மார்ச் மாத நாள்காட்டி: மாசி மகம் முதல் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!

இந்த ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை வரும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
March Spiritual Events - Holi - Vastu - Masi magam
March Spiritual Events - Holi - Vastu - Masi magam
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on
deepam strip
deepam strip

மார்ச் 1-ம்தேதி: வளர்பிறை திரயோதசி, பூசம், பிரதோஷம், கரிநாள், மதுரை கூடலழகர் பல்லக்கில் பவனி, சகல சிவாலயங்களில் ஸ்ரீநந்தீஸ்வரர் வழிபாட்டு ஆராதனை செய்ய நன்று.

மார்ச் 2-ம்தேதி: வளர்பிறை சதுர்த்தசி, ஆயில்யம், மாசி மகம், காமதகனம், நடராஜர் அபிஷேகம், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

மார்ச் 3-ம்தேதி: பௌர்ணமி, மகம், சந்திர கிரஹணம், அனைத்து கோவில் நடையும் சாத்தப்படும்.

மார்ச் 4-ம்தேதி: ஹோலி பண்டிகை, தேய்பிறை பிரதமை, பூரம், அமிர்த யோகம், கோவை கோணியம்மன் ரதோத்ஸசவம், நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

மார்ச் 5-ம்தேதி: தேய்பிறை துவிதியை, உத்திரம், சுபமுகூர்த்த நாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

மார்ச் 6-ம்தேதி: தேய்பிறை திரிதியை, ஹஸ்தம், சுபமுகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, வாஸ்து நாள் (காலை, 10.32 மணிமுதல் 11.28 மணி வரை வாஸ்து செய்ய நன்று), திருவாதவூர் தியாகராஜர் விழா தொடக்கம்.

மார்ச் 7-ம்தேதி: தேய்பிறை சதுர்த்தசி, சித்திரை, அமிர்த யோகம், திருவாதவூர் தியாகராஜர் பவனி, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, வேதாரண்யம் சிவபெருமான் வீதிஉலா, இன்று கருட தரிசனம் நன்று, சனிபகவான் ஆராதனை நன்று.

மார்ச் 8-ம்தேதி: தேய்பிறை பஞ்சமி, சுவாதி, சுபமுகூர்த்த நாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு, இன்று கண்ணூறு கழித்தல் நன்று.

மார்ச் 9-ம்தேதி: தேய்பிறை சஷ்டி, விசாகம், சஷ்டி விரதம், இன்று முருகனை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.

மார்ச் 10-ம்தேதி: தேய்பிறை சப்தமி, அனுஷம், சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல், குரங்கனி முத்து மாலையம்மன் புறப்பாடு.

மார்ச் 11-ம்தேதி: தேய்பிறை அஷ்டமி, கேட்டை, திருவாதவூர் தியாகராஜர் புறப்பாடு.

மார்ச் 12-ம்தேதி: தேய்பிறை நவமி, மூலம், சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

மார்ச் 13-ம்தேதி: தேய்பிறை தசமி, பூராடம், சீதாதேவி விரதம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு

மார்ச் 14-ம்தேதி: தேய்பிறை தசமி, உத்திராடம், காரடையான் நோன்பு, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், மதுரை கூடலழகர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

மார்ச் 15-ம்தேதி: தேய்பிறை ஏகாதசி, திருவோணம், ஷடசீதி புண்ணிய காலம், சுபமுகூர்த்த நாள், சர்வ ஏகாதசி, திருவோண விரதம்.

மார்ச் 16-ம்தேதி: தேய்பிறை துவாதசி, அவிட்டம், பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.

மார்ச் 17-ம்தேதி: தேய்பிறை திரயோதசி, சதயம், மாதசிவராத்திரி, சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை.

மார்ச் 18-ம்தேதி: தேய்பிறை சதுர்த்தசி, பூரட்டாதி, சர்வ அமாவாசை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபதநாதர் திருக்கோலமாய் காட்சி.

மார்ச் 19-ம்தேதி: இன்றும் அமாவாசை, பிரதமை, ஸம்பஸ்வர கௌரீ விரதம், தெலுங்கு வருடப்பிறப்பு, யுகாதி பண்டிகை.

மார்ச் 20-ம்தேதி: வளர்பிறை துவிதியை, ரேவதி, சந்திர தரிசனம் நன்று, கரிநாள், ஸ்ரீரங்கம் நம்பெருமான் புறப்பாடு.

மார்ச் 21-ம்தேதி: வளர்பிறை திரிதியை, அசுபதி, ரமலான் பண்டிகை, கௌரீ விரதம்.

மார்ச் 22-ம்தேதி: வளர்பிறை சதுர்த்தி, பரணி, சதுர்த்தி விரதம், சக்தி கணபதி விரதம், சூரிய வழிபாடு நன்று, நெல்லை நெல்லையப்பர் விழா தொடக்கம்.

மார்ச் 23-ம்தேதி: வளர்பிறை பஞ்சமி, கார்த்தி, கார்த்திகை விரதம், அமிர்த யோகம், திருப்பரங்குன்றம், காஞ்சிபுரம், கழுகுமலை கோவில்களில் சிவபெருமான் விழா தொடக்கம்.

மார்ச் 24-ம்தேதி: வளர்பிறை சஷ்டி, ரோகிணி, சஷ்டி விரதம்.

மார்ச் 25-ம்தேதி: வளர்பிறை சப்தமி, மிருகசீருஷம், சுபமுகூர்த்த நாள், சந்தான சப்தமி, நெல்லை நெல்லையப்பர் வேணுவன லிங்கோபத்தில் புறப்பாடு.

இதையும் படியுங்கள்:
கடலாடும் விழா: மாசி மகத்தன்று புனித நீராடினால் இத்தனை நன்மைகளா?
March Spiritual Events - Holi - Vastu - Masi magam

மார்ச் 26-ம்தேதி: வளர்பிறை அஷ்டமி, திருவாதிரை, அசோகாஷ்டமி, பழனி ஆண்டவர் விழா தொடக்கம், ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் சிம்ம வாகன புறப்பாடு.

மார்ச் 27-ம்தேதி: வளர்பிறை நவமி, புனர்பூசம், ஸ்ரீராமநவமி, கங்கைகெண்டான் வைகுண்டபதி கருட வாகனத்தில் பவனி.

மார்ச் 28-ம்தேதி: வளர்பிறை தசமி, பூசம், தர்மராஜா தசமி, ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கருட வாகன பவனி.

மார்ச் 29-ம்தேதி: வளர்பிறை ஏகாதசி, ஆயில்யம், சர்வ ஏகாதசி, கரிநாள், பிரசன்ன வேங்கடேச பெருமாள் ரதோற்சவம், திருவாதவூர் தியாகராஜர் ஆழித்தேரோட்டம்.

மார்ச் 30-ம்தேதி: வளர்பிறை துவாதசி, மகம், பிரதோஷம், வாமன துவாதசி, பரமக்குடி முத்தாலம்மன் காமதேனு வாகன பவனி, தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகன பவனி.

மார்ச் 31-ம்தேதி: வளர்பிறை திரயோதசி, பூசம், மஹாவீர் ஜெயந்தி, அமிர்தயோகம், கழுகுமலை, கங்கைகொண்டான், திருச்சுழி தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.

logo
Kalki Online
kalkionline.com