லகு நாரியல் என்றால் என்னவென்று தெரியுமா?

Laghu Nariyal
Laghu Nariyalhttps://www.ebay.com

ம் வீட்டில் செய்யும் பூஜைகளால் நமக்கு பலதரப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. வீட்டில் தெய்வத்திற்கு உகந்த பொருட்களை வைத்து பூஜை செய்யும்பொழுது அனைத்துவித நன்மைகளும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும். அப்படிப்பட்ட பூஜை பொருட்களில் இதுவரை நாம் பெரிதாக கேள்விப்படாத ஒரு பூஜை பொருளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

லகு நாரியல் அல்லது மினி தேங்காய் என்று சொல்லப்படும் பூஜை பொருள் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்ததாகும். வடமாநிலங்களில் காலம் காலமாக லகு நாரியல் இல்லாமல் பூஜைகள் செய்ய மாட்டார்கள். ஏனெனில், புராணங்களில் மகாலட்சுமி தாயாரே, ‘எந்த வீட்டில் லகு நாரியல் இருக்கிறதோ அங்கே நான் வாசம் செய்வேன்’ என்று கூறியிருக்கிறார். அதனால் பல வருடங்களாக இந்த லகு நாரியலை பூஜை பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதைப் பற்றி பலருக்கும் பெரிதாக தெரிவதில்லை. இது நேபாளம், இமாச்சல பிரதேசம் போன்ற நாடுகளில்தான் பெரும்பாலும் உற்பத்தியாகிறது. அங்கேயும் சாதாரண இடங்களில் உற்பத்தியாகாமல் மலைப்பிரதேசத்தில் மட்டும்தான் உற்பத்தியாகிறது.

இன்றைக்கும் தொழில் செய்யும் வட நாட்டவர்களின் கடைகளில் பார்த்தால் துணியில் கட்டி வைத்திருப்பார்கள். இது பார்ப்பதற்கு கொட்டைப் பாக்கு மாதிரி சின்னதாக இருக்கும். தீபாவளி சமயத்தில், லட்சுமி பூஜையில் கட்டாயமாக லகு நாரியலை வைத்து பயன்படுத்துவார்கள். இதன் புழக்கம் தற்போது குறைந்ததற்கு காரணம் இதன் உற்பத்தி குறைந்ததேயாகும். அதுவும் தென்பகுதியில் இதைப் பற்றிய விவரம் யாருக்கும் அவ்வளவாகத் தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
கோபப்படும் கணவரை மிஸ்டர் கூலாக மாற்றும் தந்திரம்!
Laghu Nariyal

மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த லகு நாரியலை பூஜையறையில், லாக்கரில், தொழில் செய்யும் இடங்களில், நகை வைக்கும் இடத்தில், திருஷ்டிக்காக வாசலில் கட்டுவது இப்படிப் பல விதமாகப் பயன்டுத்தலாம். இதை வீட்டில் பயன்படுத்தி வந்தால் பில்லி, சூன்யம், சனி தோஷங்கள் எதுவாக இருந்தாலும் விலகிவிடும். இந்த லகு நாரியலை கோமதி சக்கரத்துடன் சேர்த்து நிலைவாசற்படியிலே கட்டி வைத்தால் கெட்ட சக்திகள் எல்லாம் வீட்டிற்குள் வராது.

மஞ்சள் நிற துணியில் 5 கோமதி சக்கரத்துடன் 3 லகு நாரியலை சேர்த்து கட்டி நிலைவாசலில் கட்டி விடுங்கள். இதை பூஜையறையில் வெள்ளி அல்லது செம்பு தட்டில் வெள்ளை துணி போட்டு அதில் லகு நாரியல் 1 அல்லது 3 வைத்து அத்துடன் 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயம் சேர்த்து கொஞ்சம் குங்குமம் போட்டு நன்றாக பூஜையறையிலேயே முடிந்து வைத்து விடலாம். இதை லாக்கரில், நகையிருக்கும் இடத்தில், தொழில் செய்யும் இடத்தில் வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com