கடையேழு வள்ளல்கள்: தமிழகம் ஈன்றெடுத்த ஈகைத் திருநாட்கள்!

Aanmeega katturai..
Aanmeega katturai..
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on: 

கொற்றவர்கள் பலர் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக் கிறார்கள். இவர்களில் மக்கள் மனதில் நின்ற கொடையாளிகள் ஏழே ஏழே பேர்கள். அவர்களை இங்கு நினைவு கூர்வோம்.

வள்ளல் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருபவர் பாரி வள்ளல்தான். அவர் எவ்வளவோ தான தர்மம் செய்துள்ளார். அப்படி அவர் செய்த தங்களில் தலையாக நின்றது அவர் படர முடியாமல் பாதையில் தவித்த ஒரு முல்லை கொடிக்கு தனது தேரையே அளித்ததுதான். அவரது வள்ளல் வாழ்க்கையில் இந்த தானம்தான் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

பாரிக்கு பின் வருபவர் பேகன். பாரி முல்லைக்கு அதாவது ஒரு தாவரத்திற்கு தயை காட்டி தன் தேரையே கொடுத்தார் என்றால் வள்ளல் பேகனோ ஒரு பறவைக்கு தன் போர்வையையே போர்த்தினார்.

பேகன் ஒரு காட்டினை கடந்து போகையில் ஒரு மயில் தன தோகையை விரித்தவாறு நின்றுகொண்டிருந்தது. மயிலுக்கு தோகையை விரிக்கும் பொது அதன் உடலில் ஒருவித உதறல் உண்டாகும். அதை பார்த்த வள்ளல் பேகன் அது குளிரில் நடுங்குவதாக நினைத்து மனமிரங்கி தன் விலை உயர்ந்த அங்க வஸ்திரத்தை அதற்கு போர்த்தி ஆறுதல் அடைந்தார். இந்த அவர் செயலை இன்றும் தமிழ் மக்கள் ஞாபகம் வைத்து பாராட்டி கொண்டிருக்கின்றனர்.

அடுத்து வள்ளல் காரி. இவர் தன்னை நாடி வந்தவர்களுக்கு குதிரைகளை பரிசாக அளித்து அசத்தினார். அந்த காலத்தில் குதிரைகள் மதிப்பு இப்போது கார்களின் மதிப்பைவிட அதிகம். உண்மையிலேயே பெரிய மனது படைத்த கொடையாளிகள் தான் குதிரை தானம் செய்யமுடியும்.

இதையும் படியுங்கள்:
வட திருநள்ளார் என்று அழைக்கப்படும் பொழிச்சலூர் சனி பகவான் திருத்தலம்!
Aanmeega katturai..

நான்காவதாக வரும் ஆய் என்ற வள்ளல் தன்னிடம் யாசகம் கேட்டு வருபவருக்கு ஊர்களையே பரிசாக அளித்தார். இவரே வள்ளல்களில் மிகவும் விசாலமான தாராள மனம் கொண்ட மன்னன் என்று பெயரெடுத்ததில் ஆச்சரியம் இல்லை. கேட்டு வருபவர்களுக்கு தங்கம் கொடுக்கலாம். சிறிது நிலம் கொடுக்கலாம். ஊரையே கொடுப்பது என்பது சாமானிய காரியமா..?

அடுத்து அதியமான். இவர் தனக்கு கிடைத்த சாகா வரம் அருளும் நெல்லிக்கனியை அவ்வையாருக்கு தானமாக அளித்து மக்கள் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தை பிடித்துவிட்டார். பணம் நிலம் பொன் போன்றவை யெல்லாம் நிரந்தரம் இல்லை. ஆனால் சாகா வரம் என்பது விலை மதிப்பற்றது. அதை மற்றவருக்கு தூக்கி கொடுக்க யாருக்கு மனம் வரும். அதியமான் வள்ளல் களுள் அதிசயமானவர்தான் சந்தேகமே இல்லை.

ஆறாவதாக வருபவர் நள்ளி தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும் வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு உடையவர் நள்ளி.

கடைசியாக வள்ளல் ஓரியை பற்றி பாப்போம். ஓரி என்று அழைக்கப்பட்ட சிறந்த வில்லாளராக திகழ்ந்த இவர், வாரி வாரி வழங்குவதில் இன்னொரு பாரியாக பெயர் பெற்றார். பாரிக்கு நிகர் ஓரி என்றும் மன்னன் அல்ல ஓரி மாரி என்றும் புகழப்பட்டார்.

ஒரு பொருளை தானமாக கொடுப்பது என்பது ஒரு தெய்வீக தன்மையாகும். அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்களை சமுதாயம் மறக்கவே கூடாது.

logo
Kalki Online
kalkionline.com