
எண் கணிதத்தில் 108 என்ற எண்ணுக்கு 1+0+8=9 என்று கணக்கிடப்படுகிறது. 9 மிகவும் அதிர்ஷ்டமான, சக்தி வாய்ந்த மங்கலகரமான எண்ணாகக் கருதப்படுகிறது. 9 மற்றும் 12 இரண்டாலும் வகுபடுகிறது. 108 ஆற்றல்களின் ஒற்றுமையைப் குறிக்கிறது. 1 உச்சநிலையை குறிக்கிறது. 0 என்பது வெறுமை அல்லது ஒன்றுமில்லாததைக் குறிக்கிறது மற்றும் 8 நேர்மையை குறிக்கிறது. அனைத்தின் கூட்டுத் தொகை 9. இவ்வாறு ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதன் மூலமாக தனி மனிதனை வெறுமை மற்றும் நேர்மையின் தாளத்துடன் சீரமைக்கும் என்று நம்பப்படுகிறது.
யோக மரபில் மனித உடல் பிரபஞ்சத்தின் சிறிய பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இந்த உடல் நிலைத்திருக்க பலவிதமான ஆற்றல் மையங்களாக அல்லது சக்கரங்கள் உள்ளன. 108 ஆற்றல் கோடுகள் ஒன்றிணைந்து இதய சக்கரத்தை உருவாக்குகின்றன என்று நம்பப்படுகிறது.
எனவே, ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது இந்த ஆற்றல் மையங்களை செயல்படுத்துவதாகவும், சக்கரங்களை சுத்தப்படுத்துவதாகவும், உடல் முழுதும் பிராண சக்தி சீராக செல்வதாகவும் கருதப்படுகிறது. இது மனதையும், உடலையும் அமைதிப்படுத்தும்.
இந்து மதத்தில் 108 உபநிடதங்கள் உள்ளன. கடவுளுக்கு 108 பெயர்கள் உள்ளன. சிவபெருமானுக்கு 108 பெயர்கள் உள்ளன. கிருஷ்ணருக்கும் அப்படியே. அறிவியல் ரீதியாகவும் சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தை விட 108 முதல் 109 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
நீங்கள் திரும்பத் திரும்ப மந்திரத்தைச் சொல்லும்போது நினைவாற்றல் மேம்படுகிறது. இதனால் மனதில் குழப்பங்கள் விலகி அமைதி ஏற்படுகின்றது.
சம்ஸ்கிருத எழுத்துக்களில் 54 எழுத்துக்கள் உள்ளன. அதில் ஆண் பால், பெண் பால் உள்ளன. 54கை இரண்டால் பெருக்க 108 வரும். மேலும், மனிதனின் ஆத்மா 108 நிலைகளைக் கடந்து செல்கிறது. எனவே, மந்திரத்தை 108 முறை ஜபிப்பது நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.