எர்ணாகுளம் அருகே இப்படி ஒரு பிரம்மாண்ட கோவிலா? இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்!

ஜங்கம முனிவர் தவமிருந்த புனிதத் தலத்தின் ஆன்மீக ரகசியங்கள்!
செங்கமநாடு கோவில் - Chengamanad Kovil
செங்கமநாடு கோவில் - Chengamanad Kovil
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆல்வா (Aluva) அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான கிராமப்புறச் சூழலில் அமைந்துள்ள தொன்மையான ஆன்மீகத் தலம் செங்கமநாடு மகாதேவர் கோவில். கேரளாவின் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான செங்கமநாடு கோவில், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடக்கலைக்கும், புராண மரபுகளுக்கும் பெயர் பெற்றது.

1.தல வரலாறு மற்றும் பெயர்க்காரணம்: இக்கோவிலின் தோற்றம் மற்றும் பெயருக்குப் பின்னணியில் சுவாரஸ்யமான புராணக்கதை ஒன்று உள்ளது.

ஜங்கம முனிவரின் தவம்: பண்டைய காலத்தில் ஜங்கம முனிவர் எனும் மாமுனிவர் இப்பகுதியில் சிவபெருமானை நோக்கித் தீவிர தவம் இயற்றினார். அவருடைய தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார். ஜங்கம முனிவர் தவம் செய்த இடம் என்பதால் ‘ஜங்கமநாடு’ என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி ‘செங்கமநாடு’ என்று பெயர் பெற்றது.

இறைவனின் வடிவம் மற்றும் சிறப்பு: கிராதமூர்த்தி (வேடன் உருவம்): இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளிப்பதற்காக எடுத்த ‘கிராதமூர்த்தி’ (வேடன்) கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

பக்தர்களுக்கு அருள் வழங்கும் நிலை: கருவறையில் வீற்றிருக்கும் சிவபெருமான் மிகவும் சாந்தமான, அதே சமயம் சக்திவாய்ந்த ரூபத்தில் அருள்பாலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

2. கட்டிடக்கலை மற்றும் அமைப்பின் சிறப்புகள்: கேரள பாரம்பரியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் பல தனித்துவமான சிறப்புகளைக் கொண்டுள்ளது.

மிகப்பெரிய வட்ட வடிவக் கருவறை: கேரளாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வட்ட வடிவக் கருவறையைக் கொண்ட கோவில் இதுவாகும். இதன் பிரம்மாண்ட அமைப்பும், கூரை அமைப்பும் கட்டிடக்கலை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

செங்கமநாடு கோவில் - Chengamanad Kovil
செங்கமநாடு கோவில் - Chengamanad Kovil

சுவரோவியங்களும் மரச்சிற்பங்களும்: கருவறையின் வெளிப்புற சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான பாரம்பரிய சுவரோவியங்களும், நுட்பமான மரச்சிற்பங்களும் கோவிலின் எழிலை மேலும் கூட்டுகின்றன.

சுவரோவியங்களில் காணப்படும் ஓவியங்கள்: சிவபெருமான் வேடன் உருவில் அர்ஜுனனுடன் போர் புரிவதும், இறுதியில் அர்ஜுனனின் பக்தியை மெச்சி அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி அருளுவதும், சிவபெருமான் நந்தி தேவனின் கொம்புகளுக்கிடையே ஆனந்தத் தாண்டவம் ஆடுவது, தட்சிணாமூர்த்தி தென் திசை நோக்கி அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் சாந்த வடிவம், சிவபெருமானும் பார்வதி தேவியும் கயிலாய மலையில் வீற்றிருப்பது, தட்சனின் யாகத்தைச் சிவபெருமான் அழிக்கும் கதைகளும், உக்கிரமான அகோரமூர்த்தி வடிவங்களும். மற்றும் இராமாயண & மகாபாரத இதிகாசக் காட்சிகள், விஷ்ணு புராணங்கள் மற்றும் அவதாரங்கள் தேவி மற்றும் பிற தெய்வ வடிவங்கள்

ஆலயம் அமைந்துள்ள சூழல்: விசாலமான பிரகாரம், கொடிமரம், பலிபீடம் மற்றும் தூய்மையான கோவில் திருக்குளம் என ஆன்மீக அமைதியை வாரி வழங்கும் சூழலில் கோவில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கேரள சுவரோவியங்களில் இத்தனை ரகசியங்களா? இதுவரை வெளிவராத ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
செங்கமநாடு கோவில் - Chengamanad Kovil

முக்கியத் திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகள்

வருடாந்திர திருவிழா: மலையாள மாதமான (மார்கழி – தை) மாதத்தில் இக்கோவிலின் முக்கிய திருவிழா 10 நாங்கள் ‘ஆராட்டு’ உற்சவத்துடன் நிறைவடைகிறது.

மகா சிவராத்திரி: சிவராத்திரி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளில் பங்கேற்கின்றனர்.

பிரதோஷ வழிபாடு: பிரதி பிரதோஷ நாட்களிலும், திங்கட்கிழமைகளிலும் சிவபெருமானுக்குச் சிறப்பு நைவேத்தியங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

கோவில் அமைவிடம் மற்றும் செல்லும் வழி: எர்ணாகுளம் மாவட்டம், ஆல்வா (Aluva) நகருக்கு அருகில், கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் செங்கமநாடு அமைந்துள்ளது. ஆல்வாவில் இருந்து செங்கமநாட்டிற்குத் தொடர்ந்து நகரப் பேருந்துகள் இயங்குகின்றன. அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையம் ஆல்வா (10 km) ஆகும்.

மன அமைதியை நாடும் பக்தர்களுக்கும், கேரளாவின் ஆன்மீக மற்றும் பாரம்பரியக் கலைகளை ரசிக்க விரும்புபவர்களுக்கும் செங்கமநாடு மகாதேவர் கோவில் ஒரு மிகச்சிறந்த ஆன்மீகத்தலமாகும். இறைவனின் அருளையும் மன நிறைவையும் தரக்கூடிய இக்கோவிலுக்குச் சென்று தரிசிப்பது ஒரு மறக்க முடியாத ஆன்மீக அனுபவமாக அமையும்.

இதையும் படியுங்கள்:
நல்லமலா காட்டின் ஆழத்தில் ஒளிந்துள்ள 'பைரவகோனா': அறிவியலா? மாயாஜாலமா?
செங்கமநாடு கோவில் - Chengamanad Kovil
logo
Kalki Online
kalkionline.com