அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன்: தானாகத் திறக்கும் கோவில் கதவு அதிசயங்கள்!

100 ஆண்டுகள் பழமையான இடுகாட்டுச் சித்தர்கள் ஜீவசமாதி தலத்தின் அற்புத ஆன்மிக உண்மைகள்.
மாரியம்மன் கோவில் - Mariamman Temple
மாரியம்மன் கோவில் - Mariamman Temple
Updated on

டக்கு நோக்கி அமைந்துள்ள தெப்பக்குள ஆயிரம் கண் மாரியம்மன் கோவில், இடுகாடாக இருந்த இடத்தில் உருவான புனித தலம். கருணை வடிவான அம்மன், உயிர்ப்பலி இல்லாத சாந்தசொரூபியாக வழிபடப் படுகிறார். பங்குனி, சித்திரைப் பொங்கல், பூக்குழலி இறங்கும் நிகழ்ச்சி, அக்னிச் சட்டி நேர்த்திக்கடன், மாதந்தோறும் குத்துவிளக்கு பூஜை, மார்கழி தனுர் மாத பூஜை போன்றவை இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.

பாவடித் தோப்பு அருப்புக்கோட்டையில் மேற்குப் பகுதியில் இது உள்ளது. 100ஆண்டுகள் பழமையான கோவில்.‌ ஆதியில் இத்திருக்கோயில் அமைந்த இடம் இடுகாடாக இருந்தது.‌ எனவே பல சித்தர்கள் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளனர்.‌ அந்த காரணத்தால் இக்கோவிலில் அம்மன் மிகவும் சாந்த சொரூபியாகத் திகழ்கிறாள்.

இக்கோவிலுக்குப் பின்புறம் மிகப்பெரிய தெப்பக்குளம் உள்ளது. இதனாலேயே இக்கோவில் தெப்பக்குள ஆயிரம் கண் மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.‌ கருவறையில் அம்மன் மிகவும் கருணையே வடிவாக கையில் திரிசூலத்தை ஏந்தியபடி அருள் தருகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் பங்குனி பொங்கல் விழா மிகவும் புகழ்பெற்றது. சித்திரைப் பொங்கல் விழா இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த பொங்கல் விழா சுமார் பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது‌. தினமும் உத்சவர் பொங்கல் விழாவின்போது வீதிஉலா வருவார். எட்டாம் நாளன்று கோவில் முன் பொங்கல் வைத்தும் பெண்கள் வழிபடுவார்கள். இரவு 12மணிவரை கதவு திறந்திருக்கும்.‌ பிறகு நடைசாற்றப்பட்டு கோவில் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும்.‌

அதன் பிறகு பக்தர்கள் உள்ளே கிழக்கு மேற்கு தெற்கு வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். அம்மனுக்கு அலங்காரம் முடித்து நடையிலும் இட்டு அர்த்தமண்டப கதவை சாற்றி விடுவார்கள்.

பிறகு தலைமைப் பூசாரி தேங்காய் வேப்பிலையுடன் வந்து கருவறையை மூன்று சுற்று சுற்றுவார்.‌ இவர் சுற்றும்போது கதவில் உள்ள மணிகள் தானாக ஆடுவதை கவனித்துக் பார்க்கலாம்‌. பின் கருவியைப் படியில் தேங்காயை சிதறு தேங்காய்பால் உரைப்பார்.

அந்தச் சத்தம் கேட்டுக் கோவில் கதவுகள் தானாகவே திறக்கும்.‌ கோவிலுக்கு உள்ளே கருவறையிலும் கதவு அருகிலும் யாரும் இருக்கமாட்டார்கள். இந்த அதிசயம் கோவில் உருவான நாளிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. பக்தர்கள் பக்திப் பரவசத்தில் அன்னையை வணங்கிச் செல்வார்கள்.

மாரியம்மன் கோவில் - Mariamman Temple
மாரியம்மன் கோவில் - Mariamman TempleAI Image

ஒன்பதாம் திருவிழா நாளன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், அக்னிச் சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

ஒன்பதாம் நாள் மாலையில் கோவில் முன் இரண்டு ஆள் உயரத்துக்கு விறகுகள் அடுக்கி தீ மூட்டப்படும். இப்பூக்குழியில் பக்தர்கள் இறகங்குவார்கள்.‌ மல்லிகைச் மரங்களை நான்கு பக்கங்களிலும் எல்லைக் கோடாக போட்டு வைப்பார்கள்‌. பூக்குழியின் நெருப்பு ஜுவாலை மட்டும் அது தீஜ்வாலையில் வாடாமல் புதுமலர் போன்றே இருக்கும்.

அம்மன் வந்து பூக்குழியை பார்வை இடும் வரை இந்த மலர்கள் வாடாமல் இருப்பது அதிசயமாகக் கருதப் படுகிறது. மக்கள் இங்கு பல்வேறு உருவபொம்மைகள் வாங்கி அம்மனுக்கும் செலுத்தி நேர்த்திக் கடன் செய்கிறார்கள். இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.

இக்கோவில் அம்மன் சாந்தசொரூபி ஆகையால் உயிர்ப்பலி இங்கு இல்லை.‌ மாதந்தோறும் கடைசி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜையும் மார்கழி தனுர் மாத பூஜையும், பொங்கல் மற்றும் நவராத்திரி பூஜைகள் நடைபெறுகின்றன. கோவில் முன்புறம் பலிபீடம், கொடிமரம் சிம்ம வாகனம் ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆடித் திருவிழா: வாழ்வில் அற்புதம் நிகழ்த்தும் 7 சக்திவாய்ந்த அம்மன் கோவில்கள்!
மாரியம்மன் கோவில் - Mariamman Temple

ஆயிரம் கண்

தேவி பாகவதத்தில் அம்பிகையின் பெருமைககளை எடுத்துச் சொல்கிறது. அசுரர்களை அழிப்பதற்காக ஆயிரம் கைகளில் ஆயிரம் ஆயுதம் ஏந்திநிற்கிறாள்.‌ அவள் பார்வைக்கும் உலகம் அடங்கியிருக்கிறது‌. இவள் ஆயிரம் கண் கொண்டவள் என தேவியைக்குறிப்பிடுவர். ‌லலிதா சகஸ்ரநாமத்தில் ஆயிரம் கண் கொண்டவள் என்பதை சகஸ்ராக்ஷி என்று குறிப்பிடுகிறது.

எல்லோரும் எல்லா நலமும் பெற இந்த ஆடி மாதத்தில் ஆயிரம் கண் மாரியம்மனை தரிசனம் செய்து அவள் அருளைப் பெறுவோம்.

இந்த அருள்மிகு தலத்தின் அற்புத வரலாற்றையும், பூசாரி மந்திரம் ஓதும்போது கதவுகள் தானாகத் திறக்கும் தெய்விக அதிசயத்தையும் அறிவதன் மூலம், அம்பிகையின் பூரண அருளையும் மன அமைதியையும் பெற்று உங்கள் ஆன்மிகப் பயணத்தை மேன்மைப்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தஞ்சை கோடியம்மன் கோவில் வரலாறு: பச்சைக் காளி, பவளக்காளி அருளும் அற்புதத் தலம்!
மாரியம்மன் கோவில் - Mariamman Temple
logo
Kalki Online
kalkionline.com