
மனிதர்கள் பலவிதமான குணங்களைக் கொண்டவர்களாக இருக்கிறாா்கள். பலர் நல்ல குணமும் இன்னும் சிலர் அதற்கு மாறான குணமும் உடையவர்களாக இருக்கிறாா்கள். பொதுவாக, ஜோதிட நூல்களின் அடிப்படையில் பன்னிரன்டு மாதங்களில் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் பிறந்தவர்கள் வெவ்வேறு குணநலன்கள் அமையப்பெற்று இருப்பது உண்டு. அதேபோல, ராசி மற்றும் கட்டங்களில் உள்ளவாறும் மனித குணம் மற்றும் செயல்பாடுகளில் வித்தியாசம் இருப்பது உண்டு.
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு குணநலன்கள் அமையப்பெற்றுள்ளது ஜோதிட நூல்களில் எழுதப்பட்டுள்ளன. அதேபோல, நட்சத்திரங்களுக்கும் உள்ளன. உதாரணமாக, கேட்டை கோட்டையை இடிக்கும், ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிா்மூலம், ஆயில்யம் ஆதிசேஷன், பரணி தரணி ஆளும்… என இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அதேபோல, ஆடி பீடை மாதம், மாா்கழி பஞ்சமான மாதம், ஆனியில் கூனி கூட குடி போக மாட்டாள் என ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு உதாரணங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம். அதன் அடிப்படையில் ஆடி மாதத்திற்கும் சில பலன்கள் ஜோதிட நூல்களில் உள்ளன. இனி, ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பாா்க்கலாம்.
பொதுவாக, ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப்படைக்கும் என்பாா்கள். சூரிய கிரகம் என்பது ஜோதிட ரீதியாக தந்தைக்குக்கு உாிய கிரகமாகும். சூாியன் கடக ராசியில் (கடக மாதம்) சஞ்சாிக்கும்போது குழந்தை பிறப்பது ஆகாது. அதனால் சிலர் நாள், நட்சத்திரம் பாா்த்து ஆனி மாதத்திலேயே சிசோியன் செய்து குழந்தையை எடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் விஞ்ஞானம் வளா்வதோடு, அஞ்ஞானமும் பெருகிவிட்டது.
சூாியன் பன்னிரண்டு ராசிகளில் பயணிப்பதைக் கொண்டே மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. ஆடியில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக இருப்பாா்கள். இவர்கள் சுட்டித்தனம் அதிகம் உள்ளவர்கள். அதேநேரம் ஏதாவது வம்பு வழக்கை செய்து விட்டு வீட்டுக்கு வருபவர்களாகவும் இருப்பாா்கள். கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். பல விஷயங்களை நிதானத்துடன் செயல்படுத்தும் நல்ல பண்பாடும் அவர்களிடம் இருக்கும்.
சில சமயம் சோம்பல், சில சமயங்களில் சுறுசுறுப்பு போன்ற விநோத குணங்கள் அமையப் பெற்றவர்களாகவும் இவர்கள் இருப்பதும் உண்டு. மேலும், நண்பர்கள் கூட்டம் அதிகம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பாா்கள். மிடுக்கான ஆடை அணிவது, ருசியாக உணவு சாப்பிடுவது, அதோடு கலைஞானம் கொண்டவர்களாகவும் இவர்கள் இருப்பாா்கள். திருமண விஷயங்களில் பொியோா் சொல் கேட்டு அதன்படி நடப்பதோடு, தைரியசாலிகளாகவும் இவர்கள் இருப்பாா்கள்.
உஷ்ண சம்பந்தமான வியாதிகள் இவர்களுக்கு வரும். தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்களாக இவர்கள் இருப்பாா்கள். இப்படிப் பல்வேறு நல்ல குணங்களும் வித்தியாசமான குணங்களும் அமையப் பெற்றவர்களே ஆடியில் பிறந்தவர்களாக இருப்பாா்கள். எது எப்படி அமைந்தாலும் இறைவனின் அருளே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். அதேநேரம் மனித நேயமும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
அனைவரும் நன்றாக, நலமாக இருக்க வேண்டும் என்ற நமது பொதுவான நோ்மறை எண்ணமே நமக்கான நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் என்பதே உலகப் பொதுமறை நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்!