நேபாளத்தின் ரகசியக் கோவில்: 1600 ஆண்டுகள் பழமையான சங்கு நாராயணன் அற்புத வரலாறு!

சாபத்திலிருந்து மீண்ட விஷ்ணுவும், கல்லில் வடிக்கப்பட்ட 10 அவதாரங்களின் ரகசியமும்!
சங்கு நாராயணன் - Changu Narayan Temple
சங்கு நாராயணன் - Changu Narayan Temple
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

காட்மாண்டுவிலிருந்து கிழக்கே 12மைல் தொலைவில் அமைந்துள்ளது சங்கு நாராயணன் கோவில். இது 4ம் நூற்றாண்டின் மன்னர் ஹரிதத்தவர்மாவால் கட்டப்பட்டது. இக்கோவில் மிகப் பழமையானதாகும். இது சாங்கு என்றும் டோலகிரி என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

இக்கோவிலைச் சுற்றி இரண்டு புராணங்கள் உள்ளன.

பழங்காலத்தில் குவாலா என்ற மாடுமேய்ப்பவர் ஒரு பிராமணரிடமிருந்து பசுவை வாங்கினார்.‌ அந்த குவாலா மேய்ச்சலுக்காக பசுவை சாங்குவுக்குக் கொண்டு சென்றார்.‌ அங்கு சம்பக மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஒருநாள் அந்தப் பசு மேய்வதற்கான குறிப்பிட்ட ஒரு மரத்திற்கு மட்டுமே சென்றது. எப்போதும் நிறைய பால் தரும் பசு அன்று குறைவாகவே கொடுத்தது.‌ இது பல நாட்களுக்குத் தொடர்ந்தது எந்த பிராம்மணரிடம் பசுவை வாங்கினாரோ அவரிடம் கூற சுதர்சனம் என்ற அந்த பிராம்மணரும், குவாலாவும் அந்த பசுவைக் கவனித்தனர்.

ஒரு குறிப்பட்ட மரத்திலிருந்து கருப்பு நிறச்சிறுவன் பசுவின் பாலைக் குடிப்பதைத் கண்டு இருவரும் வியந்தனர். அவன் அசுரன் என நினைத்து அந்த சம்பக மரத்தை வெட்ட முடிவு செய்தனர்.‌ மரத்தை வெட்டும்போது மனித இரத்தம் பீரிட்டு வரத்தொடங்கியது.

இருவரும் அழுதுகொண்டிருந்தபோது விஷ்ணு பகவான் தோன்றி அது தவறல்ல என்று கூறினார். பிறகு அவர்களிடம் சில விஷயங்கள் கூறினார்.

காட்டில் வேட்டையாடப் சென்றபேது தவறுதலாக சுதர்சனின் தந்தையைக் கொன்றதால் தனக்கு பெரும் பாவம் ஏற்பட்ட தென்றும், தன் வாயாலேயே பூமியில் அலைந்து திரிய சபிக்கப்பட்டார். கருடனாக சங்கு மலையில் இறங்கினார். ஒரு பசுவின் பாலை அருந்தி உயிர் வாழ்ந்தார். குவாலாவும் சுதர்சனனும் மரத்தை வெட்டும்போது தலை துண்டிக்கப்பட்டு பாவத்திலிருந்து விடுபட்டார்.

இதைக் கேட்டதும் குவாலாவும் சுதர்சனனும் அங்கு ஒரு விஷ்ணு கோவிலை நிறுவினர். கோவில் பூசாரிகள் சுதர்சன் வழித் தோன்றலாவார்கள்.

சங்கு நாராயணன் - Changu Narayan Temple
சங்கு நாராயணன் - Changu Narayan Temple

மற்றொரு வரலாறு

பிரஞ்சல் என்ற வலிமை மிக்க ஒருவர் வாழ்ந்ததாகவும் மிகவும் வலிமையான அவருக்கு கோவில் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

வரலாற்றின்படி 4ம் நூற்றாண்டில் ஹரிதத்தமன்னரால் கட்டப்பட்டது. பின் பேரழிவின் பின் 1702இல் மீண்டும் கட்டப்பட்டது. இது புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன் நுணுக்கமான கலைப்படைப்புகளையும் கொண்டது‌. கோவிலைச் சுற்றிலும் கல், மரம், உலோகம் என பல வேலைப்பாடுகளைக் காணலாம்.‌

இது ஒரு உயரமான கல் பீடத்தின் மீது அமைந்துள்ள இரண்டடுக்கு கூரையுடைய கோவிலாகும். இது நேபாளத்தில் உள்ள நேவார்களின் சமூகத்தாரால் கட்டப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

கோவிலுக்குள் நான்கு வாயில்கள் உள்ளன. அவற்றின் இருபுறமும் சிங்கம், சரபம், யானை போன்ற தத்ரூபமான சிற்பங்கள் காவல் காக்கின்றன. மேலும் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் பாகங்கள் செதுக்கப்பட்ட கதவுகளும் உள்ளன. பிரதான வாயிலாக மேற்கில் நுழைவாயிலில் கல் தூண்களின் உச்சியில் சங்கு, சக்கரம், தாமரை கண்கள் ஆகியவை உள்ளன.

சங்கு நாராயணன் கோவில் கல்வெட்டுக்கள் நேபாளம் முழுவதிலும் உள்ள கல்வெட்டுக்களில் பழமையானவை.‌ கி. பி.464ம் ஆண்டு லிச்சாவி மன்னர் மான் தேவனால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலின் மையப்புள்ளியாக விஷ்ணு விளங்குகிறார்.‌ பிரதான வாயிலுக்கு முன்னால் கருடனின் பாதி மனிதன் பாதி பறவை உருவில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சிலை உள்ளது.‌ இங்கு நரசிம்மரின் சிலை உள்ளது.‌ இன்னொரு சித்திரம் ஆறுகைகள் உள்ள குள்ளராகவும் பின்னர் இராட்சதராகவும பின் வாமனராக காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
பிரிட்டிஷ் அதிகாரியை மிரள வைத்த தமிழ்நாட்டின் காடு! கலெக்டருக்கு நடந்த அந்த விசித்திரம் என்ன?
சங்கு நாராயணன் - Changu Narayan Temple

ஒரு சிறிய கருப்பு பலகையில் பத்து தலைகளும் பத்து கைகளும் கொண்ட விஷ்ணுவின் 1500ஆண்டுகள் பழமையான சிலை காணப்படுகிறது. இங்கு சிவன், அஷ்டமாத்ரிகா கிருஷ்ணரும் காணப்படுகின்றனர்‌.

இங்கு ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இக்கோவிலில் சங்கு நாராயண யாத்திரை, யுகாதி, ஹரிபோதினா ஏகாதசி திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இக்கோவில் 1979ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், உலகின் மிகப்பழமையான ஆன்மிக தலங்களில் ஒன்றான சங்கு நாராயணன் கோவிலின் கட்டிடக்கலை சிறப்புகள், லிச்சாவி வம்சத்து கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான புராணக் கதைகளை முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சிவன் கோவிலில் இந்த ஒரு தப்பை செய்யாதீங்க... ஜாக்கிரதை!
சங்கு நாராயணன் - Changu Narayan Temple