
நம் வாழ்வில் நடக்கக்கூடிய நல்லது, கெட்டதை முன்கூட்டியே நடக்கும் சில அறிகுறிகள் மூலம் நாம் அறிந்துக் கொள்ள முடியும். அதன்படி சில பறவைகள் வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நம் வீட்டிற்கு காகம், குருவிகள், கழுகு, மயில், ஆந்தை, புறா போன்ற பறவைகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. இவை நம் வீட்டிற்கு வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
சிட்டுக்குருவி வீட்டிற்கு வருவது மிகவும் நல்லது என்று சொல்வார்கள். சிட்டுக்குருவி வீட்டிற்கு வருவது, நல்ல சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போவதை உணர்த்தக்கூடிய அறிகுறியாக கருதப்படுகிறது. நிலையான செல்வத்தை ஏற்படுத்த போகிறது, மகாலக்ஷ்மி அம்சம் வீட்டிற்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
காகம் நம்முடைய பித்ருக்களின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும் இது சனீல்ஸ்வரரின் வாகனமாகும். இந்த காகம் நம் வீட்டிற்கு வந்தால், நம் முன்னோர்களின் அருளும், ஆசியும் நமக்கு கிடைக்கும். நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் பாவங்களை சனி பெயர்ச்சியில் அனுபவிப்போம். சனி பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலக காகத்திற்கு தினமும் உணவளிக்க வேண்டும்.
புறா அந்த காலத்தில் சமாதான தூதுவனாக செயல்பட்டிருக்கிறது. புறாக்கள் வீட்டிற்கு வந்தால் வீட்டில் உள்ள கஷ்டங்கள், துன்பங்கள் விலகும் என்று சொல்லப்படுகிறது.
கருடன் வீட்டிற்கு வருவது மிகவும் அரிதான நிகழ்வாகும். கருடன் என்பது மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், வேதத்திற்கெல்லாம் தலைவனாகவும் சொல்லப்படுகிறது. அதனால் தான் கோவில் கும்பாபிஷேகத்தில் வேதங்களை உச்சரிக்கும் போது கருடன் வானத்தில் வட்டமிடுகிறது.
அதுமட்டுமில்லாமல் கருடனின் கையில் அமிர்தகலசம் இருக்கும். அது கிடைத்தால் தேவர்களுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கருடன் நம் வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
ஆந்தை இருளிலும் நன்றாக பார்க்கக்கூடிய பறவையாகும். வடமாநிலங்களில் ஆந்தை மகாலக்ஷ்மியின் வாகனமாக கருதப்படுகிறது. ஆந்தை வீட்டிற்கு வருவது மகாலக்ஷ்மி நம் வீட்டிற்கு வருவதை தெரிவிக்கும் அறிகுறியாக கருதப்படுகிறது.
மயில் மிகவும் அழகான பறவை. முருகப்பெருமானின் வாகனமாகும். மேலும் மழை வரப்போவதை முன்கூட்டியே தன் நடனத்தின் மூலமாக சொல்லக்கூடியது. மயில் வீட்டிற்கு வருவது எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை. சில வீடுகளுக்கு மயில் வரும். அவ்வாறு வந்தால், 'மிக பெரிய ஆபத்தில் இருந்து உன்னை காப்பாற்றிவிட்டேன்' என்று சொல்லக்கூடிய அறிகுறியாக காருதப்படுகிறது.
சேவல் வீட்டிற்கு வருவது முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடிய அறிகுறியாக கருதப்படுகிறது.