அறுபடை வீடு செல்ல இலவச ஆன்மீகப் பயணம்! அரசு தரும் அரிய வாய்ப்பை பெறுவது எப்படி?

மூத்த குடிமக்களுக்கான இலவச அறுபடை வீடு சுற்றுலா குறித்த முழு விவரங்கள் இதோ.
அறுபடை வீடு - HRCE Free Tour
அறுபடை வீடு - திருப்பரங்குன்றம் AI Image
Updated on

முருக பக்தர்களுக்கான அரிய வாய்ப்பாக, அரசு சார்பில் அறுபடை வீடு தரிசனத்திற்கான இலவச சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 60–70 வயது, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவான மூத்த குடிமக்கள், தேவையான வயது மற்றும் வருமானச் சான்றுகளுடன் www.hrce.tn.gov.in தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நான்கு நாட்களில் அனைத்து ஆறு தலங்களையும் தரிசிக்கலாம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். அப்படி இருக்கும்போது அறுபடை வீடு என்று தனியாக சிறப்பித்து சொல்லப்படுகிறதே, அதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

புலவர் நக்கீரர் முருகனின் தலை சிறந்த ஆறு கோவில்களை தேர்வு செய்து அதற்கு திருமுருக்காற்றுப்படை என்று பெயர் சூட்டினார். பிற்காலத்தில் அது மருவி ஆறு படை (அறுபடை வீடு) என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு படை வீட்டுக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கிறது.

1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி

முருகன், தெய்வானையை திருமணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். இந்த கோவில் அறுபடை வீடுகளில் முதலாவதாக உள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மதுரையில் உள்ள ஒரு மலையில் உள்ள சிறிய கோவிலாகும். இங்கே மிக அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வராததால் எளிதாக தரிசனம் செய்து வழிபடலாம்.

2. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

முருகன் சூரனை அழித்து வெற்றியோடு திரும்பிய இடம் திருச்செந்தூர். திருச்செந்தூரில் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த 2ஆம் படை வீடு மிகவும் அழகான இடத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வருவோர்கள் கடலிலும் குளித்து மகிழ்வர். கடலோர காற்று மற்றும் அமைதியான சூழல் நிலவும் இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அறுபடை வீடு - HRCE Free Tour
அறுபடை வீடு - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்AI Image

முருகன் சூரபத்மனை அழிக்க சென்றபோது, சூரனும் நிறைய சக்தி வாய்ந்தவன் என்பதால் சில நாட்கள் போர் தொடர்ந்து நடந்தது. போருக்கு பிறகு கோபமடைந்த முருகன் தன் தாயார் கொடுத்த சக்தி வாய்ந்த வில்லை பயன்படுத்தி சூரனை இரண்டாக பிளந்தார். அப்போது சூரன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.

அதை ஏற்ற முருகன் பிளந்த அவன் உடலை மயில் மற்றும் சேவலாக மாற்றி தன்னுடன் வைத்து கொண்டார். இது கடல் வழி போர் நடைபெற்ற இடம். இந்த போர் முடிந்து திருச்செந்தூர் வந்ததால் தான் திருச்செந்தூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி.

3. பழனி மலை தண்டாயுதபாணி சுவாமி

நாரதர் தந்த மாம்பழத்திற்காக உலகை சுற்றி வர சென்ற முருகன், அவர் திரும்பும் முன்னே தாய் தந்தையர் தான் உலகம் என்ற அடிப்படையில் அவர்களை சுற்றி வந்து மாம்பழத்தை சகோதரர் கணபதி பெற்று விடுவதால் ஞானப்பழத்திற்கு சண்டை போட்டு, கோபம் கொண்டு மலை மேல் ஏறி நின்ற இடம் பழனி. அறுபடை வீடுகளில் முக்கியமான மற்றும் அதிக மக்கள் கூடும் இடம் பழனி மலை. இந்த மலை கோவிலில், புகை வண்டி மற்றும் ரோப் கார் போன்ற வசதிகள் உள்ளன. நடந்து மலையேற முடியாமல் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவும். அனைத்து நாட்களிலும் இந்த கோவில் திறந்து இருக்கும்.

4. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி

முருகன், வீரபாகுவிடம் விளையாடி கொண்டிருக்கும் போது, அந்த வழியாக பிரம்மன் முருகனை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். இதனால் சினமுற்ற முருகன் பிரம்மனை அழைத்து பிரணவ மந்திரத்தை கேட்டார். அதை கூற தயங்கிய பிரம்மனை இது கூடவா தெரியாது என்று கூறி சிறையில் அடைத்தார்.

இதையும் படியுங்கள்:
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!
அறுபடை வீடு - HRCE Free Tour

இதை அறிந்த சிவபெருமான், சம்பவ இடத்திற்கு வந்து எந்த விசாரணையுமின்றி பிரம்மனை விடுவிக்க சொன்னார். அதற்கு எதிர் பேச்சு பேசாமல் முருகன் விடுவித்தார். அதற்கு பதிலாக, சிவனிடம் முருகன் பிரணவ மந்திரம் என்றல் என்ன என்று கேட்க அவரும் தெரியாததை போலவே நடித்தார். அப்போது முருகன் சிவனை கை கட்டி நிற்க சொல்லி பிரணவ மந்திரத்தை காதில் கூறினார்.

தந்தைக்கே உபதேசம் சொன்னதால் சுவாமிநாதர் என்ற பெயரும், கோவில் மலை மேல் இருப்பதால் சுவாமிமலை என்றும் பெயர் வந்தது.

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி

இக்கோவில் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ளது. திருத்தணி கோவில் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் விசேஷம் இங்கேதான் முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்டார்.

அதனால் இந்த தலத்தில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது. ஆடி கிருத்திகைக்கு இங்கே தெப்போற்சவம் மிகவும் சிறப்பாக இருக்கும்.இங்கு. திருத்தணி கோவில் அறுபடை வீடுகளில் 5வது வீடு.

6. பழமுதிர்ச்சோலை சுப்பிரமணிய சுவாமி

இத்தலத்தில் முருகன் முருகன் தெய்வானை வள்ளி இருவருடனும் காட்சியளிக்கிறார். இது முருகனின் ஆறாவது படை வீடு. இங்கே தான் ‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டு ஒரு சிறுவன் வடிவில் ஔவையாரை சோதித்த இடம் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கால்நடைகளுக்காக கட்டப்பட்ட கோவில்! தமிழ்நாட்டின் வினோத வழிபாடு!
அறுபடை வீடு - HRCE Free Tour

இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த அறுபடை வீடுகளுக்கு தமிழ் நாடு இந்து சமய ஆறநிலைத் துறை சார்பில் 60 வயது முதல் 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு (அவர்களது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழே இருக்க வேண்டும்) இலவசமாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. வருமானம், வயது ஆகியவற்றிற்கான சான்றுகள் இருக்கவேண்டும்.

இந்த சுற்றுலாவிற்கான விண்ணப்பம் www.hrce.tn.gv.in http://www.hrce.tn.gv.in என்னும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சுற்றுலாவில் மொத்தமாக நான்கு நாட்களில் அறுபடை வீடுகளையும் முருக பக்தர்கள் எந்தவிதமான கட்டணமுமின்றி சென்று தரிசிக்கலாம்.

இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம், மூத்த குடிமக்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ஆன்மீக சுற்றுலா திட்டத்தில் இணைந்து, முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளையும் சிரமமின்றி தரிசிப்பதற்கான முழுமையான செயல்முறை அறிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com