ஏப்ரல் மாத ஆன்மிக காலண்டர்: முக்கிய விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள்!

ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
easter, madurai meenakshi amman, vishu festival, suba muhurtham
April month spiritual events
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஏப்ரல் 1-ம்தேதி : வளர்பிறை சதுர்த்தசி, பௌர்ணமி, பங்குனி உத்திரம், பம்பை ஆற்றில் சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு, திருப்பதி தும்புரு தீர்த்த முக்கோடி உற்சவம்.

ஏப்ரல் 2-ம்தேதி : கரிநாள், இஷ்டிகாலம், பெரிய வியாழன், பழனி, ஆண்டவர் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

ஏப்ரல் 3-ம்தேதி : தேய்பிறை பிரதமை, புனித வெள்ளி, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பட்டாபிஷேகம், சூரசம்ஹாரம்.

ஏப்ரல் 4-ம்தேதி : தேய்பிறை துவிதியை, ஹோலி சாட்டர்டே, திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம்.

ஏப்ரல் 5-ம்தேதி : தேய்பிறை திரிதியை, சங்கடஹர சதுர்த்தி, ஈஸ்டர் டே, சமயபுரம் மாரியம்மன் விழா தொடக்கம், திருப்பரங்குன்றம் கோவிலில் தேரோட்டம்.

ஏப்ரல் 6-ம்தேதி : தேய்பிறை சதுர்த்தசி, சுபமுகூர்த்தம், சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகன பவனி.

ஏப்ரல் 7-ம்தேதி : தேய்பிறை பஞ்சமி, அமிர்த யோகம், வராஹ ஜெயந்தி, சமயபுரம் மாரியம்மன் பூத வாகன பவனி, குரங்கனி முத்துமாலையம்மன் புறப்பாடு.

ஏப்ரல் 8-ம்தேதி : தேய்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், சமயபுரம் மாரியம்மன் அன்ன வாகன புறப்பாடு.

இதையும் படியுங்கள்:
மார்ச் மாத நாள்காட்டி: மாசி மகம் முதல் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!
easter, madurai meenakshi amman, vishu festival, suba muhurtham

ஏப்ரல் 9-ம்தேதி : தேய்பிறை சப்தமி, சித்தயோகம், பாபநாசம் சிவபெருமான் ஏகசிம்மாசனத்தில் புறப்பாடு, சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகன பவனி.

ஏப்ரல் 10-ம்தேதி : தேய்பிறை அஷ்டமி, சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு.

ஏப்ரல் 11-ம்தேதி : தேய்பிறை நவமி, திருவோண விரதம், சித்தயோகம், சமயபுரம் மாரியம்மன் ஹம்ஸ வாகன பவனி.

ஏப்ரல் 12-ம்தேதி : தேய்பிறை தசமி, சுபமுகூர்த்த நாள்,

ஏப்ரல் 13-ம்தேதி : தேய்பிறை ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், சர்வ ஏகாதசி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

ஏப்ரல் 14-ம்தேதி : தேய்பிறை துவாதசி, தமிழ் வருடப்பிறப்பு, விஷு பண்டிகை, திருச்சி உச்சி பிள்ளையார் பால் அபிஷேகம்.

ஏப்ரல் 15-ம்தேதி : தேய்பிறை திரயோதசி, சித்தயோகம், பிரதோஷம், மாத சிவராத்திரி, மத்ஸிய ஜெயந்தி, சகல சிவாலயங்களில் ஸ்ரீநந்தீஸ்வரர் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்ய நன்று.

ஏப்ரல் 16-ம்தேதி: தேய்பிறை சதுர்த்தசி, சுபமுகூர்த்த நாள், சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஏப்ரல் 17-ம்தேதி : சர்வ அமாவாசை, அமிர்த யோகம், முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நாள்.

ஏப்ரல் 18-ம்தேதி : வளர்பிறை பிரதமை, சந்திர தரிசனம், இஷ்டி காலம், குச்சனூர் ஸ்ரீசனி பகவானுக்கு அபிஷேக ஆராதனை செய்ய நன்று.

ஏப்ரல் 19-ம்தேதி : வளர்பிறை துவிதியை, கார்த்திகை விரதம், கரிநாள், பலராம ஜெயந்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்.

ஏப்ரல் 20-ம்தேதி : வளர்பிறை திரிதியை, அமிர்த யோகம், வார்தா கௌரீ விரதம், அட்சய திரிதியை, சுபமுகூர்த்த நாள், சதுர்த்தி விரதம்.

ஏப்ரல் 21-ம்தேதி : வளர்பிறை சதுர்த்தசி, ஸ்ரீமத்சங்கர ஜெயந்தி, லாவாண்ய கௌரீ விரதம்.

ஏப்ரல் 22-ம்தேதி : வளர்பிறை பஞ்சமி, சித்தயோகம், சஷ்டி விரதம், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.

ஏப்ரல் 23-ம்தேதி : வளர்பிறை சப்தமி, சுபமுகூர்த்த நாள், வாஸ்து நாள்(காலை 8.54 மணி முதல் 9.30 மணி வரை வாஸ்து செய்ய நன்று), மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர்பறி லீலை, இருவரும் குதிரை வாகன பவனி.

ஏப்ரல் 24-ம்தேதி : வளர்பிறை அஷ்டமி.

ஏப்ரல் 25-ம்தேதி : வளர்பிறை நவமி, அமிர்தயோகம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வர யாளி வாகனத்தில் பவனி.

ஏப்ரல் 26-ம்தேதி : வளர்பிறை தசமி, வாஸவி ஜெயந்தி, கன்னிகா பரமேஸ்வரி பூஜை, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்.

ஏப்ரல் 27-ம்தேதி : வளர்பிறை ஏகாதசி, சர்வ ஏகாதசி, சித்தயோகம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் திக்குவிஜயம் செய்தருளல்.

ஏப்ரல் 28-ம்தேதி : வளர்பிறை துவாதசி, மதுரை ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம், கரிநாள்.

ஏப்ரல் 29-ம்தேதி : வளர்பிறை திரியோதசி, பிரதோஷம், சித்தயோகம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ரதோற்சவம்.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி மாத நாள்காட்டி: மகா சிவராத்திரி முதல் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!
easter, madurai meenakshi amman, vishu festival, suba muhurtham

ஏப்ரல் 30-ம்தேதி : வளர்பிறை சதுர்த்தசி, அமிர்தயோகம், சுபமுகூர்த்த நாள், ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி, திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர்சேவை.

logo
Kalki Online
kalkionline.com