குடும்பத்தில் சண்டை சச்சரவா? இந்த ஒரு விரதம் தம்பதியரை ஒன்று சேர்க்கும்!

கணவன் - மனைவி இடையே அன்பு பெருகவும், ஒற்றுமை அதிகரிக்கவும் இந்த ‘உமா மகேஸ்வர விரதம்’ அனுசரிக்கப்படுகிறது.
uma maheswara viratham
uma maheswara virathamAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

உமா மகேஸ்வர விரதம் என்பது கணவன் - மனைவி ஒற்றுமைக்காகவும், குடும்ப நல்வாழ்வுக்காகவும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வேண்டி அனுசரிக்கப்படும் முக்கியமான சிவ விரதங்களில் ஒன்றாகும்.

சோமவாரம், திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், பாசுத, அஷ்டமி, கேதார கவுரி, உமா மகேஸ்வர விரதம் ஆகிய எட்டு வகை விரதங்களும் சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்களாக கருதப்படுகின்றன. இதில் சிவ சக்தி தத்துவத்தை விளக்கும் விரதமாக உமா மகேஸ்வர விரதம் உள்ளது. ‘உமா’ என்பது பார்வதி தேவியையும், ‘மகேஸ்வரர்‘ எனபது சிவபெருமனையும் குறிக்கும்.

‘சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்பார்கள். சிவம் சக்தி இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்தால்தான் உலகம் இயங்கும் என்பதை உணர்த்தும் தத்துவமே இதுவாகும். அவ்வாறு சிவனும், சக்தியும் இணைந்த வடிவமே ‘உமா மகேஸ்வரர்’ வடிவம்.

ஆவணி மாதம் அல்லது புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி (பூர்ணிமா) நாளில் இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும். இந்த விரதத்தை முறையாக கடைபிடித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர், தம்பதிகள் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறையாகத் தொடங்கினால் தொடர்ந்து 16 ஆண்டுகள் வரை கடைப்பிடிக்க வேண்டும்.

ஆணகள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம்தேதி (சனிக்கிழமை) உமா மகேஸ்வர விரதம் அனுசரிக்கப்படுகிறது.

பௌர்ணமி தினத்தில் உமா மகேஸ்வர பூஜை செய்ய உகந்த நேரங்கள்:

திதி: பௌர்ணமி இரவு 10:19 மணி வரை உள்ளது.

காலை நேரம்: காலை 09:00 மணி முதல் காலை 10:30 மணி வரை

மாலை நேரம் (பிரதோஷ காலம் / பௌர்ணமி பூஜை): மாலை 04:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை (சிவ-பார்வதி வழிபாட்டிற்கு மாலை மற்றும் இரவு நேர பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது).

உமா மகேஸ்வர விரதம்
உமா மகேஸ்வர விரதம்AI image

ராகு காலம், எம கண்டம், குளிகை நேரங்களில் பூஜை செய்வதையோ அல்லது புதிய காரியங்கள் தொடங்குவதையோ தவிர்க்கவும்.

விரதம் இருப்பவர்கள், விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான உடையணிந்து சிவ - சக்தி தத்துவமான உமாமகேஸ்வரரை (சிவன் - பார்வதி) மனதாரநினைத்து சங்கல்பம் எடுக்கவேண்டும்.

முழு உபவாசம் (உணவு உட்கொள்ளாமல் பட்டினி இருத்தல்) அல்லது பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் பூஜை முடித்து உணவு அருந்தும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து பூஜைகள் செய்ய வேண்டும். உமா மகேஸ்வரர் சிலை அல்லது படத்திற்கு அல்லது சிலைக்கு சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்கவும்.

இதையும் படியுங்கள்:
மகா சிவராத்திரி: விரத முறைகள், பூஜை நேரங்கள், வழிபாட்டு விதிகள், தவிர்க்க வேண்டிய தவறுகள்!
uma maheswara viratham

தம்பதியராக அமர்ந்து, குடும்ப ஒற்றுமைக்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும் விரதத்தை தொடங்க சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். உமா மகேஸ்வர ஸ்தோத்திரம் அல்லது சிவபுராணம் படிப்பது நல்லது.

மாலை பௌர்ணமி நிலவு தோன்றும் நேரத்தில் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் தீபாராதனை காட்டி, விரதத்தை நிறைவு செய்து பிரசாதம் உட்கொள்ளலாம்.

ஒருவேளை சிலையை வத்து வழிபாடு செய்பவர்கள் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை சிவன் கோவிலுக்கு கொடுத்துவிட வேண்டும்.

முதலாம் ஆண்டு விரதம் அனுஷ்டிப்பவர்கள் மட்டும் நைவேத்தியமாக அதிரசம் படைப்பது மிகவும் விசேஷம். அடுத்தடுத்த வருடங்களில் சிவபெருமானுக்கு விருப்பமான நைவேத்தியத்தை படைத்து வழிபாடு செய்யலாம்.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், வழிபாடு முடிந்ததும் முதலில் ஏழைகளுக்கு உணவு அளித்த பின்னரே சாப்பிட வேண்டும்.

கணவன் - மனைவி இடையே அன்பு பெருகவும், ஒற்றுமை அதிகரிக்கவும் இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தேவசயனி ஏகாதசி 2026: மகாவிஷ்ணுவின் யோக நித்திரை! பஞ்சமும் வறுமையும் நீங்கும் அற்புத விரத முறை!
uma maheswara viratham

எவர் ஒருவர் இந்த விரதத்தை தொடர்ந்து 16 ஆண்டுகள் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

logo
Kalki Online
kalkionline.com