

சோம்பலை நீக்கி நம்மை சுறுசுறுப்பாக்கும் தலம் எது தெரியுமா? உங்கள் பிள்ளைகள் சோம்பேறியாக இருக்கிறார்களா? அப்படிப்பட்டவர்களை மாற்றும் தலம்தான் கும்பகோணம் அருகே இருக்கும் பாணபுரீஸ்வரர் தலம். இந்த தலத்து அம்பிகையை வழிபட்டால் சோம்பல் நீங்கி மனிதனுக்கும் சுறுசுறுப்பு கிடைக்கும்.
இராமபிரான் வனவாசம் மேற்கொண்ட காலத்தில் சீதையைதேடிச் செல்லும் வழியில் தன்னுடைய பாணத்தால் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை வழிபட்டதால் பாணபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நந்திதேவர் இடம் பெற்ற சாபம் நீங்க மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்தில் தங்கி சிவனை வழிபட்டு இங்கு வந்து வியாசபகவான் தனது சாபத்தைப் போக்கிக்கொண்டார். இவர் ஸ்தாபித்த லிங்கம் வியாசலிங்கம் என அழைக்கப் படுகிறது.
இந்த கோவிலில் பிரளயகாலத்தில் தோன்றிய மகாமக குளம் உள்ளது. புராணத்தின்படி ஊழிகாலத்தில் உலகம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டபோது படைப்புக் கடவுள் பிரம்மா அமுதம் நிரம்பிய கலசத்தை நீரில் மிதக்கவிட்டார்.
அந்த கலசம் காலப்போக்கில் கும்பகோணம் அடைந்தது. அப்போது ஈசன் வேடன் ரூபம் எடுத்து அம்பு எய்தி கலசத்தை உடைக்க அதில் இருந்த அமுதம் நிலத்தில் பரவி மகாமக குளமாக உருவெடுத்தது. பாணம் எய்திய தலம் பாணாத்துறை. என்று அழைக்கப்படுகிறது. இது கும்பகோணம் கிழக்கு பகுதியில் பக்தபுரி தெருவில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் பாணபுரீஸ்வரர் என்ற திருநாமத்தில் அருள் வழங்குகிறார். வியாச பகவான் சாப விமோசனம் பெற்ற தலம் வியாச பகவான் நந்தீஸ்வரர் இடமிருந்து சாபம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அந்தசாபத்திலிருந்து விடுபட பல தலங்கள் சென்று வியாசர் வழிபட்டார்.
இறுதியாக பாணபுரீஸாவரர் தலம் வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட சிவபெருமான் மகிழ்ந்து சாப விமோசனம் அளித்தார். அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் வியாச லிங்கம் என அழைக்கப்படுகிறது. வங்க தேசத்தை ஆண்ட சூரசேனன் என்ற மன்னனுக்கும் அவன் மனைவி காந்திமதிக்கும் குழந்தை இல்லாததால் இந்த சிவபெருமானை வழிபட புத்திர பாக்யம் கிடைத்ததாக வரலாறு கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் காந்திமதியின் நீண்ட நாள் நோயும் குணமானது
சோம்பலை நீக்கும் சோமகலாம்பாள் ஈசனுடன் சேர்ந்து பக்தர்களின் நம்பிக்கைபடி சோம்பல், மனச்சோர்வு, முயற்சியில்லாமை இவற்றை போக்கி சுறுசுறுப்பும் உத்சாகமும் அளிப்பதாக நம்பப் படுகிறது. முகத்தில் பொலிவு இல்லாமல் இருப்பவர்கள், சோர்வாக இருப்பவர்கள், கும்பகோணத்தில் அம்பிகையை வழிபட முக ஒளி மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும்.
இங்கு மேற்கு நோக்கி நெடுந்துயர்ந்த ராஜகோபுரம் அதனை அடுத்து நாயக்கர் பாணியிலான முகப்பு மண்டபம் அழகானது. இங்கு வடமேற்கில் விச்வனாதர், விஸ்வ லிங்கம், வாயு லிங்கம், முருகன் லக்ஷ்மி சன்னதிகள் உள்ளன. மூலவர் பாணபுரீஸ்வரர் மேற்கு நோக்கி அருள் புரிகிறார். இங்குள்ள விஷ்ணு பாதம் ராமரால் பூஜிக்கப்பட்டது. இங்கு கதாதரன் சன்னதி உள்ளது. ஜோதிடப்படி இந்த சன்னதியில் 16,தில் தீபங்கள் ஏற்றி 16முறை வலம் வந்தால் பித்ரு தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது.
இது மகாமகத் திருவிழாவும் தொடர்பு உடைய தலம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நடைபெறும். அதில் இங்குள்ள 12சிவன் கோவில்களுக்கு தொடர்பு உள்ளது. அந்தப் பன்னிரெண்டில் ஒன்றாக இந்த பாணபுரீஸ்வரர் தலமும் ஒன்று. இக்கோவில் கோவிந்தபுரம் அக்ரஹாரத்தில் இருந்து இடது புறம் அரை கி.மீ. தொலைவில் உள்ளது.