நம் உடலில் அமைந்திருக்கும் மச்சம் நமக்கு அழகு மற்றும் அதிர்ஷ்டம் இரண்டையும் சேர்த்துத் தருகிறது. மச்ச சாஸ்திரத்தின்படி, பெண்களுக்கு முகத்தில் எங்கே மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம், செல்வாக்கு, யோகம் தேடி வரும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பெண்களுக்கு நெற்றிப்பொட்டு வைக்கும் இடத்தில் மச்சம் இருந்தால், உயர் பதவியில் இருக்கும் நபரே கணவராக அமைவார். அது மட்டுமில்லாமல் செல்வாக்காகவும், பணக்காரராகவும் இருப்பார். பெண்களின் வலதுப்பக்க நெற்றியில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையாகவும், தைரியமாவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள்.
பெண்களுக்கு இடதுப்பக்க நெற்றியில் மச்சம் இருந்தால், அதை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிவப்பு நிறத்தில் இந்த மச்சம் இருந்தால், நல்ல ஒழுக்கமுள்ள குடும்பப் பெண்ணாக இருப்பார்கள். தன் குடும்பத்திற்குத் தேவையான வசதிகளையும், சக்திகளையும் கொடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கும். இதுவே கருப்பு நிற மச்சம் இருந்தால், தீய பழக்கங்கள் இருக்கும், தவறான நட்பு, பழக்கங்களைக் கொண்டிருப்பார்கள்.
பெண்களின் மூக்கின் மீது மச்சம் இருந்தால், அவர்கள் எந்த காரியம் எடுத்தாலும், அதை முடிக்காமல் விடமாட்டார்கள். மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால், பணக்கார நபர் கணவராக அமைவார். அப்படியில்லை என்றால் திருமணம் செய்த நபர் பணக்காரராகும் யோகம் உண்டு.
உதட்டின் மேல் மச்சம் இருக்கும் பெண்களுக்கு மேல் உதடு அல்லது கீழ் உதடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அதிர்ஷ்டம் மிகவும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை, படிப்பு, உத்தியோகம் என்று எல்லாவற்றில் இவர்களுக்கு அதிகமாக அதிர்ஷ்டம் இருக்கும். உதட்டிற்கும் மூக்கிற்கும் நடுவே மச்சம் இருந்தால், அவர்களின் எண்ணங்கள் உயர்வாக இருக்கும், அமைதியான மனநிலையில் அவர்கள் இருப்பார்கள், இவர்களுக்கு அழகான கணவன் அமையும் யோகம் உண்டு. இடது கன்னத்தில் மச்சம் இருந்தால், அந்தப் பெண் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பாள். அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்டிருப்பாள்.
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால், இவர்கள் வாழ்க்கையில் நல்லது, கெட்டது கலந்து வரும், பல கஷ்டங்களையும், தடைகளையும் தாண்டி வாழ்வில் வெற்றி பெறுவார்கள். வலதுப்புற கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும். பிறந்த வீட்டில் இருக்கும் செல்வாக்கு புகுந்த வீட்டிலும் கிடைக்கும்.
பெண்களின் தலைக்கு மேலே மச்சம் இருந்தால், இவர்கள் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படும் குணம் உடையவர்களாக இருப்பார்கள், கெட்ட குணம் அதிகமாக இருக்கும், வாழ்க்கையில் திருப்தியடைய மாட்டார்கள்.
பெண்களுக்கு வலதுப்பக்கம் காதுக்கும், கண்ணுக்கும் இடையே மச்சம் இருந்தால், அவர் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக இருப்பார். இதுவே இடதுப்பக்கம் மச்சம் இருந்தால், ஏழ்மையான பெண்ணாக இருப்பார். பெண்ணின் வலதுப்புற தாடையில் மச்சம் இருந்தால், அவர்கள் யாருடனும் நெருங்கிப்பழக மாட்டார்கள், அனைவரையும் விட்டு விலகியிருக்கும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
இதுவே, இடதுப்புற தாடையில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் அழகானவராக இருப்பார்கள். அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள். கண்களில் மச்சம் இருந்தால், கஷ்டப்பட்டு வாழ்க்கையில் வெற்றியடைவார்கள். காதில் மச்சம் இருந்தால், அதிகமாக செல்வாக்குடையவராக இருப்பார்கள், அதிகமாக சம்பாதிப்பார்கள். அதேசமயம், அதிகமாக செலவும் செய்வார்கள். சமூகத்தில் இவர்களுக்கு தனி அந்தஸ்து இருக்கும்.