நம்முடைய கண்களுக்கு 11:11 என்ற எண் டோக்கனிலோ, போனிலோ, கடிகாரத்திலோ ஏதோ ஒரு விதத்தில் அடிக்கடி பட்டுக்கொண்டே இருந்தால், அதன் மூலமாக முன்னோர்கள் ஏதோ ஒரு விஷயத்தை நமக்குச் சொல்ல விரும்புவதாக அர்த்தம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்த 11:11 என்ற எண்ணை ‘ஏஞ்சல் எண்’ என்று கூறுவார்கள். நம்முடைய முன்னோர்களோ அல்லது கடவுளின் தூதுவர்களோ நமக்கு வரப்போகும் நல்லதையோ அல்லது கெட்டதையோ ஏதோ ஒரு விதத்தில் நமக்குச் சொல்ல நினைப்பார்கள். அதை இதுபோன்ற எண்கள் மூலமாக நமக்குத் தெரியப்படுத்துவார்கள்.
இந்த 11:11 என்ற எண்ணை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் நல்ல விஷயத்தையே அதிகமாக சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கும்போதுதான் நம் வாழ்க்கையில் அதிகமாக நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது இதன் பொருளாகும்.
சிலருக்கு சின்னச் சின்னதாக தோல்வி, விபத்து, ஏமாற்றம் போற்றவை நடக்கும். அதற்கு அவர்கள் எந்நேரமும் எதிர்மறையாக யோசித்துக்கொண்டிருப்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்காகத்தான் நல்ல விஷயத்தை யோசிக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்துவதற்காக இந்த எண் அடிக்கடி நம் கண்களில் படுகிறது.
இந்த 11:11 என்ற எண்ணிற்கான இன்னொரு அர்த்தம் என்னவென்றால், நாம் விழிப்புணர்வு அடையக்கூடிய நேரம் இது என்பதாகும். நம் மனதும் மூளையும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ அல்லது நபரையோ கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருப்போம். அதிலிருந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்ல வருகிறார்கள் என்று இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எண்ணை பார்ப்பதற்கான இன்னொரு காரணம், நம்முடைய மூளையும், மனதும் Open minded ஆக இருக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
நம்முடைய தன்னம்பிக்கைக்கு முக்கியமான காரணம், பணிவு மற்றும் பொறுமையாகும். வெற்றி பெறுவதற்கு முன்பு தேவையில்லாத கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் பணிவுடன் அமைதியாக இருப்பது சிறப்பான வெற்றிக்கு வழிவகுக்கும் என்று சொல்லக்கூடியதாகும்.
நமக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களுக்காக நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். மேலும். எதிர்காலத்தில் நிறைய நல்ல விஷயங்கள் கிடைக்கப்போகிறது. அதனால் இன்னும் உறுதியாகவும், நன்றியுணர்வுடனும் இரு என்று சொல்லக்கூடியதாக இதன் பொருள் எனக் கூறப்படுகிறது. உங்களுக்கும் அடிக்கடி இந்த 11:11 என்ற எண் கண்களில் படுகிறதா? என்று சொல்லுங்கள்.