மகாபாரதப் போருக்கு காரணமான 4 பெண்கள்!

Mahabharata Kurukshetra War
Mahabharata Kurukshetra War
Published on

மகாபாரதப் போருக்கு மூல காரணமே சில பெண்கள் தான். அவர்கள் நினைத்திருந்தால் பாரதப்போரை தடுத்து இருக்கலாம்.

Mahabharata Satyavati, draupadi, Kunti, Gandhari
Mahabharata Satyavati, draupadi, Kunti, Gandhari

முதலாவது சத்தியவதி:

சத்யவதி தன் பேராசையின் காரணமாக அதர்மத்தை கடைபிடித்தது போருக்கு முக்கியமானது.ராஜா சந்தனுவுக்கும் கங்கா தேவிக்கும் முதலில் திருமணம் நடந்து தேவவிரதன் (பீஷ்மர்) என்ற மகன் அரியனைக்கு காத்திருந்தான். இந்நிலையில் படகோட்டும் மீனவப்பெண் சத்தியவதியின் மீது சாந்தனு காதல் கொண்டான்.சத்தியவதியோ சாந்தனுவை மணக்க "தனக்கு பிறக்கும் வாரிசுகள் மட்டுமே ஹஸ்தினாபுரத்தை அரசாள வேண்டும்.கங்கையின் மகன் அரச பதவி ஏற்காமல் இறுதிவரை பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டும்" என்று ஒரு நிபந்தனை விதித்தாள்.அதை தேவவிரதன் ஏற்றுக் கொண்டு தனது தந்தையின் திருமணத்திற்கு சம்மதித்தான்.

சத்தியவதிக்கு பிறந்த இரு மகன்களும் அரச பதவியடையும் தகுதி இல்லாமல் இருந்தனர்.முதல் மகன் சித்திராங்கதன் இறக்க இரண்டாவது மகன் விசித்திரவீரியன் அரசனானான். அம்பிகா,அம்பாலிகா என இரு பெண்களை மணந்தாலும் கருவுறும் முன்பே விசித்திரவீரியன் இறந்து விட்டான்.இந்த நிலையில் தர்மப்படி சத்தியவதி தேவவிரதனை அரசாள சொல்லி இருக்கலாம்.ஆனால் ,அவள் தன் குலம் தான் அரசாள வேண்டும் என்ற பேராசையை விட வில்லை.

மருத்துவத்தில் வல்லமைப் பெற்ற வியாசர் மூலம் இறந்த விசித்திரவீரியனின் விந்தனுக்களை பாதுகாத்து அரசிகளின் கருப்பையில் செலுத்தி கருவுற வைத்தார்.செயற்கை கருவூட்டல் முறையை 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வியாசர் அறிந்திருந்தார்.அதில் பிறந்த இரு மகன்கள் தான் திருதாஷ்டிரனும் பாண்டுவும்.அரசாள தகுதி பெற்றிருந்தாலும் திருதாஷ்டிரனின் பேராசையால் பாண்டு வனவாசம் புகுந்தான்.சத்தியவதி திருதராஷ்டிரன் பேராசையை தடுக்கவில்லை.இதுவே பாரதப் போரின் மூலக் காரணம்.

இதையும் படியுங்கள்:
களேபரமான யுத்த பூமியில் உபதேசம் சாத்தியமா? அப்போ கீதோபதேசம்...?
Mahabharata Kurukshetra War

இரண்டாவது காரணம் திரெளபதி:

பாரத போருக்கு மூல காரணமே திரவுபதி மீதான வன்மம் தான்.திரவுபதி ஒரு முறை துரியோதனனை "உன் தந்தை போல நீயும் பார்வையற்றவனோ ? என்று ஏளனம் செய்தாள்.அதற்கு மோசமான முறையில் பழிவாங்க துரியோதனன் எண்ணினான். சந்தர்ப்பம் கிடைத்ததும் சபையில் துகிலுரிய ஆணையிட்டான்.தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க போர் மட்டுமே தீர்வு என்று எண்ணினாள் திரவுபதி.கிருஷ்ணர் சமாதானம் செய்ய முயற்சி செய்தாலும் திரவுபதியின் சபதப்படி அனைத்து கெளரவர்களையும் கொன்று துரியோதனனின் தொடையை பிளந்து அந்த இரத்தத்தில் தன் கூந்தலை அள்ளி முடிய வேண்டும்.

மூன்றாவது காரணம் குந்திதேவி:

பாண்டவர்களின் தாயான குந்தியும் மகாபாரதப் போருக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்.பாண்டு அரச பதவியை திருதராஷ்டிரனிடம் விட்டு கொடுத்து குந்தி மற்றும் மாத்ரியுடன் வனவாசம் வந்தான்.பாண்டுவும் மாத்ரியும் இறந்த பிறகு, அவள் பாண்டவர்களுடன் வனத்தில் இல்லாமல் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து அரண்மனையில் தங்கினாள்.தனக்கு தான் ராஜ்ஜியம் என்று துரியோதனன் நினைக்கையில் போட்டியாக பாண்டவர்கள் வந்தது சிறு வயதிலேயே அவன் மனதில் விஷத்தை வளர்த்தது.

இதையும் படியுங்கள்:
கர்ணனும் கிருஷ்ணரும் - வருத்தமும் உபதேசமும்!
Mahabharata Kurukshetra War

நான்காவது காரணமான காந்தாரி:

குந்திக்கு 3 மக்களும் மாத்திரிக்கு 2 மக்களும் பிறந்த விஷயம் கேட்டு காந்தாரி தன் வயிற்றில் துடைப்பத்தால் அடித்துக் கொண்டாள். இதனால் அவள் கரு 100 துண்டங்களாக உடைந்தது.அந்த துண்டங்களை குடுவையில் இட்டு வளர்த்து உயிர் கொடுத்தனர்.அந்த 100 பேரும் பாண்டவர்கள் மீது பொறாமை கொண்டனர்.காந்தாரி கவுரவர்களை நல்வழிப் படுத்தாமல் விட்டு விட்டாள். காந்தாரிக்கு தன் கணவன் அரச பதவிக்கு தகுதி இல்லாதவன் என்பதும் , மூத்தவன் என்ற முறையில் பாண்டவர்களில் முதல்வனான தர்மனையே அரசனாக்கி இருக்க வேண்டும் என்பது தெரிந்தாலும் அரச பதவியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. திரவுபதி துகிலிரியப்படும் போது பெண் என்ற முறையில் காந்தாரி அதை தடுத்திருக்க வேண்டும்.தடுக்காததன் விளைவு தன் மக்களை இழந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com