அம்மனுக்கு பச்சை நிற சேலை நேர்த்திக்கடன்: சிலம்பும் உடுக்கையும் ஒலிக்கும் விநோத பூஜை!

Amazing Amman Temples
Mandaikadu Bhagavathi Amman, Ther Thiruvizha
Published on

புதுச்சேரி, ஆரங்குப்பம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் மரமே மூலவராக விளங்குகிறது. மீனவ சமுதாயத்தின் காவல் தெய்வமாக இந்த அம்மன் விளங்ககிறார். ஆண்டுதோறும் எல்லா கோயில்களில் விழாக்கள் நடைபெறுவதும், அதில் முக்கிய விழாவாகத் தேர்த் திருவிழா கொண்டாடப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் நடைபெறும் தேர்த் திருவிழாவை, மாநில ஆளுநரும், முதல் அமைச்சரும் சேர்ந்தே வடம் பிடித்து இழுத்து வைப்பார்கள். இது இன்று நேற்றல்ல, பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கம். ஆடி மாதம் ஐந்தாம் வெள்ளிக்கிழமை அன்று இந்தத் தேரோட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர் ஆலயம் மற்றும் அரைக்காசு அம்மன் ஆலயம். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலில் அரைக்காசு அம்மன் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் இந்த அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக்கொண்டு சிறிது வெல்லத்தை எடுத்து நைவேத்தியம் செய்ய, உடனே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. இக்கோயில் மலையை குடைந்து உருவாக்கப்பட்டது. மண்டபத்தின் நடுவே பிள்ளையாரும், தட்சிணாமூர்த்தியும் ஒரே சன்னிதியில் அமைந்திருப்பது அபூர்வமான அமைப்பு என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மன அமைதி வேண்டுமா? இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!
Amazing Amman Temples

ருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில் கடலூர் மாவட்டம், எழுமேடு என்கிற ஊரில் அமைந்துள்ளது. கடலூர் பண்ருட்டி சாலையில் 15 கி.மீ. தொலைவில் இது உள்ளது. இக்கோயிலில் மட்டும் அம்மனுக்கு பச்சை சேலையையே அணிவிக்கின்றனர். பச்சை சேலையையே காணிக்கையாக தருகிறார்கள். பச்சைவாழியம்மன் காவல் தெய்வமாக இருப்பதால் அம்மனுக்கு பூஜை செய்யும்போது, அந்த தெய்வத்திற்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை புடைவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

திருச்சி, சமயபுரம் மாரியம்மன்தான் அமர்ந்த நிலையிலேயே மிகப்பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் அம்மன் ஆவார். இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்மன் சிலை வேறு எந்தக் கோயில் கர்ப்பக்கிரகத்திலும் கிடையாது. அம்மனின் திருமேனி மூலிகைகளால் ஆனதால் ‘மூலிகை அம்மன்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
கோயில் தல விருட்சங்களின் மகத்துவம்: ஒவ்வொரு மரமும் ஒரு வரமா? முன்னோர்களின் தீர்க்க தரிசனம்!
Amazing Amman Temples

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள தெத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது இராஜகாளியம்மன் கோயில். இது வரலாற்றுச் சிறப்பும் புராணச் சிறப்பும் ஒருங்கே அமைந்த கோயில் ஆகும். இத்தலத்தில் அருளும் ஆதி இராஜகாளியம்மன் மூலவர் சிலை முழுக்க முழுக்க அத்தி மரத்தில் உருவாக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.

ம்மனை அமர்ந்த நிலையில், நின்ற நிலையில் மற்றும் சயன நிலையில் கோயிலில் தரிசித்திருப்பீர்கள். ஆனால், கர்ப்பஸ்தீரியாக வயிறு பெருத்து பிரசவ வேதனையில் துடிப்பது போன்ற கோலத்தில் கண்டிருக்கிறீர்களா? திருவள்ளூர் மாவட்டம், புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் இந்தக் கோலத்தை தரிசிக்கலாம். இவரை பூங்காவனத்தம்மன் என்றும் மண் புற்று மாதா என்றும் அழைக்கிறார்கள். இந்த அம்மனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியிலிருந்து வடக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது அருள்மிகு மூங்கிலனைக் காமாட்சி அம்மன் கோயில். இது ஒர் அதிசயக் கோயிலாகும். இந்தக் கோயிலில் சிலைகள், உத்ஸவ சிலைகள் கிடையாது. உள் பிராகாரத்திலுள்ள கதவுக்குத்தான் பூஜை நடைபெறுகிறது. மேலும், உடைக்காமல் தேங்காய், வாழைப்பழம் ஆகியவைதான் நைவேத்தியமாக அம்மனுக்குப் படைக்கப்படுகிறது. அன்ன நிவேதனம் கிடையாது.

இதையும் படியுங்கள்:
சைவர்களும் வைணவர்களும் வழிபடும் ஒரே கடவுள் யார் தெரியுமா?
Amazing Amman Temples

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும் கீரனூரிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் குன்றாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மங்கள நாயகி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறக் காணிக்கையாக மஞ்சளை அளிக்கின்றனர். இங்குள்ள கல் தொட்டி ஒன்றில், பக்தர்கள் மஞ்சளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். காணிக்கையாகச் செலுத்தப்படும் மஞ்சளை, இவ்வூர் மக்கள் யாரும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை என்பது விநோதம்.

நாகர்கோவிலில் இருந்து 21 கி.மீ. தொலைவிலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்று இங்குள்ள மூலவர் அம்மனை தெளிவாகப் பார்த்து தரிசனம் செய்யலாம். இந்த அரிய வாய்ப்பு வேறு எங்குமில்லை. 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்றுதான் இத்தல அம்மன். புற்று ரூபத்திலேயே பகவதி அம்மன் அருள்புரிந்து வருகிறார். புற்றின் தலைப்பகுதியில் அம்மன் உருவம் உள்ளது. இங்கே பச்சரிசி மாவு, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்தால் தலைவலி குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தை ‘பெண்களின் சபரிமலை’ என்றும் அழைக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com