நல்லமலா காட்டின் ஆழத்தில் ஒளிந்துள்ள 'பைரவகோனா': அறிவியலா? மாயாஜாலமா?

ஆந்திராவின் பசுமை காடுகளுக்குள் குடவரை சிற்பக்கலையின் பிரம்மாண்ட அதிசயத்தை வெளிப்படுத்தும் பைரவகோனா மற்றும் உண்டவல்லி குகைகள்.
பைரவகோனா குகைக்கோவில்கள் - Bhairavakona Cave Temples
பைரவகோனா குகைக்கோவில்கள் - Bhairavakona Cave Temples
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பைரவகோனாவில் நல்லமல்லா மலைகளின் பசுமையான காடுகளுக்கு நடுவே ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சைவ க்ஷேத்திரம் ஒன்று (பைரவகோனா குகைக்கோவில்கள்) ஆமைந்துள்ளது.‌ இது பாறையில் செதுக்கப்பட்ட 8 சிவன்கோவில் களைக் கொண்ட வளாகமாகும். வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு கோவிலைத் தவிர மற்ற அனைத்தும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள சிவலிங்கங்கள் அனைத்தும் ஒரே கல்லில், வெளியில் வாங்கப்பட்ட கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ளன.

உண்டவல்லி குகைக் கோவிலில் ஆனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி காட்சி தருகிறார்.

அனந்தபத்மனாபசுவாமியும், நரசிம்மரும் இக்குகை கோவில்களில் கொலு வீற்றிருக்கும் தெய்வங்கள் ஆகும்‌. இங்குள்ள சிற்பக்கலை அஜந்தா எல்லோரா சிற்பங்களை நினைவூட்டுகின்றன‌. இக் குடைவரை கோவில் களிலிருந்து தக்காணத்தை ஆண்ட அரசர்களின் கோட்டைக்கும் விஜயவாடா கனக துர்கா கோவிலுக்கு ரகசிய மார்க்கங்கள் இருந்ததாகத் தெரிகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உண்டவல்லி விஜயவாடா அருகே உள்ள முகல்ராஜபுரம் குகைகள், மற்றும் குண்டு பள்ளி போஜனகுண்டாவில் உள்ள பௌத்த பாறைப் சிற்பங்கள் போன்ற பிற கோவில்களின் வரிசையில் பைரவகோனாவும் அடங்கும். இங்குள்ள குகைக் கோவில்கள் பல்லவ ஆட்சியாளராக மகேந்திர வர்மனால், அவர் அமராவதி அருகே உள்ள தன்யகடகம் அல்லது நேரடிக் கோண்டாவில் இருந்தபோது சுமார் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இருப்பினும் சில கல்வெட்டுக்களில் படி 11ம் நூற்றாண்டில் சாளுக்கியர்களும் கூட சில கோவில்களைக் கட்டுவதில் பங்களித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
பைரவகோனா குகைக்கோவில்கள் - Bhairavakona Cave Temples

பைரவர் இப்பகுதியில் க்ஷேத்திரபாலகராக இருந்தார் என்பதால் இவ்விடத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது.‌ அதேசமயம் இப்பகுதி காலபைரவரால் ஆளப்பட்டது என்று மற்றொரு கோட்பாடு கூறுகிறது.‌ இங்கு சிவன் பார்க்கேஸ்வரராக வழிபடப்படுகிறார்.‌

கேவில்களை நோக்கியிருக்கும் பைரவர் சிற்பம் அருகிலுள்ள ஓடைகளில் காணப்படும் மென்மையான சிஸ்ட் பாறையால் செய்யப்பட்டது‌. இங்குள்ள அனைத்து கோவில்களுக்கும் பிரம்மா மற்றும் விஷ்ணு சிற்பங்கள் காவலுக்கு நிற்கின்றன. இந்த வளாகத்தில் பல்லவ கால சிற்பங்களின் செழுமையைக் காணலாம். இங்குள்ள அனைத்து கோவில்களும் குதிரை லாடம் வடிவில் அமைந்துள்ளன.

இங்கு முதல் நான்கு கேவில்களில் கர்ப்பகுடி சதுர வடிவில் உள்ளதுடன் அதில் சிவலிங்கமும் அமைந்துள்ளது‌. மற்ற நான்கு கேவில்களில் கர்ப்பகுடியும் மண்டபமும் உள்ளன. அவை அனைத்திலும் நந்தி அமைந்துள்ளது. சில நுழைவாயிலில் பிரம்மா விஷ்ணுவும் துவாரபாலகர்களும் உள்ளனர். அதேசமயம் சில தூண்களில் அடியில் சிங்கங்களைக் காணலாம். இங்குள்ள லிங்கங்கள் உள்ளூர் கற்களால் ஆனது‌. லிங்கத் தொகுதியிலிருந்து இங்கு விழும் சோனவனா என்ற அழகிய நீர்வீழ்ச்சி உள்ளது.

பைரவகோனா குகைக்கோவில்கள் - Bhairavakona Cave Temples
பைரவகோனா குகைக்கோவில்கள் - Bhairavakona Cave Temples

வடக்கு நோக்கி அமைந்துள்ள முதல் கோவில் சசி நாகலிங்கம் என்று அழைக்கப்படுகிளது.‌ இக்கோவிலின் கீழ்ப்பகுதியில் திரிபுர துர்கா பரமேஸ்வர லிங்கம் பிரதான கோவிலாகும். இங்கு துர்க்கை தேவியின் வலப்புறத்தில் காளியும், இடப்புறத்தில் சரஸ்வதியும், நடுவில் அவருடன் மகாலட்சுமியும் உள்ளனர்.‌ கார்த்திகை பௌர்ணமியின் போது கோவிலுக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய குளம் மீது நிலவொளிபட்டு அது மூலவர் மீது பிரதிபலிக்கிறது.

இந்த வளாகத்தின் கடைசி கோவிலில் அஷ்டகலாபிரசண்ட பைரவர் எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சீசைலம் மல்லிகார்ஜுன் லிங்கம் மற்றும் நாகேஸ்வர லிங்கங்கள் உள்ளன. சுற்றியுள்ள காடுகளில் பல மருத்துவ தாவரங்களும் ஓடைகளும் குளங்களும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
கேரளாவில் உள்ள இந்தக் கோவில்களுக்குள் ஆண்கள் நுழைய அனுமதியில்லை!
பைரவகோனா குகைக்கோவில்கள் - Bhairavakona Cave Temples
logo
Kalki Online
kalkionline.com