
பொதுவாக நம் வீட்டிற்கு ஏதேனும் உயிரினங்கள் வருகிறது என்றால் அதன் மூலமாக அது நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறது என்று அர்த்தம். பூனைகளுக்கு பில்லி, சூன்யம் போன்ற தீய விஷயங்களை காணக் கூடிய ஆற்றல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. எனவே, பூனை ஒரு வீட்டிற்கு அடிக்கடி வருகிறது என்றால் அதன் பின் இருக்கும் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நாம் ஒரு இடத்திற்கு சென்று வாழ வேண்டும் என்றால் அந்த இடத்தில் அடிப்படையான வசதிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்தை தேர்வு செய்து தான் நாம் வாழ விரும்புவோம். அந்த இடம் நமக்கு முன்னேற்றத்தையும், மனநிம்மதியையும் அளிக்க வேண்டும். அப்படி அமையும் இடத்தை நாம் அதிர்ஷ்டமாக கருதுவோம். அப்படியில்லை என்றால் அந்த இடத்தில் பில்லி, சூன்யம் போன்ற ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும். இப்படியிருக்கையில், அந்த வீட்டிற்கு அடிக்கடி பூனை வந்தால் அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும்.
ஒரு வீட்டிற்கு பூனை வருகிறது என்றால் அவர்கள் உணவு பச்சம் இல்லாமல் நல்ல செழிப்பாக வாழ்கிறார்கள் என்று அர்த்தம். உணவுக்கு பஞ்சம் இல்லாமல் ஆரோக்கியமான உணவுகளை உண்பவர்கள் வீட்டிற்கு பூனை மிச்ச உணவிற்காக வரும். அப்படி பஞ்சம் என்பது இல்லாமல் பூனைக்கு உணவு கிடைக்கும் போது அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பூனைப்போன்ற உயிரினம் ஒரு இடத்திற்கு செல்கிறது என்றால், அந்த இடம் நிம்மதியாகவும், பாதுகாப்பாகாவும் இருக்கிறதா? என்பதை பார்த்து விட்டே அங்கு செல்லும். எனவே, உங்கள் வீட்டிற்கு பூனை வருகிறது என்றால் அந்த இடம் வாழ்வதற்கு ஏற்ற நிம்மதியான, பாதுகாப்பான இடமாகவே கருதப்படுகிறது.
ஒரு வீட்டில் எந்தவித பில்லி, சூன்யம், ஏவல் போன்ற விஷயங்கள் இல்லை என்றால் அந்த வீட்டிற்கு அடிக்கடி பூனைகள் வரும். பூனைகளுக்கு இதுப்போன்ற எதிர்மறையான சக்திகளை உணரக்கூடிய ஆற்றல் உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒரு வீட்டில் தீயசக்திகள் இருந்தால், அந்த வீட்டிற்கு பூனைகள் கண்டிப்பாக வராது. எனவே, உங்கள் வீட்டிற்கு அடிக்கடி பூனை வருகிறது என்றால், அந்த வீட்டில் நல்ல நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருப்பதாக அர்த்தம்.
பூனைகள் குறிப்பிட்ட சில வீடுகளில் மட்டுமே சென்று குட்டிப் போடும். சில வீடுகள் நல்ல காற்றோட்டத்துடன், நல்ல நேர்மறை ஆற்றல்களை கொண்டு இருக்கும். அதுப்போன்ற இடத்தை தேர்வு செய்தே பூனை குட்டிப்போடும்.
அப்படி ஒரு வீட்டில் பூனை குட்டிப்போட்டால் அந்த வீட்டில் உள்ள தம்பதியினருக்கு விரைவில் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அர்த்தம். சாஸ்திரத்தில் நம் முன்னோர்கள் நமக்கு வரக்கூடிய ஆபத்தையும், நமக்கு சொல்ல நினைக்கும் செய்திகளையும் பூனைகள் மூலம் சொல்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
நம் வீட்டிற்கு வரும் உயிரினங்களுக்கு உணவையும், தண்ணீரையும் நாம் தானமாகக் கொடுக்கும் போது நல்ல புண்ணியம் கிடைக்கிறது. சில வீட்டிற்கு மட்டும் தான் பறவைகள், மாடுகள் போன்ற உயிரினங்கள் உணவைத் தேடிவரும். அதற்கு காரணம் அந்த வீட்டில் நல்ல மனிதர்களும், நேர்மறை ஆற்றலும் அதிகமாக இருப்பதாக அர்த்தம். அப்படி அந்த உயிரினங்களுக்கு தானம் வழங்கும் போது தொழில், உத்தியோகம், கல்வியில் மென்மேலும் வளர்ச்சியடைந்து நல்ல நிலைக்கு செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது.