சகுன சாஸ்திரம்: பூ விழுதல் முதல் பல்லி சத்தம் வரை... ஆன்மீக அறிகுறிகள்; பலன்கள்!

கோவிலில் வழிபாடு செய்யும்போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஒரு செயலைத் தொடங்கும் முன் மன தைரியத்தையும், நேர்மறை ஆற்றலையும் தருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
women worship in temple
women worship in templeAI Image
Published on

நம்மில் பலர் எந்த நல்ல காரியம் ஆரம்பிப்பதற்கு முன்பும், அன்றாட நிகழ்விற்கும் சகுனம் பார்ப்பதை பழக்கமாகக் கொண்டிருப்பர். அந்த வகையில் திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், வேலை கிடைக்க வேண்டும் என்பது போன்ற வேண்டுதல்களை மனதில் நினைத்துக்கொண்டு அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைத்துகொண்டு நமக்கு மிகவும் பிடித்த கோவிலில் இறைவனை வழிபட செல்வோம். அப்படி சென்று கோவிலில் இறைவன் சன்னதியில் அமர்ந்து மனமுருகி வேண்டிக்கொண்டிருப்போம். கோவிலில் தீப ஆராதனை செய்யும்போது கண்களை மூடிக்கொள்ளக்கூடாது கண்களை திறந்து கடவுளை காணவேண்டும். பிறகு தான் உங்கள் வேண்டுதல்களை கடவுளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அப்படி மனதில் நம் வேண்டுதலை நினைத்து மனமுருகி இறைவனை வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் (நல்ல சகுனங்கள்) நடந்தால் நம் வேண்டுதல் நிச்சயம் நடக்கும் என்றும், நம் கோரிக்கையை இறைவன் ஏற்றுக்கொண்டார் என்றும் அது விரைவில் நிறைவேறும் என்று அர்த்தம். இந்த அறிகுறிகள் ஒரு செயலைத் தொடங்கும் முன் மன தைரியத்தையும், நேர்மறை ஆற்றலையும் தருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
பரிகாரம் பலிக்குமா? பலிக்காதா? தெரிந்துகொள்ள இந்த 12 சகுனங்களே போதும்!
women worship in temple

பூ விழுதல் :

கோவிலில் சாமி சன்னதியில், குறிப்பாக ஆராதனை நடக்கும் போது, சாமி சிலையிலிருந்து பூ கீழே விழுவது மிகவும் மங்களகரமான மற்றும் தெய்வீக அறிகுறியாகக் கருதப்படுகிறது. இது கடவுளின் ஆசி, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதற்கான நேர்மறையான அறிகுறியாகும். பூக்கள் விழுவது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு கடவுள் பதிலளிக்கிறார் என்பதை உணர்த்துகிறது. சாமி சிலையின் வலது பக்கத்தில் பூ விழுந்தால், அது மிகவும் சிறப்பான அறிகுறியாகவும், கடவுளின் முழு சம்மதம் (உத்தரவு) கிடைத்து விட்டது என்றும் விரைவில் காரியம் ஜெயமாகும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல் இடது பக்கம் விழுந்தாலும் அதுவும் ஒரு நல்ல அறிகுறியே, கவலைப்பட வேண்டியதில்லை.

மணி ஓசை :

கோவிலில் இறைவனிடம் நாம் வேண்டிக்கொண்டிருக்கும் அதே நொடியில் மணி ஓசை கேட்டால், எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாகவும், இறைவனிடம் நம் கோரிக்கைக்கு அனுமதி கிடைத்து விட்டாதாகவும் ‘ததாஸ்து’ (அப்படியே ஆகட்டும்) என்று இறைவன் உத்தரவு கொடுத்து விட்டதாகவும் அர்த்தம்.

குழந்தை சிரிப்பு :

ஆலயத்தில் அல்லது வெளியில் சாமி கும்மிடும்போது முன்பின் தெரியாத குழந்தை உங்களை பார்த்து சிரித்தால், அல்லது பச்சிளம் குழந்தை அழுதால் அது இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து விட்டதாக கருதி உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்று அர்த்தம்.

தீப பிரகாசம் :

கோவிலில் நம் வேண்டுதலை நினைத்து சாமி கும்மிடும் போது கற்பகிரகத்தில் காற்று இல்லாத போது தீபம் திடீரென ‘பளிச்சென’ எரிந்தால், உங்களது வேண்டுதல் இறைவனால் ஏற்கப்பட்டது என்று அர்த்தம்.

பல்லி சத்தம் :

சாமி சன்னதி, பூஜை அறை அல்லது நல்ல காரியங்களைப் பேசும்போது பல்லி சத்தமிடுவது மிகவும் மங்களகரமான, சுப சகுனமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் கோவிலில் அல்லது வீட்டில் கடவுளிடம் உங்கள் வேண்டுதலை சொல்லி முறையிடும்போது கர்ப்பகிரக திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் (கவுளி)அது நல்ல சகுனம். இது உங்கள் வேண்டுதல்கள், கோரிக்கைகள் நிறைவேறும் என்பதற்கான அறிகுறியாகும். நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்று அர்த்தம். பெரும்பாலும், பல்லி சத்தம் பேசுவதை உறுதிப்படுத்தும் அல்லது நல்ல செய்தியை முன்னறிவிக்கும் ஒரு தெய்வீக செய்தியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சகுனங்கள் மூலம் நம் காரியத்தில் வெற்றி கிடைக்குமா?
women worship in temple

பல்லி சத்தம் போடும் நேரம், நாள், திசை மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் பலன்கள் மாறுபடும், இருப்பினும் பொதுவாக இது ஒரு நேர்மறையான அறிகுறியாகவே கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com