ஜெப மாலையில் 108 மணிகள் இருப்பது ஏன்? எண்ணிக்கையின் பின்னணி!

ஜெபமாலை முதல் பிரபஞ்சத்தின் இயக்கம் வரை 108 என்ற எண்ணின் விவரிக்க முடியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்.
108 எண் - 108 number significance
108 எண் - 108 number significance
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நம் நாட்டில் 108 என்ற எண்ணுக்கு எப்பொழுதுமே தனிப் பெருமை உண்டு. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன. உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன.

நேபாளத்தில் முக்தி நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களின் எண்ணிக்கை 108108 எண். நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108. வைணவ திவ்ய தேசங்கள் 108. புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும் மகிமையும் தரப்படுகிறது. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.

சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகப்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்கள் காரணத்துடன் தான் 108 என்ற இந்த அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி உள்ளார்கள்.

ஜெப மாலையில் 108 மணிகள் இருப்பதற்குப் பின்னால் மிக ஆழமான ஆன்மீகம், ஜோதிடம், அறிவியல் மற்றும் தத்துவக் காரணங்கள் உள்ளன. இந்து சமயம், பௌத்தம் மற்றும் சமண மதங்களில் இந்த எண் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

ஜோதிடக் காரணம்:

நட்சத்திர பாதங்கள்:

ஜோதிட சாஸ்திரங்களின்படி, வானமண்டலம் 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் உள்ளன. 27 x 4 =108. இந்த 108 பாதங்களும் பிரபஞ்சத்தின் முழுமையான இயக்கத்தைக் குறிக்கின்றது. ஜெபமாலையில் 108 முறை மந்திரம் சொல்வதன் மூலம் பிரபஞ்சம் முழுவதற்கும் நாம் நன்றியையும் வழிபாட்டையும் செலுத்துவதாக நம்பப்படுகிறது.

ராசிகளும் கிரகங்களும்:

ஜோதிட சாஸ்திரத்தின்படி மொத்தம் 12 ராசிகளும் 9 கிரகங்களும் உள்ளன. இவை இரண்டையும் பெருக்கினால் (12 x 9) 108 என்ற எண் கிடைக்கிறது. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆற்றலையும் இந்த எண் குறிப்பதாக நம்பப்படுகிறது.

108 எண் - 108 number significance
108 எண் - 108 number significance

சூரியனும் பூமியும் (அறிவியல் கணக்கீடு):

பண்டைய இந்திய வானவியலின்படி, சூரியன் மற்றும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஒரு குறிப்பிட்ட விகிதத்தைக் கொண்டுள்ளது. சூரியனின் விட்டம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல சுமார் 108 மடங்கு குறைவு.

அதேபோல் சந்திரனின் விட்டம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல சுமார் 108 மடங்கு குறைவு. எனவே 108 என்பது பூமிக்கும் அண்டவெளிக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் எண்ணாகப் பார்க்கப்படுகிறது.

மனித உடலின் ஆற்றல் மையங்கள் (சக்கரங்கள்):

யோகக் கலையின்படி மனித உடலில் உள்ள இதயச் சக்கரத்துடன் தொடர்பு கொள்ளும் 108 முக்கிய சக்தி நாடிகள் உள்ளன. ஒரு மந்திரத்தை 108 முறை ஜெபிக்கும் போது இந்த ஆற்றல் பாதைகள் அனைத்தும் தூண்டப்பட்டு உடலும் மனமும் ஆன்மீக விழிப்புணர்வைப் பெறுகின்றன என்று கூறப்படுகிறது.

மனித உடலில் உள்ள இடா, பிங்களா, சுஷும்னா ஆகிய மூன்று முக்கிய நாடிகள் இதயச் சக்கரத்தில் (அனாஹத சக்கரம்) ஒன்றாக இணைகின்றன. மனித உடலில் மொத்தம் 108 முக்கிய நாடிகள் (சக்தி அலைகள்) இணைந்துதான் இந்த இதயச் சக்கரத்தை உருவாக்குகின்றன. 108 முறை ஜெபம் செய்யும் பொழுது இந்த நாடிகள் தூண்டப்பட்டு உடல் மற்றும் மனம் தூய்மை அடைகிறது.

ஆயுர்வேத மருத்துவ முறையில் மனித உடலில் 108 வர்ம புள்ளிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை உடலின் முக்கிய உயிராற்றல் மையங்கள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
மணலுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள்: எகிப்து பிரமிடுகள் சொல்லும் வியக்க வைக்கும் கதை!
108 எண் - 108 number significance

எண்களின் தத்துவம் (Numerology):

1, 0, 8. இதில் 1 என்பது பிரபஞ்சத்தின் ஒரே இறைவனையும், 0 என்பது எதுவும் அற்ற நிலை, 8 என்பது எல்லையற்ற தன்மையை குறிக்கிறது.

கணிதம் மற்றும் ஆன்மீக ரீதியாக 108 என்ற எண் முழுமையைக் குறிக்கிறது.

1 - இறைவனைக் குறிக்கிறது. (ஒன்றே குலம் ஒருவனே தேவன்)

0 - எல்லையற்ற வெட்டவெளி அல்லது அகந்தையின்மையைக் குறிக்கிறது.

8 - பிரபஞ்சத்தின் முடிவிலாத் தன்மையைக் (Infinity ♾️) குறிக்கிறது.

ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 21,600 முறை சுவாசிக்கின்றான். இந்த நாளைப் பகல் (10,800 சுவாசங்கள்), இரவு (10,800 சுவாசங்கள்) எனப் பிரிக்கலாம். இதில் நூறில் ஒரு பங்கு (1/100) என்பது 108 ஆகும். நாம் 108 முறை தீவிர பக்தியுடன் ஜெபிப்பது, அன்றைய நாளின் ஒட்டுமொத்த சுவாசத்திற்கும் இறைவனுக்கு நன்றி கூறுவதற்கு சமமாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
141 ஆண்டுகள் வாழ்ந்த சித்தர்: சேலம் அப்பா பைத்தியம் சுவாமி அற்புத வரலாறு!
108 எண் - 108 number significance

பௌத்த மதத்திலும் 108 புனித எண்ணாகக் கருதப்படுகிறது‌. மனிதனின் மனதில் தோன்றும் 108 வகையான உலகியல் ஆசைகள் மற்றும் அசுத்தங்களை (Defilements) நீக்கி, மன அமைதியை அடையவே புத்த மதத்தினர் 108 மணிகள் கொண்ட ஜெபமாலையைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பு: ஜெபமாலையில் 108 மணிகளைத்தவிர, முடிச்சில் "மேரு மணி" அல்லது "குரு மணி" என்று ஒரு பெரிய மணி இருக்கும். ஜெபம் செய்யும்பொழுது இந்த மணியைத் தாண்டக்கூடாது. 108 முறையை முடித்துவிட்டு மீண்டும் ஜெபிக்க வேண்டுமானால் மாலையைத் திருப்பிப் பிடித்து தான் ஜெபிக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!
108 எண் - 108 number significance
logo
Kalki Online
kalkionline.com