ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளால் கொண்டாடப்படும் 'அட்ல தத்தே' விழா!

Atla Tadde Festival
Atla Tadde Festival
Published on

அட்ல தத்தே (Atla Tadde) என்பது ஆந்திராவில் திருமணமாகாத பெண்களால், நல்ல கணவனைப் பெறுவதற்காகவும், திருமணமான இந்துப் பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் கொண்டாடப்படும் ஒரு மரபு வழியிலான விழாவாகும்.

இவ்விழாவானது, தெலுங்கு நாட்காட்டியின் அஸ்வியுஜா மாதத்தில் முழு நிலவிலிருந்து 3வது இரவில் நிகழ்கிறது. கிரிகோரியன் நாட்காட்டியில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வரும் இவ்விழாவானது தெலுங்கில், கரக சதுர்த்தி கொண்டாட்டத்திற்குச் சமமானதாகும். கரக சதுர்த்தி வட இந்தியப் பெண்களால் மறுநாள் கொண்டாடப்படுகிறது.

தெலுங்குப் பெண்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் முழுதும் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், அட்லா தத்தேவை நினைவு கூருகிறார்கள். பெண்கள் மாலையில் பூஜை செய்து, சந்திரனைப் பார்த்து சிறிய அட்லுவைச் (தோசை) சாப்பிட்டு விரதம் முடிப்பார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளால் கொண்டாடப்படும் இந்த விழா நாளை முன்னிட்டு, அவர்கள் தங்கள் உள்ளங்கையில் மருதாணி பூசுவார்கள். பெண்களும் குழந்தைகளும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, தயிர் மற்றும் கோங்குரா சட்னியுடன், இரவுக்கு முன் சமைத்த அரிசி (சுத்தி) சாப்பிடுவார்கள். திருமணமாகாத பெண்களும், குழந்தைகளும் சூரியன் உதிக்கும் வரை சுட்டி சாப்பிட்டுவிட்டு அட்ல தத்தே பாடலைப் பாடி தெருக்களில் விளையாட்டு மற்றும் ஊஞ்சலாடுவார்கள். மக்கள் சூரிய உதயத்திற்குப் பிறகு அருகிலுள்ள குளம் அல்லது ஏரியில் சந்திரனைப் பார்த்து அந்நாளை வரவேற்கிறார்கள்.

அரிசி மாவு, வெல்லம் மற்றும் பாலில் செய்யப்பட்ட இனிப்பான பூதரேகுலு, குடுமுழு கௌரி தேவிக்கு 5, விரதமிருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலா 5 மற்றும் 4 குடுமுழில் 4க்கு மேல் ஒன்றை வைத்து தீபம் செய்து அதையேத் தீபம் ஏற்றி வைத்து பூஜைக்கு பிறகு சாப்பிடுகின்றனர். ஒவ்வொருவருக்கும் 11 சிறிய தோசைகள், அட்ல தத்தேவிற்கு 11 முடிச்சுகள், உண்ட்ரல்லா தத்தேவிற்கு 5 முடிச்சுகள் கொண்டது என கைக்கான தோரணம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பெருமாளுக்கு மண் சட்டியில் ஏன் நிவேதனம் செய்யப்படுகிறது?
Atla Tadde Festival

இந்த நாளில், சிலர் அட்லுவைத் தயாரித்து கவுரி தேவிக்கு காணிக்கையாக வைத்து, பின்னர் அவற்றைத் தானமாக உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு வழங்கும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு முத்தாய்ப்புக்கும் இந்தப் பெண்கள் / உறவினர்கள் இந்தப் பூசை செய்பவருடன் சேர்ந்து விரதம் இருப்பார்கள்.

விழாவில் ஏற்கனவே இந்தத் தானம் எடுத்த 11 பெண்கள் இருப்பர். பொதுவாக அப்பாவின் சகோதரி இந்த தானம் எடுத்தால் சடங்குகள் தொடர்கின்றன. இந்த 11 பெண்களுக்கும் 11 அட்லுவையும், அரிசி மாவு மற்றும் நெய்யால் தீபத்தைச் செய்து கௌரி தேவியின் முன் ஏற்றிப் பெறுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் புடவையின் முந்தியில் தானம் வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com