
நம் அனைவரின் வீட்டிலேயும் காற்று மணி இருக்கும். இதை Feng shui காற்று மணி என்றும் சொல்வார்கள். இந்த காற்று மணியில் இருந்து வரும் மெல்லிசை ஓசை வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்த மணியை எந்த திசையில் வைக்க வேண்டும், எத்த எண்ணிக்கையில் வைக்க வேண்டும், எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாகவே வீட்டில் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்க பல்வேறு விதமான பொருட்களை வாங்கி வைப்பார்கள். அது நம்முடைய நாட்டு கலாச்சாரமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு கலாச்சாரமாக இருந்தாலும் சரி வீட்டிற்கு நல்லது என்றால், கண்டிப்பாக வாங்கி வைப்பார்கள். நம் நாட்டில் எப்படி கோவில் மணியோசை நேர்மறையான எண்ணத்தையும், நல்ல வைப்பிரேஷனை தருக்கிறதோ? அதைப்போலவே இந்த காற்றுமணி நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையையும் தரும் என்பது சீன நாட்டினரின் நம்பிக்கையாகும்.
காற்று மணி குறிப்பாக ஐந்து எலமெண்டை(Element) குறிக்கிறது என்று சொல்லப்படுகறது. நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் கொண்டு 5 எண்ணிக்கையில் வாங்கினால் பஞ்சபூதங்களின் அருளும், ஆசியும் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் இதில் சிவப்பு, பச்சை, வெண்மை என்று இந்த மூன்று நிறங்களில் வாங்குவது சிறப்பு என்று சொல்கிறார்கள். சிவப்பு நிறம் வீட்டிற்கு சக்தியையும், ஆற்றலையும் அளிக்கும். பச்சை நிறம் செல்வத்தையும், செழிப்பையும் அளிக்கும். வெண்மை நிறம் வீட்டிற்கு அமைதியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
காற்று மணியை வீட்டில் வேகமாக காற்றடிக்கக்கூடிய இடத்தில் வைக்கவே கூடாது. நல்ல மென்மையாக காற்றடிக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
இந்த காற்று மணியை தோட்டத்தில் வைக்கக்கூடாது. வீட்டின் முன்புறம் வைக்கலாம். வீட்டு அறையில் ஜன்னல் ஓரத்தில் வைக்கலாம். காற்று மணி அடிக்கும் ஓசை மென்மையாக கேட்க வேண்டும்.
காற்று மணியை மேற்கு திசையில் வைப்பதன் மூலம் நல்ல அதிர்ஷ்டத்தையும், கல்வி ஞானத்தை அதிகரிக்கும். வீட்டின் வடமேற்கு திசையில் வைக்கும் போது வெற்றியைக் கொண்டுவரும். தென்மேற்கில் வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வடக்கு திசையில் வைப்பதால் செல்வம், பணவரவு, நல்ல லாபத்தை ஏற்படுத்தும். கிழக்கு திசையில் வைப்பதால் நேர்மறை ஆற்றலை அந்த வீட்டிற்கு தரும்.
இந்த காற்று மணியை சுவரின் மீது அல்லது கதவின் மீது படும்படி மாட்டக்கூடாது. தூங்கக்கூடிய இடத்தில் இதை மாட்டக்கூடாது.
இந்த காற்று மணி பீங்கான், மூங்கில், அலுமினியம், தாமிரம் போன்ற பல்வேறு விதமான உலோகத்திலும், பல்வேறு விதமான வடிவத்திலும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.