

தஞ்சை கோடியம்மன் கோவில் தலவரலாறு, தஞ்சன் என்ற அரக்கனை அழிக்க ஆதிபராசக்தி பச்சைக் காளி, பவளக்காளி என கோடி அவதாரங்கள் எடுத்த கதை, தஞ்சை என்ற பெயர் உருவான விதம், சோழ மன்னன் காலத்து பஞ்சம், சத்துருகோபன் படையெடுப்பு, அன்னை காளி நாட்டைக் காப்பாற்றிய வரலாறு, கோவில் அமைப்பு, நந்தி வாகனம், துவார சக்திகள், வெண்ணாறு, காவல் தெய்வங்கள், விழாக்கள் அனைத்தும் விரிவாக விளக்கப்படுகின்றன.
தஞ்சையில் அமைந்துள்ள கோடியம்மன் கோவில் உத்சவர் பச்சைக் காளி, பவளக்காளி பக்தர்களுக்கு அருள்புரியும் இந்த அம்மனின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வோம்.
தல வரலாறு
அழகாபுரியில் முனிவர்கள் நாட்டு நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் யாகம் செய்தார்கள். இந்த யாகம் பூர்த்தியானால் நம் கீர்த்தி ஒழியும். பிறகு யாரையும் அதிகாரம் செய்யமுடியாது என அஞ்சிய தஞ்சன் தன் அசுரப்படை மூலம் யாகத்தை அழித்தார்கள். இதனால் கோபம் அடைந்த முனிவரான பராசுரர் அன்னை சக்தி தேவியை வேண்டி தவம் இருந்தார்.
அவருக்கு ஆறுதல் தந்த அன்னை பராசக்தி அசுரனைக் போர்க்களத்தில் சந்தித்தார். ஆதிபராசக்தி சாந்த சொரூபியாக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருந்தார். போர் நடந்து இப்படி கொண்டேயிருந்தது.
எத்தனை முறை சென்றாலும் தஞ்சன் உயிர் பெற்றான். கோடிமுறை இப்படி நடந்தது. அம்மனும் அசுரனை அழிக்க கோடி அவதாரம் எடுத்தாள் அவள் கோபத்தால் மேனி சிவப்பாகியது. இனி தஞ்சன் பிழைக்காதபடி வீழ்த்தினார்.
தான் அழியப்போகிறோம் என்று தெரிந்ததும் அவன் அம்மனிடம் கோடி அவதாரங்கள் எடுத்து தன்னை அழித்த இந்த இடத்திற்கு தஞ்சன் என்று பெயர் வைக்க வேண்டினான். அவன் விருப்பப்படியே தஞ்சன் என்ற ஊர் பிற்காலத்தில் தஞ்சாவூர் ஆனது. இந்த கோடிஅம்மன் சோழ மன்னருக்காக கோடி அவதாரங்கள் எடுத்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.
சோழநாட்டில் மழை இல்லாததால் ஒருமுறை உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. வறுமை தலைவிரித்து ஆடியது. அந்த நேரத்தில் சோழ மன்னனுக்கு உதங்கன் என்ற மன்னருடன் மோதல் இருந்தது. அவனை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உதங்கன் சோழனின் எதிரியான சத்துருகோபனிடம் சேர்ந்தார்.
சோழநாடு வறுமையில் இருக்கிறது. இந்த சமயத்தில் நீங்கள் சோழநாட்டின் மீது படையெடுத்தார். வெற்றி உங்களுக்குத்தான் என்று சத்துருகோபனிடம் கூறினான்.
சோழமன்னன் வருத்தம் அடைந்தான். இச்செய்தியால் கலக்க முற்று அன்னை காளிதேவியை மனதார வேண்டினான். அன்னையே கோடி அவதாரங்கள் எடுத்து படைவீரர்களை விரட்டினாள் தன் நாட்டைக் காப்பாற்றிய கோடி அம்மனுக்கு சோழமன்னன் ஆலயம் எழுப்பினான். இவற்றைக் காவல் தெய்வமாக வழிபட்டான்.
