நாளை (டிசம்பர் 17) ஆண்டின் கடைசி பிரதோஷம்: வழிபாடும்... கிடைக்கும் பலன்களும்...

நாளைய தினம் (டிசம்பர் 17) இந்த ஆண்டின் கடைசி பிரதோஷம் மட்டுமின்றி முருகப்பெருமானுக்கு உகந்த விசாக நட்சத்திரமும் வருகிறது என்பதால் இந்த நாளை மறந்தும் கூட தவற விடாதீர்கள்.
lord murugan, sivaperuman
lord murugan, sivaperuman
Published on

நாளை (டிசம்பர் 17-ம் தேதி) புதன் கிழமை வரும் இந்த ஆண்டின் கடைசி பிரதோஷம் மட்டுமின்றி சக்தி வாய்ந்த பிரதோஷம் என்பதால் மறந்தும் கூட தவறவிடாதீர்கள்.

இது மார்கழி மாதத்தில் வரும் மிகவும் சக்தி வாய்ந்த சௌமியவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. பொதுமாக மார்கழி மாதம் தேவ மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள், தானங்கள் ஆகியவை பல மடங்கு புண்ணியத்தை தரும். மார்கழியில் வரும் பிரதோஷ வேளையில் சிவனானந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். மேலும் நாளை முருகனுக்கு உரிய விசாக நட்சத்திரமும் வருவதால் அன்றைய தினம் இன்னும் சிறப்பானது.

நாளைய தினம் நீங்க எந்த ஒரு செலவும் செய்யாமல் இந்த ஒரு விஷயத்தை மட்டும் சிவபெருமானுக்கு கொடுத்தால் உங்களுடைய வாழ்நாள் முழுவதும், மட்டுமல்ல நீங்க எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ஈசன் உங்கள் கூடவே இருப்பார்.

ஒவ்வொரு பிரதோஷ பூஜையும் சூரியன் மறைவதற்கு முன்னாடி ஒன்றரை மணி நேரத்துல நடக்கும். அதாவது மாலை 4.45ல் இருந்து 6.15 வரை உள்ள நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வது மினி யாகம் நடத்துவதற்கு சமமானது என்பது ஐதீகம். அதை சந்தியா கால பூஜை என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் எந்த ஒரு பக்தர்கள் மனமுறுகி பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுக்கு சிவசக்தியோட அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மட்டுமே உரித்தான சிறப்புகள்!
lord murugan, sivaperuman

நீங்க மாதந்தோறும் பிரதோஷ நாட்களில் ஈசனை தவறாமல் மனமுருகி வணங்கும் போது உங்களுடைய போன ஜென்ம கர்மா மற்றும் இந்த ஜென்மத்தோட கர்மாவையும் படிப்படியாக ஈசன் குறைத்துக்கொண்டே வருவார் என்பது ஐதீகம்.

தீய சக்திகள் எதுவும் உங்களிடம் நெருங்க விடாமல் உங்களுடைய மனதிற்கு ஒரு அமைதியை கொடுத்து உங்க குடும்பத்தை சந்தோஷமாக வழிநடத்தி கூட்டிட்டு போவாரு. மார்கழி மாத பிரதோஷம் அன்று விரதம் மேற்கொண்டால் நோய் நீங்கும். கடன் தொல்லை குறையும். புத்திர பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் 16 வகையான செல்வங்கள் கிடைக்கும். பிரதோஷ நாளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் மனதார வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

இந்த சிறப்பு வாய்ந்த நாளில் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடக்கும் அபிஷேகத்திற்கு நீங்கள் பால் வாங்கிக் கொடுத்தால் உங்களது வாழ்க்கையில் இனி நீங்கள் என்ன செய்தாலும் வெற்றி நிச்சயம்.

அதேபோல் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு அபிஷேக பொருட்களை கொடுத்து சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் நிச்சயம் நம்முடைய பாவங்கள் விலகி நமக்கு ஒரு நல்ல யோகம் உண்டாகும்.

அதனால் அனைவரும் மறக்காமல் நாளைய தினம் (டிசம்பர் 17-ம்தேதி) சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபாடு செய்து நல்ல மாற்றங்களை பெறலாம். நாளைய தினம் முருகப்பெருமானுக்கு 6 நெய் தீபம் ஏற்றி, செவ்வளரி பூ சாற்றி வழிபாடு செய்தால் தடைகள் அனைத்து தவிடுபொடியாகும்.

தொழிலில் முடக்கம், படிப்பில் மந்தம், கழுத்தை நெறிக்கும் கடன், இது எல்லாவற்றையும் தகர்தெறியும் சக்தி மார்கழி மாத பிரதோஷ நாளுக்கு உண்டு. சரியாக மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் சிவன் கோவிலில் இருக்கும் நந்தி காதில் உங்களுடைய குறையை சொல்லி பாருங்க. நந்தியும் சிவனும் சேர்ந்து உங்களுடைய விதியையே மாத்துவாங்க. நம்பிக்கையோடு வணங்குங்க. தடைகள் எல்லாம் தவிடுபொடியாக மாறும்.

நாளைய தினம் வரும் குளிகை நேரத்தில் சிவபெருமானுக்கு உப்பு தீபம் ஏற்றினால் உப்பை போல் உங்களது பாவங்களும் கரைந்து போகும். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். ஒரு அகல் விளக்கில் கல்உப்பை போட்டுக்கொண்டு அதன் மேல் இன்னொரு அகல் விளக்கு வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி ஐந்து பிரதோஷம் செய்தால் அது 12 பிரதோஷத்திற்கு செய்ததற்கு சமமாகும். நாளைய தினம் காலை 10 மணி முதல் 12.30 வரை குளிகை நேரமாகும்.

இதையும் படியுங்கள்:
பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போடுவதன் காரணம் என்ன தெரியுமா?
lord murugan, sivaperuman

நாளை தினம் மறக்காமல் சிவபெருமானையும், அவரது புதல்வன் முருகனையும் வழிபாடு செய்து சகல சௌபாக்கியத்தையும் கொண்டு வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com