குருப்பெயர்ச்சி விழா: ஆலங்குடி, குருவித்துறையில் நாளை முதல் லட்சார்ச்சனை தொடக்கம்!

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மற்றும் குருவித்துறை கோவில்களில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நாளை முதல் லட்சார்ச்சனை தொடங்குகிறது.
gurupeyarchi
gurupeyarchiAI Image
Updated on

லங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மற்றும் குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நாளை (மே 26-ம்தேதி) முதல் லட்சார்ச்சனை நடக்கிறது.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது நடைபெறும் ஆன்மீக நிகழ்வே குருப்பெயர்ச்சியாகும். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி நாளை (மே 26-ம்தேதி) நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு குரு பகவான் நாளை (மே 26-ம் தேதி) பகல் 11.08 மணிக்கு மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு முக்கிய குரு ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடுகளும், லட்சார்ச்சனை விழாக்களும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் ஆவர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ளது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில். நவக் கிரகங்களில் குருபகவானுக்குரிய தலமான இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருப்பெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
குரு புஷ்ய யோகம்: தங்கம், நிலம், புதிய தொழில், குபேர லட்சுமி பூஜைக்கு உகந்த அற்புத யோக காலம்!
gurupeyarchi

இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (மே 26-ம்தேதி) செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

அன்று காலை 11 மணி அளவில் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதையொட்டி இந்த விழா நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 10 மணி அளவில் குரு பகவானுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வரும் 28-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 8 நாட்கள் லட்சார்ச்சனை விழா நடக்கிறது.

அதேபோல் குரு பகவானுக்கு உகந்த கோவிலான குருவித்துறை கோவிலில் குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிகழ்வை முன்னிட்டு 3 நாட்கள் சிறப்பு குருபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் தமிழகத்தில் குருபகவானுக்கான பரிகார ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக கருதப்படுகிறது. இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். ஒவ்வொரு குருப்பெயர்ச்சி அன்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக 3 நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குரு பகவானை தரிசித்து செல்வார்கள். அதன்படி இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு 24-ம்தேதி காலை 9.30 மணி அளவில் லட்சார்ச்சனை விழா தொடங்கி 26-ம்தேதி காலை 9 மணி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

குருப்பெயர்ச்சி அன்று காலை 10 மணி அளவில் பரிகார மகாயாகம், பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
கிரகதோஷப் பரிகாரக் கோயில்கள் - 5: குரு (வியாழன்) அருள் பெற... ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்!
gurupeyarchi

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றம் பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com