பரிகாரம் பலிக்குமா? பலிக்காதா? தெரிந்துகொள்ள இந்த 12 சகுனங்களே போதும்!
ஜாதகத்தில் தோஷங்கள் ஏதேனும் இருந்தால், அந்த தோஷம் நீங்குவதற்காக பலரும் ஜோதிடரை வைத்து பரிகாரம் செய்வார்கள். அவ்வாறு தோஷங்கள் நீங்குவதற்காக பரிகாரங்கள் செய்து கொண்டிருக்கும்போது தோன்றும் சகுனங்களை வைத்து, செய்யும் பரிகாரம் உங்களுக்குப் பலன் தருமா? தராதா? என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.
பரிகாரம் செய்துகொண்டிருக்கும் சமயத்தில் ஏதாவது சகுனங்கள் தோன்றுகிறதா என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சகுனங்கள் பார்த்து கூறப்படும் பரிகாரங்கள் நிச்சயமாகப் பலன் தரும். எனவே, பரிகாரம் சம்பந்தமான சகுனங்களை இந்தப் பதிவில் காண்போம்.
* பரிகாரங்களைச் செய்யும்போது கோயில் மணியோ அல்லது பூஜை மணியோ ஒலிப்பதைக் கேட்க நேர்ந்தால் உங்கள் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.
* அதுபோன்ற சமயம்தில் யாராவது கோயில் பிரசாதம் கொண்டு வந்து உங்களுக்குக் கொடுத்தால் நீங்கள் செய்யும் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.
* மந்திர ஒலி அல்லது பக்திப் பாடல்களைக் கேட்க நேர்ந்தால் உங்கள் பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.
* பரிகாரம் செய்யும்போது கோயில் அர்ச்சகர் அங்கே வரக்கண்டால் நீங்கள் செய்யும் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.
* அதேபோல், பரிகாரம் செய்கையில் யாராவது ஒருவர் குளித்துவிட்டு வருவதைக் கண்டால் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.
* பரிகாரம் செய்யும்போது எந்த தெய்வத்தின் படம் அல்லது உருவம் உங்கள் கண்ணில் படுகிறதோ அந்த தெய்வத்தை வணங்கி வர, பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.
* யாராவது ஒருவர் ஒரு கோயிலைப் பற்றியோ, ஒரு தெய்வத்தைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாலோ, ஒரு தெய்வத்தின் பெயரை உச்சரிப்பதைக் கேட்டாலோ, அந்தக் கோயில் அல்லது அந்த தெய்வத்தை நீங்கள் வழிபட பரிகாரம் பலன் தரும்.
* பரிகாரம் செய்து கொண்டிருக்கையில் யாராவது வந்து உங்களிடம் யாசகம் கேட்டாலோ அல்லது யாசகரைக் காண நேர்ந்தாலோ, தான தர்மங்கள் செய்வதன் மூலம் பரிகார நிவர்த்தி உண்டாகும்.
* பரிகாரம் செய்கையில் துணி வெளுப்பவரையோ அல்லது துணிமணிகளை கஞ்சிப்போட்டு தேய்க்கும் பெண்ணையோ காண நேர்ந்தாலோ அல்லது அதுபோன்றவர் குரலைக் கேட்க நேர்ந்தாலோ வஸ்திர தானம் செய்வதன் மூலம் பரிகார நிவர்த்தி ஏற்படும்.
* அதுபோன்ற சமயங்களில் யாராவது வந்து, என்ன பொருள் வேண்டும் என்று கேட்கிறார்களோ, அந்தப் பொருளை தானம் செய்ய நீங்கள் செய்யும் பரிகாரத்துக்கான நிவர்த்தி உண்டாகும். அவர்கள் கேட்கும் பொருள் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அப்பொருள் போன்ற பிரதிமையை தானம் செய்யலாம்.
* பரிகாரம் செய்து கொண்டிருக்கும்போது யாராவது தலைமுடியில் சிக்கு நீக்குவதைக் கண்டால் உங்கள் பரிகாரம் தங்கு தடையின்றி நிறைவேறும்.