

சித்திரை மாதம் (ஏப்ரல்-மே) தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகளை கொண்ட ஒரு மாதமாகும். தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்துள்ளது. 31 நாட்கள் கொண்ட சித்திரை மாதம், ஏப்ரல் 14ம்தேதி தொடங்கி, மே 14ம்தேதி வரை உள்ளது. மதுரை சித்திரை திருவிழா, தமிழ் புத்தாண்டு, கூவாகம் திருவிழா போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கிய திருவிழாக்களின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்...
ஏப்ரல் 14-ம்தேதி - சித்திரை முதல் நாள், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.
ஏப்ரல் 15-ம்தேதி - பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி இணைந்து வருவதால், சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்
ஏப்ரல் 17-ம்தேதி - அமாவாசை, சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்,
ஏப்ரல் 19-ம்தேதி - கிருத்திகை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம், அட்சய திரிதியை, விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராம ஜெயந்தி, சமயபுரம் மாரியம்மன் ரதோற்சவம்.
ஏப்ரல் 21-ம்தேதி - ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி, திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம், சமயபுரம் மாரியம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடு.
ஏப்ரல் 22-ம்தேதி - சஷ்டி, திருமலை திருப்பதியில் ராமானுஜரின் சிறப்பு விழாவான பாஷ்யகர்ல சாத்துமுறை, இமயமலையில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் நடை திறப்பு.
ஏப்ரல் 23-ம்தேதி - திருக்கடையூர் அபிராமி அம்மன் அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாணம், வாஸ்து செய்ய உகந்த நாள் (காலை 08.54 முதல் 09.30 வரை), தேவநாதசுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்,
ஏப்ரல் 26-ம்தேதி - ஸ்ரீ வாசவி ஜெயந்தி, மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருகோவிலில் எமன் காலசம்ஹாரம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 27-ம்தேதி - ஏகாதசி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திக்விஜயம்
ஏப்ரல் 28-ம்தேதி - மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகளுக்க தாலி கட்டும் நிகழ்ச்சி.
ஏப்ரல் 29-ம்தேதி - பிரதோஷம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம், கள்ளழகர் தங்க பல்லக்கு புறப்பாடு, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்.
ஏப்ரல் 30-ம்தேதி - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு, மதுரை எல்லையில் கள்ளழகரை வரவேற்கும் 'எதிர்சேவை' நிகழ்வு, நரசிம்மர் ஜெயந்தி,
மே 1-ந்தேதி - கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தரும் வைபவம், சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தங்கத்தேரோட்டம், திருப்பதி கீழப்பட்டலா கோனேட்டிராயசாமி கோவிலில் தேரோட்டம்,
மே 2-ம்தேதி - ராமராயர் மண்டபத்தில் இரவு முழுவதும் தசாவதாரக் காட்சி, திருப்பதி கீழப்பட்டலா கோனேட்டிராயசாமிக்கு சக்கர ஸ்நானம்,
மே 3-ம்தேதி - திருப்பதி கீழப்பட்டலா கோனேட்டிராயசாமிக்கு புஷ்ய யாகம்,
மே 4-ந்தேதி - அக்னி நட்சத்திரம் ஆரம்பம், புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருமாலிருஞ்சோலை புறப்பாடு
மே 5-ம்தேதி - கள்ளழகர் திருமாலிருஞ்சோலை வந்து சேருதல், சங்கடஹர சதுர்த்தி
மே 7-ம்தேதி - சஷ்டி
மே 11-ம்தேதி - திருநாவுக்கரசர் குருபூஜை
மே 13-ம்தேதி - ஏகாதசி, திருநள்ளாறு கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்