
கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்து கடவுளை வழிப்படுவது சிறப்பாகும். அவ்வாறு வழிப்படும் போது ஒரு சில குறிப்பிட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவது குறிப்பிட்ட பலன்களை தரும். அதுப்போலவே கோவிலுக்கு சென்று சில குறிப்பிட்ட பழங்களை கொடுப்பது நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது.
1.வாழைப்பழம்.
தெய்வத்திற்கு வாழைப்பழம் வைத்து வழிப்படுவதால், அஷ்ட ஐஸ்வர்யங்கள், தீர்க்க ஆயுள், நோய்நொடி இல்லாத வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
2. மாதுளைப்பழம்.
மாதுளை மனதிற்கு புத்துணர்ச்சியை தரக்கூடிய பழமாகும். இதை தெய்வத்திற்கு படைத்து வழிப்படும் போது வெற்றிக் கிடைக்கும். பெண் தெய்வங்களுக்கு மாதுளைப்பழம் வைத்து வழிப்படும் போது மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.
3.ஆரஞ்சு பழம்.
ஆரஞ்சு பழத்தை தெய்வத்திற்கு வைத்து வழிப்பட்டால், வீட்டில் மங்கலம் நிறையும், தாலி பாக்கியம் பலப்படும், மாங்கல்ய தோஷம் விலகும். இதனால் திருமண தடை விலகி சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும் என்று சொல்லப்படுகிறது.
4.எழுமிச்சைப்பழம்.
நம் முன்னோர்களால் ‘தெய்வீக கனி’ என்று அழைக்கப்பட்ட எழுமிச்சைப்பழத்தின் வாசம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே துஷ்டசக்திகளின் நடமாட்டம் இருக்காது. மங்களகரமான விஷயங்கள் நடைப்பெறும், புத்திர தோஷம், திருமணத்தடை நீங்கும்.
5.பச்சை திராட்சை.
பச்சை திராட்சையை கோவிலுக்கு நைவேத்தியமாக கொடுத்தால், வாழ்வு பசுமையாக மாறும், வாழ்வில் சந்தோஷம் பெருகும், செல்வவளம் அதிகரிக்கும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
6.அன்னாசிப்பழம்.
அன்னாசிப்பழத்தை கடவுளுக்கு வைத்து வழிப்பட்டால், அதிர்ஷ்டம், புகழ் கிடைக்கும். நல்ல விஷயங்கள் வாழ்வில் நடக்கும்.
சுபகாரியத்திற்கு செல்லும் போதும், காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் போதும், மூன்று எழுமிச்சை பழத்தை அம்மன் கோவில் வாசலில் இருக்கும் திரிசூலத்தில் குத்திவிட்டு வேண்டிக்கொண்டு செல்லும் போது நிச்சயம் வெற்றிக்கிட்டும். இனி கோவிலுக்கு சென்று கடவுளை தரிசிக்கும் போது இதுப்போன்ற பழங்களை கொடுத்து அதன் பலனை முழுமையாக பெறுங்கள்.