அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Amethyst Stone
Amethyst Stone BenefitsImage Credits: Solacely

யற்கையாகவே பூமியிலிருந்து உருவாகக்கூடிய கற்களில் அமிதிஸ்ட் கல்லும் ஒன்றாகும். பூமியிலிருந்து உருவாகக்கூடிய நவரத்தினங்கள் மட்டுமில்லாமல், உபரத்தினங்களும் நமக்கு எண்ணற்ற பலன்களைத் தருகிறது. அத்தகைய உபரத்தினத்தில் அமிதிஸ்டும் ஒன்றாகும். அதன் பயனைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

இந்த அமிதிஸ்ட் கல்லை மன்னர்கள் தங்கள் நாற்காலிகளில், அரண்மனைகளில் பதித்து பயன்படுத்தியிருக்கிறார்கள். போருக்குச் செல்வதற்கு முன் வீரர்கள் அமிதிஸ்ட் கற்களை எடுத்துச் செல்வார்களாம். இந்தக் கல்லை வைத்திருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், ஆபத்து விளைவிக்கும் விலங்குகள் பக்கத்தில் நெருங்கவே நெருங்காது என்றும் கருதினார்கள். அமிதிஸ்ட் கல்லிற்கு, ‘செவ்வந்தி கல்’ என்றொரு பெயரும் உண்டு.

பண்டைய காலத்தில் ராஜாக்கள் இந்தக் கல்லை மது கோப்பைகளாகவும், சாப்பிடும் தட்டாகவும் செய்து பயன்படுத்தினார்கள். போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்கள் அமிதிஸ்ட் கல்லை நகையாக அணிந்து கொள்ளும்போது போதை பழக்கத்திலிருந்து படிப்படியாக விடுபட்டு வெளிவருவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அமிதிஸ்ட் கற்களை பூஜையறையில் வைக்கும்போது தெய்வீக ஆகர்ஷண சக்தியை உள்வாங்கி கொண்டு தெய்வீக தன்மையையும், தெய்வீக அலையையும் வீடு முழுவதும் கொடுக்கும். இந்தக் கல் இருக்கக்கூடிய வீட்டில் பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் அண்டாது. அடிக்கடி பயணம் செய்பவர்கள் இந்த அமிதிஸ்ட் கல்லை அணிகலன்களாக அணிந்துகொள்வது நல்லது. இதைப் பயணங்களில் நம்முடன் வைத்துக்கொள்ளும்போது நிச்சயமாக விபத்துகள் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.

மருத்துவ ரீதியாகவும் அமிதிஸ்ட் கல் நிறைய பலனைத் தருகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்டும் வலியை இக்கல்லை அணியும்போது அது போக்கும் என்று சொல்கிறார்கள். கை, கால் மூட்டு வலி, எலும்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் இதுபோன்ற பிரச்னைகளும் குறையும். இந்த கல்லை வீட்டிலே வைப்பதனால், தூக்கமின்மை பிரசனை நிவாரணமாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கல்லை வைத்துக்கொள்வதால் குழந்தை பேறு கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!
Amethyst Stone

அமிதிஸ்ட் கல் சனி கிரகத்திற்கு உரியதாகும். தொழில் ரீதியாக அமிதிஸ்ட் கல்லைப் பயன்படுத்தும்போது நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அமிதிஸ்ட் கற்கள் தியானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. இது மன இறுக்கத்தைப் போக்கி சாந்தப்படுத்துகிறது. இதை வீட்டில் வைத்திருந்தால், பண வரவில் குறை இருக்காது. அமிதிஸ்ட் கல்லை இரவு ஒரு டம்ளர் நீரில் போட்டு விட்டு காலையை அந்த நீரை மட்டும் அருந்தினால் ஆரா க்ளீன்ஸராக (Aura cleanser) ஆக செயல்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com