5 வகை ஸ்நானங்களும், அதன் சிறப்புகளும்!

Bath
Bath
Published on

தினமும் காலை, மாலை என இரு வேளை குளிப்பது அவசியம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. உடல் சுத்தத்தைப் போலவே மன சுத்தமும் அவசியம் என்கிறது ஆன்மீகம். நீராடுதல் எனும் ஸ்ரான வகைகள் ஐந்து என்று காஞ்சி மகா பெரியவர் கூறியுள்ளார்.

உடலை நீர் எவ்வாறு சுத்தப்படுத்துகிறேதோ அவ்வாறே பகவானின் திருநாமங்களை ஜெபிக்கும்போது நம் ஆன்மாவும் சுத்தமாகிறது என்பது ஆன்றோர்கள் வாக்கு.

5 வகை ஸ்நானங்கள் எது என்று பார்ப்போம்!

1. வாருணம் ஸ்நானம்:

வாருணம் என்பது முதல் வகை ஸ்நானம். நாம் அன்றாடம் நீரில் குளிப்பதுதான் வருணம். ஆனால் நதியிலோ, குளத்திலோ மூழ்கி குளிப்பதுதான் நல்லது என்கிறது சாஸ்திரம்.

2. கெளணம் ஸ்நானம்:

கௌணம் என்றால் தலையில் நீர் படாமல் குளிப்பது 2 வது வகை ஸ்நானம். இது விபூதி ஸ்நானம் எனப்படுகிறது. நோயுற்றவர்கள், நீர் படக்கூடாத அளவுக்கு காயம் பட்டவர்கள் எல்லாம் விபூதியை எடுத்து பூசிக் கொள்வதே விபூதி ஸ்நானம்.

3. வாயவ்யம் ஸ்நானம்:

வாயுவினால் எழும் புனித தூசுக்களால் செய்வதால் வாயவ்யம் மூன்றாவது ஸ்நானம். பசுக்களின் குளம்படியிலிருந்து எழும் மண் நம்மீது படுவதே வாயவ்யம் எனும் ஸ்நானம்.

4. திவ்ய ஸ்நானம்:

வானமுதம் எனப்படும் மழை வெயிலோடு சேர்ந்து பெய்யும் போது எடுக்கப்படும் ஸ்நானம் திவ்யஸ்நானம். இது 4வது ஸ்நானம்.

5. ப்ராஹ்ம ஸ்நானம்:

ஹோமங்கள், குடமுழுக்கு போன்ற புனித காரியங்கள் முடிந்த பிறகு புரோகிதர்கள் நம் மீது தெளிக்கும் மந்திர நீர். இது நம் மீது பட்டு சுத்தமிபத சுத்தமாவேதே ப்ராஹ்ம ஸ்நானம் எனப்படும். இது 5 வது ஸ்நானம் ஆகும். சுத்தமான ஒருவன் மன சுத்தியோடு இறைவனை வேண்டினால் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

மகாமக குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் மகாமக தீர்த்தவாரியில் நீராடினால் நம் பாவங்களை போக்கி உடல் நலன், மன நலன் வாழ்வில் நல்ல முறையில் பலன் கிடைக்கும்.

மாசி மகத்தன்று ஆறு, நதி, கடலில் குளித்து நம் பாவங்களை போக்க இறைவனை வேண்டுவோம்.

இதையும் படியுங்கள்:
மண் குளியல் செய்வதால் இத்தனை நன்மைகளா?
Bath

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com