வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா? பலரும் அறியாத ரகசியம்!

Are there so many benefits to eating garlic?
Garlic
Published on

பூண்டு இந்தியர்களின் உணவில் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருந்தாலும், அதை நாம் தினசரி சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. பலருக்கு பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிவதில்லை. குழம்பில் இருந்தால் அதை ஒதுக்கி விடுவதைப் பார்க்கிறோம். இந்தப் பதிவில் பூண்டு சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொண்டு, தினசரி ஒரு பல் பூண்டாவது சாப்பிட்டு அதன் ஆரோக்கிய நன்மைகளை அடைவோம்.

நீங்கள் ஜலதோஷ பிரச்னையால் அவதிப்படும் நபராக இருந்தால், மூன்று நாட்களுக்கு மூன்று பூண்டு பற்களை கடித்து சாப்பிட்டால்போதும், உடனடியாக ஜலதோஷம் சரியாகிவிடும். அதேபோல, தொடர்ச்சியாக பூண்டு சாப்பிடுவதால் அவ்வளவு எளிதில் வயிற்றுப் பிரச்னைகள், தொற்றுக்கிருமியினால் ஏற்படும் பாதிப்புகளும் வராது.

இதையும் படியுங்கள்:
உயரமாகவும் வலிமையாகவும் வளர குழந்தைகளுக்கான ஆரோக்கிய டயட்!
Are there so many benefits to eating garlic?

முகத்தில் பருக்கள் ஏற்பட்டால் பூண்டை அரைத்து அதன் மீது தடவினால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

கேன்சர் புண்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் பூண்டு சாப்பிட்டு வந்தால், புண்கள் விரைவில் ஆற உதவும்.

சிலரின் வயிற்றில் குடல் புழுக்கள் இருக்கும். அவர்கள் பூண்டு சாப்பிட்டுவந்தால் தானாகவே அவை வெளியேறிவிடும்.

பூண்டுக்கு தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும் பண்பு உள்ளது. இதனால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகள் கரைந்து சிறுநீர் வழியே வெளியேறுகிறது.

பூண்டு சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீராகி, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சரியாகக் கிடைப்பதால், இரத்த அழுத்தம், இதய பிரச்னை, மூச்சு வாங்குதல் போன்றவை சரியாகும்.

பூண்டை உணவில் சேர்த்து சாப்பிடுவதை விட, அதை அப்படியே சாப்பிடுவதன் மூலமாகத்தான் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அவற்றை உணவில் சேர்க்கும்போது அதன் சத்துக்கள் பாதியாகக் குறைந்து விடுகின்றன.

இதையும் படியுங்கள்:
பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் சிவப்பு காராமணி செய்யும் அதிசயம்!
Are there so many benefits to eating garlic?

சர்க்கரை நோயாளிகள் தினசரி பூண்டு சாப்பிடுவதால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வந்து, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யலாம்.

பூண்டில் அலர்ஜி எதிர்ப்புப் பண்பு அதிகமாக இருப்பதால் மூன்று வாரம் தொடர்ந்து பூண்டு சாப்பிடும்போது அலர்ஜி பிரச்னைகள் முழுமையாக நீங்கிவிடும்.

பூண்டுக்கு சார்ஸ் முதல் பிளேக் நோய் வரை அனைத்தையும் குணப்படுத்தும் தன்மையுள்ளது. இவை நோய்க் கிருமிகளை முற்றிலுமாக அழித்து விடுவதால், அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி பூண்டு பால் பருகி வந்தால் மூச்சுத்திணறல் சரியாகும்.

இப்படி எண்ணிலடங்கா பல மருத்துவ குணங்கள் பூண்டிற்கு உண்டு. எனவே, தினசரி ஒரு பூண்டு பல்லை அப்படியே சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலை ஆரோக்கியமாக்கி மருத்துவ செலவுகளைத் தவிர்க்கலாம்.

கிரி கணபதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com