கோவில் சிறப்புக்கள்
தஞ்சையைச் சுற்றி எட்டுதிக்கிலும் எட்டு அம்மன் கோவில்கள் உள்ளன. ராஜராஜன் நகரை விட்டு வெளியே செல்லும்போது இந்த அம்மன்களை வணங்கி விட்டுத்தான் செல்வராம்.
அன்னை தஞ்சை அரக்கனை அழிக்க கோடி அவதாரம் எடுத்ததால் கோடியம்மன் எனப் பெயர் பெற்றாள்.
துவார சக்திகள் இருபுறமும் நிற்க அர்த்தமண்டபத் தில் பச்சைக் காளியும், பவளக்காளியும் இருபுறங்களிலும் கற்சிலைகளாக காட்சி தருகிறார்கள். அபிஷேகம் அவர்களுக்குத்தான் நடக்கிறது. உள்ளே கோடியம்மன் அமர்ந்த கோலத்தில் வன்னி மரத்தினை பீடமாகக் கொண்டு சிவப்புத் திருமுகத்துடனும், திரிசூலத்தைக் கீழே பாய்ச்சிய படி எட்டு கரங்களுடன் அருள் பொழிகிறாள்.
பெருமாளின் மார்பில் லக்ஷ்மி வீற்றிருப்பதைப்போல் கோடியம்மன் தலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
சிவபெருமான் தலையில் கங்கையை சூடியிருப்பார். ஆனால் இங்கு அம்பாள் சிவனையே தலையில் சூடியிருக்கிறார். எனவே இங்கு சிங்க வாகனத்திற்குப் பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பாளிடம் அரக்கன் சிக்கி இறப்பதற்கு முன் இந்த ஊர் அழகாபுரி என்று இருந்தது. அவனது வேண்டுகோளுக் கிணங்க தஞ்சை ஆனது
இங்கு மதுரைவீரன் பூரண பொற்கொடி சமேத அய்யனார் சிலைகளும் உள்ளன. சிவபெருமான் தீர்த்த வடிவில் இங்கு உள்ளார். ஆலயத்தின் அருகே வெண்ணாறு பாய்ந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தோரண வாயில் கடந்து உள்ளே சென்றால் விநாயகரும் பாலமுருகனும் இருபுறமும் உள்ளனர். காவல் தெய்வமான மதுரை வீரன் ஒரு சன்னதியிலும் அய்யனார் பூரணம் பொற்கொடி ஆகியோர் மற்றொரு சன்னதியில் உள்ளனர்.
இத்தலத்தில் பச்சைக்காளி பவளக்காளி விழா தனிச்சிறப்பாகும்
தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைத் திருவிழாவிற்கு 15நாட்கள் முன்னதாக கோடியம்மன் கோவில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாசி கடைசி வாரம் அல்லது பங்குனி முதல் வாரத்தில் பச்சைக் காளி பவளக்காளி சிலைகளை வீடு வீடாக எடுத்துச்சென்று காளியாட்டம் நடக்கும். இந்த திருவிழாவின்போது பால்குடம் எடுப்பது விசேஷம். இந்த ஆடிமாதத்தில் கோடியம்மனை தரிசித்து அவள் அருளைப் பெறுவோம்.
இந்தத் தல வரலாற்றை வாசிப்பதன் மூலம் தஞ்சை மாநகரத்தின் வரலாற்றுப் பின்னணியை அறிவதுடன், கஷ்டங்களைப் போக்கி அச்சம் நீக்கும் கோடியம்மன், பச்சைக் காளி மற்றும் பவளக்காளியின் அருள்மிக்க வழிபாட்டு முறைகளையும் அதன் தெய்வீக பலன்களையும் முழுமையாகப் பெறலாம்.