சூரியனும் சந்திரனும் ஒன்றாய் சஞ்சரிக்கும் ஆவணி அமாவாசை!

சந்திரன், சூரியன்
சந்திரன், சூரியன்
Published on

மிழ் மாதம் பன்னிரண்டில் ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஆடி மாதம் அமாவாசை மற்றும் புரட்டாசியில் வரும் மகாளய பட்ச அமாவாசை மட்டுமல்ல, ஒவ்வொரு அமாவாசை திதியும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை தினத்துக்கு அப்படி என்ன சிறப்பு என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆவணி மாத அமாவாசை, சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக சஞ்சரிக்கும்போது ஏற்படுகிறது. ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சூரியனுடன் சந்திரன் இணையும் நாள்தான் ஆவணி அமாவாசை ஆகும்.

ஆவணி மாதம் வரும் அமாவாசையை சோமாவதி அமாவாசை என்று அழைப்பர். இந்த ஆண்டு ஆவணி மாதம் சோமாவதி அமாவசை திதி நாளை திங்கட்கிழமை, செப்டம்பர் 2 அன்று வருகிறது. சோமாவதி அமாவாசை திதி நாளை காலை 05:21 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 3, 2024 செவ்வாய்க்கிழமை காலை 07:24 மணிக்கு, நிறைவு பெறுகிறது.

பொதுவாக, அமாவாசை நாளன்று சிவ வழிபாடும், பௌர்ணமி நாளன்று அம்மன் வழிபாடும் செய்வது வழக்கம். அதேபோல, அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ரு தோஷம் போக்கும். இந்த ஆண்டு 2024 ஆவணி மாத அமாவாசை, சிவனுக்கு உகந்த நாள் ஆகும். அதுவும் சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவது மிகச் சிறப்பானது.

தர்ப்பணம்
தர்ப்பணம்

ஆவணி அமாவாசை 2024, அதிகாலை 5 மணிக்கே தொடங்கி விடுவதால், நண்பகல் நேரத்துக்குள் அமாவாசை திதி கொடுப்பதையோ, தர்ப்பணம் செய்வதையோ செய்து விடலாம். ஆவணி மாதம் சோமாவதி அமாவாசை முடிந்த பிறகு, அவரவர் வசதிக்கு ஏற்ப, தானம் செய்யலாம். அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
நூற்றாண்டு கடந்து வாழும் பாரம்பரிய பொம்மைக் கலை!
சந்திரன், சூரியன்

அமாவாசை தினத்தன்று உடல் ஊனமுற்றோர், முதியவர்களுக்கு ஒரு வேளை உணவளித்தால் கோடி புண்ணியம். பொதுவாகவே, அன்னதானம் என்பது மிகவும் சிறப்பான விஷயம். வாழ்க்கையில் நாம் ஏதாவது ஒரு தருணத்தில் அதை செய்ய வேண்டும். அதை அமாவாசை அன்று செய்வது மிக மிகச் சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com