இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவூட்டும் பக்ரீத் திருநாள்!

இப்ராஹீம் நபியின் இறை அன்பும் தியாகமும் நினைவூட்டும் இந்நாளில், ஹஜ் யாத்திரை நிறைவு, கூட்டுத் தொழுகை, ஏழைகளுக்கு உதவி, சகோதரத்துவம், அன்பு பரிமாற்றம் ஆகியவற்றை வலியுறுத்தும் பக்ரீத் திருநாள்.
bakrid-festival
bakrid-festival
Updated on

க்ரீத் எனப்படும் தியாகத் தருநாள் பண்டிகை இன்றைய தினம் நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. பக்ரீத் பண்டிகையின் சிறப்பும் வரலாறும் எவ்வாறு தோன்றியது என்பதை பார்க்கலாம். 

பக்ரீத் பண்டிகை எனப்படும் தியாகத்திருநாள் இப்ராஹீம் நபியின் இறை அற்பணிப்பையும் தியாகத்தையும் நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய நாட்காட்டியின்படி துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது.  இதன்படி ஏழைகளுக்கு உதவுதல் கூட்டுத் தொழுகை சகோதரத்துவம் அன்பு பரிமாற்றம் மற்றும் ஹஜ்  யாத்திரை முடிவை குறிக்கிறது.

இப்ராஹீம் நபி தன்மகன் இஸ்மாயில் என்பவரை இறைவனுக்கு பலியிட துணிந்த தியாகத்தை நினைவு கூறும் நாள்.

பண்டிகை நாளான காலையில் பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதர சகோதரிகள் கூடி சிறப்பு தொழுகை நடத்துவார்கள். உலகில் உள்ள இஸ்லாமிய புனித பயணமாக மெக்கா செல்வது கடமையை முடிக்கும் நினைவு நாள் இது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறி கொள்வார்கள். ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வார்கள். தியாகம் ஈகை மத நல்லிணக்கத்திற்கு உணர்த்தும் பண்டிகை இது. 

இஸ்லாமிய தூதர்களில் ஒருவராக நம்பப்படுபவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் இறை அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டு அந்த குழந்தையின் வழி வந்தவர்கள்தான் இன்றைய அரேபியர்கள் 

இப்ராஹிம் மகன் இஸ்மாயில் பாலிய பருவத்தை அடைந்தபொழுது அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள் இப்ராஹிம் இடம் கனவில் வந்து கட்டளை இட்டார். இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹீம் அவரது அனுமதியோடு பலியிட துணிந்தபோது சிப்ராயில் என்ற வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து நிறுத்தி அதற்கு பதிலாக ஆட்டை பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டார். மேற்கண்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
ரம்ஜான், பக்ரீத்: இஸ்லாமியரின் பண்டிகைகள்; சடங்குகள் மற்றும் கடமைகள்
bakrid-festival

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை பக்ரீத் திருநாள் உணர்த்துகிறது. இஸ்லாமிய ரம்ஜான் பண்டிகையை அடுத்து இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகிறது. ஆண்டுதோறும் பனிரெண்டாவது மாதமான துல்ஹஜ் பத்தாவது நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை நாளில் ஹஜ் பயணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியா சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்திய நாட்டில் ஆட்டை பலி இடுவதை அடிப்படையாகக் கொண்டு பக்கரா ஈத் என்ற உருது பெயரால் அழைக்கப்பட்டு பின்னர் தமிழில் பக்ரீத் என அழைக்கப்படுகிறது. அரேபிய மொழியில் ஈத் அல் அதா என அழைக்கிறார்கள். 

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் புனித யாத்திரை செல்வதாகவும், இந்த கடமைகளில் கடைசியாக இறைவனுக்கு பலி கொடுத்தல் நிகழ்ச்சியாகும்.  இந்தப் பலியிடும் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் விலங்குகள் குறைந்த பட்சம் ஒரு வயது பூர்த்தி அடைந்து இருக்கவேண்டும் உடல் எடை குறைவாக இருக்கக் கூடாது . இவ்வாறாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com