காகத்திற்கு உணவு வைப்பதன் தாத்பரியம் என்னவென்று தெரியுமா?

Do you know what it means to feed a crow?
Do you know what it means to feed a crow?https://tamilminutes.com

காகம் சனி பகவானின் வாகனமாகக் கருதப்படுகிறது. நமது முன்னோர்களாகக் கருதப்படும் காகங்களுக்கு அமாவாசை போன்ற நாட்களில் உணவு படைத்து வழிபடுவது வழக்கம். முன்னோர்களின் ஆன்மாக்கள் அமாவாசையன்று காகம் வடிவில் நமது இல்லம் தேடி வந்து உணவு உண்டு மனம் குளிர்ந்து நமது குடும்பத்துக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம்.

காகத்திற்கு உணவு இடும்போது சுத்தமான உணவை, புதிதானவற்றையும், இலையில் வைத்துப் படைக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் எள் கலந்த சாதத்தை காகத்துக்குப் படைத்தால் சனி பகவானின் ஆதிக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

காகத்திற்கு உணவு வைக்கும்போது குளிக்காமல் வைக்கக் கூடாது. அதேபோல், காகத்திற்கு எக்காரணம் கொண்டும் அசைவ உணவுகள், பழைய உணவை வைக்கக் கூடாது. பிஸ்கட், கரகரப்பான, காரம், இனிப்புகளை வைக்கலாம்.

காக்கையை வழிபடுவதால் சனி பகவான், எமன் மற்றும் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவர். காகத்திற்கு உணவு வைப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்கும். தீராத கடன்கள் தீரும். நமது முன்னோர்கள் நேரடியாக வராமல், காகம் உருவத்தில் வந்து நமக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
எலுமிச்சை ஊறுகாய்க்கு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்கும் என்பது தெரியுமா?
Do you know what it means to feed a crow?

சனி பகவானும், எமனும் சகோதரர்கள். காகத்திற்கு உணவு இடுவதால் இருவரும் திருப்தி அடைவர். விருந்தினர் வருவதையும், நல்ல செய்திகள் வரப்போவதையும் முன்கூட்டியே நமக்கு காகம் கரைந்து குரல் கொடுப்பதை அறியலாம்.

காலையில் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் நடக்கும். வாசலை நோக்கி கத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. காகத்துக்கு தினசரி உணவு வைத்தால் அது தினமும் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு வந்து உங்களை கரைந்து அழைப்பதை காணலாம். தினமும் காகத்திற்கு உணவு வைத்தால் மறைந்த முன்னோர்களின் ஆசியும், சனி பகவானின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com