உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கிறதா? நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதற்கு இதுவே சாட்சி!

spiritual-benefits
spiritual-benefits
Published on

ந்தியாவில் ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், முதலில் சொல்லப்படும் ஒரு வார்த்தை "மஹாலக்ஷ்மி பிறந்திருக்கிறாள்" என்பதுதான். சனாதன தர்மத்தில் பெண் குழந்தை என்பது ஒரு குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது, என்னும் உயிரியல் கணக்கை பெருக்கும் செயலாக பார்க்கப்படுவது இல்லை. இது ஒரு தெய்வ ஆசீர்வாதமாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பெண் குழந்தை பிறப்பு பற்றி ஶ்ரீ கிருஷ்ணர், தனக்கு பிடித்தமான மைத்துனரான அர்ஜூனனுக்கு கூறிய விளக்கத்தை இங்கு பார்ப்போம்.

கருடபுராணத்தின் ஒரு பகுதியில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனிடம் மனிதர்களின் பிறப்பு மற்றும் சந்ததிகளை பற்றி தெளிவாக கூறத் தொடங்குகிறார். அர்ஜூனா, "ஒருவருக்கு மகன் பிறப்பது என்பது ஒரு தந்தை செய்யும் பாக்கியம், அது அவருக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டமாகும்". ஆனால், மகளின் பிறப்பு என்பது அப்படியல்ல, ஒருவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாக அவனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

அனைத்து உயிர்களிடம் அன்பு காட்டும் குணம், தூய்மையாக எண்ணங்களை கொண்ட மனம், அறநெறி தவறாது வாழும் சிந்தனைகள் கொண்ட பெற்றோர்களைத்தேடியே பெண் குழந்தைகள் வருகிறார்கள். பூமியில் ஜனிக்கப்போகும் ஒரு உயிர், பெண்ணாக பிறப்பதற்கே பல தகுதிகள் தேவைப்படும்போது, அவளின் பெற்றோருக்கும் அத்தகைய தகுதி இருக்கும்.

 மஹாலக்ஷ்மியின் அம்சம்: 

கருடபுராணத்தில் பெண் குழந்தை மஹாலக்ஷ்மியின் சொரூபமாக பார்க்கப்படுகிறது. பெண் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்டில் ஒரு நேர்மறை ஆற்றல் உருவாக தொடங்குகிறது. பெண் குழந்தை சிரித்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலகிச் சென்று, மன அழுத்தம் அகலும்.  இதனால் ஆரோக்கியம், மனநிறைவு, நிம்மதி ஆகிய உண்மையான செல்வங்கள் உங்களை வந்து சேரும்.

ஒரு வம்சத்தை தழைத்தோங்க செய்ய மகன் பிறப்பான். அவன் வழியே அந்த வம்சத்தின் பெயர் அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், மகள் இரண்டு குடும்பத்தின் பெருமைகளையும் விளங்க செய்கிறாள். அவள் இரு குடும்பத்தின் பெருமையாக இருக்கிறாள், ஒரு வீட்டின் பெருமை என்பது, அந்த வீட்டின் உள்ள பெண்ணின் குணத்தினால் மட்டுமே நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பக்குவம் மாறாத பங்குனி உத்திர பஞ்சாமிர்தம்: பாரம்பரிய செய்முறை இதோ!
spiritual-benefits

பெண் குழந்தைகள் பணக்காரர்களுக்கு மட்டும் பிறப்பதில்லை, ஏழைகளுக்கும் பிறக்கிறாள் என்பதால் செல்வத்திற்கும் பெண்ணிற்கும் தொடர்பு இல்லை என்று நினைக்க முடியாது. செல்வம் என்பது வெறும் காகிதம் சார்ந்த பொருளோ, உலோகத்தை வைத்து தீர்மானிப்பது அல்ல. செல்வம் என்பது மகிழ்ச்சி நிறைந்த வீட்டைதான் குறிக்கிறது. பெண் குழந்தை வீட்டில் உள்ளவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பதால், அந்த வீடு செல்வம் உள்ள வீடாக கருதவேண்டும்.

பெண் குழந்தை இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி இல்லை என்றால், அந்த வீட்டில் உள்ளவர்கள் யாரும் அந்த பெண் குழந்தையை மதிக்கவில்லை என்பது புலனாகும். அந்த குழந்தையை சீராட்டி வளர்த்தால், மகிழ்ச்சி தானாக தேடிவந்துவிடும். சாஸ்திரங்களின்படி பெண் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் மஹாலக்ஷ்மியின் அருள் நிரம்பி வழியும். அவளது பெற்றோர்களுக்கும் கடவுளின் ஆசிகிட்டும். இதுபோன்ற குடும்பங்களில் வறுமை இருப்பதில்லை. வளம் தானாக வந்து சேர்ந்து விடுகிறது. என்று கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

உங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால், நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை உணருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com