ஸ்படிக மாலையில் இத்தனை விஷயங்களா இருக்கு?

Health benefits of Sphatika malai
Health benefits of Sphatika malai
Published on

ஸ்படிக மாலை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் இதை அணியலாம்.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்றவர் மாற்றி அணியும்போது தண்ணீருக்குள் குறைந்தது மூன்றரை மணி நேரமாவது ஊற விட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத்தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால், ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல, தானாகத் தனது அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும்போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும்.

இதையும் படியுங்கள்:
பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது ஆபத்தா?
Health benefits of Sphatika malai

காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதைக் கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்தத் தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறைவதை நீங்கள் உணரலாம். ஸ்படிகத்தை எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிக மாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புதமான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும்போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது இவற்றுக்கு அபிஷேகம் செய்யும்போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
‘சைபர் புல்லிங்’ எனப்படும் இணைய மிரட்டலின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!
Health benefits of Sphatika malai

ஸ்படிகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின்பே வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது மகாலஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com