
அற்புதத்தில் அசத்தும் அரிய 10 தமிழகக் கோயில்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது ‘பொன்பதர் கூடம்' எனும் ஊர். இங்குள்ள சதுர்புஜ ராமர் கோயிலில் 4 திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கிறார். இங்கு சதுர்புஜ ராமர் சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவற்றை தரித்துக்கொண்டு அருள்பாலித்து வருகிறார். உத்ஸவ மூர்த்தியும் அதே திருக்கோலத்துடன் இருக்கிறார். இக்கோயில் அருகே சேஷ தீர்த்தம் உள்ளது. இது தீராத நோய்களையும் தீர்க்கும் என்பது ஐதீகம்.

திருச்செந்தூரில் மட்டுமே 5 தெய்வங்களாக வணங்கப்படுகிறார் முருகப்பெருமான். இங்கே முருகப்பெருமானுக்கு மஞ்சள் மாலையுடன், மஞ்சள் பட்டாடை உடுத்தி நான்முகனாகவும், நீல மலர்களையும் நீல நிற ஆடையுடன் திருமாலாகவும், சிவப்பு மலர், சிவப்பு ஆடையுடன் அரணாகவும், வெண்பட்டு வெண்மலர் சாத்தி மகேசனாகவும், பச்சை நிற மருக்கொழுந்து அணிந்து பச்சைப் பட்டு சாத்தி சதாசிவனாகவும் வழிபட்டு வருகின்றனர்.

பொதுவாக, எல்லா கோயில்களிலும் உள்ள ஆறுமுகம் கொண்ட முருகன் முகத்தில் முன் பக்கம் மூன்று முகங்களும், பின் பக்கம் மூன்று முகங்களும் இருக்கும். ஆனால், தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரின் மையப்பகுதியில் உள்ள கம்பராயப் பெருமாள் கோயிலில் ஆறுமுகனுக்கு முன் பக்கம் ஐந்து முகங்களும், பின் பக்கம் ஒரு முகமும் அமைந்துள்ளது. இது அபூர்வமானது. மேலும் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி யோக நிலையில் கையில் கமண்டலத்துடன் காட்சி தருகிறார் இதுவும் அபூர்வமானது.

மிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - சென்னை நெடுஞ்சாலையில் சூளகிரியில் உள்ளது வரதராஜ பெருமாள் கோயில். பழைமையான விஷ்ணு கோயில் இதுவாகும். இதன் கர்ப்பக்கிரகம் பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது. இகோயிலின் மண்டபம் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் 7 மலை, 7 கோட்டைகள், 7 மகா துவாரங்கள், ஏழடி உயர பெருமாள் என எல்லாமே ஏழாக அமைந்துள்ளது. இங்குதான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் உள்ளது. 3000 அடி உயரத்தில் உள்ள இந்த பெருமாளின் பாதத்தை சூரிய கதிர்கள் உத்ராயண காலத்தில் பூஜிப்பது விசேஷமானது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது திருவேங்கைவாசல். இக்கோயிலின் மூலவராக வியாக்ரபுரீசுவரர் உள்ளார். வியாக்ரம் என்றால் புலி என்று பொருளாகும். மூலவர் திருவேங்கைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் பெயர் அருள்மிகு பிரகதாம்பாள். ‘ஓம் சரவணபவ’ எனும் மந்திரச் சொல் 8 எழுத்துக்கள் கொண்டது. அதன் அடிப்படையில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் முருகனின் கருவறை எண் கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகன் கிரீடத்திற்கு பதில் குல்லா அணிவது விசேஷம். கோயிலில் சிவன் எதிரில் நவக்கிரகத்திற்குப் பதிலாக 9 விநாயகர்களும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பிரதோஷ வழிபாட்டில் இத்தனை வகைகளா?
அற்புதத்தில் அசத்தும் அரிய 10 தமிழகக் கோயில்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயில் எனும் அருணாசலேசுவரர் கோயில் தென் இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 9 கோபுரங்கள் உள்ளன. அதில் 4 பெரிய கோபுரங்கள் மற்றும் 5 சிறிய கோபுரங்கள். அதில் ஒன்று தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கோபுரம். திருவண்ணாமலைக்கு 9 வாயில் நகரம் என்று பெயர் இதனால் ஏற்பட்டது.

ந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் சங்ககிரி கோட்டை ஈரோட்டில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து 42 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஒரு வரலாற்று தலமாகும். இந்த மலையடிவாரத்தில் சோமேசுர சுவாமி எனும் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இம்மலை உச்சியில் கேசவப் பெருமாள் கோயிலும் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமை விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் 10 நுழைவு வாயில்களைக் கொண்டது என்பது தனிச்சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com