நினைத்தாலே நற்பலன்களைத் தரக்கூடிய சிவபெருமான், தன்னை சிவ ஆகமப்படி பதினாறு வகைப் பொருட்களைக் கொண்டு லிங்க ரூபம் செய்து வழிபடுவதால் பல்வேறு சிறப்புப் பயன்களை தருவார் என ரிஷிகள் கூறியுள்ளனர் அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து பூஜித்தால் பூமி லாபம் பெறலாம்.
* புற்று மண்ணால் லிங்கம் செய்து வழிபட, முக்தி கிடைக்கும்.
*பச்சரிசியால் லிங்கம் செய்து வழிபட்டால் விரும்பிய பொருள் கைக்கு வந்து சேரும்.
* சந்தனத்தால் லிங்கம் செய்து வழிபட, அனைத்து இன்பங்களும் வந்து சேரும்.
* விபூதியில் லிங்கம் செய்து வழிபட, எல்லாவித செல்வங்களும் குவியும்.
* மலர் மாலைகளால் லிங்கம் செய்து வழிபட குறையாத வாழ்நாள் கிடைக்கும்.
* அரிசி மாவு கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட, உடல் வலிமை பெறும்.
* அன்னத்தால் சிவலிங்கம் செய்து வழிபட, உணவுப் பற்றாக்குறை நீங்கும்.
* பழங்களால் லிங்கம் செய்து வழிபட, இன்பகரமான வாழ்க்கை கிடைக்கும்.
* தயிர் கொண்டு லிங்கம் செய்து வழிபட, நற்குணத்தைப் பெறலாம்.
* தண்ணீரால் லிங்கம் செய்து வழிபட ஈசன் அனைத்தையும் மேன்மையாக்கிக் காட்டுவார்.
* முடிச்சிட்டு நாணலால் லிங்கத்தை வழிபட, முக்தி கிடைக்கும்.
* சர்க்கரை, வெல்லம் இவற்றால் லிங்கம் செய்து வழிபட, விரும்பிய வாழ்க்கையும் இன்பமும் கிடைக்கும்.
* பசுவின் சாணத்தால் லிங்கம் செய்து வழிபட, நோயற்ற வாழ்வு கிடைக்கும் .
* பசு வெண்ணையால் லிங்கம் செய்து வழிபட, மன மகிழ்ச்சி ஏற்படும்.
* ருத்ராட்சத்தால் லிங்கத்தை செய்து வழிபட, நல்ல அறிவு கிடைக்கும்.
இவை தவிர, மரகத லிங்கத்தை வழிபடுவதால் தீராத வியாதிகள் குணமடையும். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடியது. இது மட்டுமின்றி, வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற மரகத லிங்கத்தை வணங்குவதால் கிடைக்கும்.