மணி பர்ஸில் தப்பித்தவறிக் கூட இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்!

Don't keep these items in your purse
Don't keep these items in your purse
Published on

ம்முடைய மணி பர்ஸில் பணம், முக்கியமான ரெசிப்ட், அன்புக்குரியவர்களின் புகைப்படம் போன்றவற்றை வைத்திருப்போம். ஆனால், பர்ஸில் தப்பித்தவறிக் கூட சில பொருட்களை வைத்திருப்பது பண வரவை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பர்ஸில் வைத்திருக்கும் பணம் மென்மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாம் எண்ணுவோம். அதற்கு இயற்கையான முறையில் வாசனை தரக்கூடிய கிராம்பு, ஏலக்காய், ஜவ்வாது, பச்சை கற்பூரம் ஆகியவற்றில் ஏதேனும் வைக்கும்போது அது பணத்தை நமக்கு ஈர்த்துத் தரும் என்று சொல்லப்படுகிறது.

பர்ஸில் அதிகமாகக் கடன் ரிசிப்ட் வைத்திருக்கிறீர்கள் என்றால், அது மேலும் கடன் அதிகமாக வாங்கும் சூழலை அதிகரிக்கும். நீங்கள் பணம் வைத்திருக்கும் பர்ஸில் மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷனை வைத்திருக்காதீர்கள். நோய் சம்பந்தமான விஷயங்களை அது அதிகமாக ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அனாவசிய செலவை குறைக்க வேண்டுமா? பீரோவை இந்த திசையில் வைத்துப் பாருங்கள்!
Don't keep these items in your purse

பர்ஸில் வரவு சம்பந்தமான பில்ஸை வைத்திருக்கலாம். Salary pay slip, Bank mini statement போன்றவற்றை வைத்திருக்கலாம். இதெல்லாம் பண வரவை தரக்கூடியதாகும். பர்ஸில் நம் அன்புக்குரியவரின் புகைப்படத்தை வைத்திருப்போம். அந்த புகைப்படம் கசங்கி, கிழிந்து இருந்தால் அது நெகட்டிவ் எனர்ஜியாக மாறி பலவித சங்கடங்களையும், பிரச்னைகளையும் உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.

பணம் வைத்திருக்கும் பர்ஸில் Safety Pin, hair pin போன்றவற்றை வைக்காதீர்கள். அப்படி வைத்தால் அது பண வரவை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த அளவிற்கு முக்கியமான பொருட்கள் வைத்திருக்கும் பர்ஸ் கிழிந்திருக்கக் கூடாது. அத்தகைய நீட்டாக இருக்கும் பர்ஸை வைத்திருக்க வேண்டும். பர்ஸில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களை கவனமாகக் கையாள வேண்டும். நம் பர்ஸில் இருக்கும் பணம் கசங்காமல், கிழியாமல் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் செல்வம் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?
Don't keep these items in your purse

பர்ஸை நம் வீட்டில் வைக்கும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும். பர்ஸை வெளியில் செல்லும்போது கண்ட இடத்தில் எடுத்து வைக்காதீர்கள். அவ்வாறு வைக்கும்போது அந்த இடத்தில் உள்ள வைப்ரேஷன் பர்ஸில் பட்டு பண வரவைக் குறைக்கும்.

மேலும் வீட்டிற்கு வந்ததும் பர்ஸை அலட்சியமாக தூக்கி எறியாதீர்கள். அதில்தான் நம்முடைய பணத்தை வைத்திருப்போம். அத்தகைய பர்ஸை தூக்கி எறியும்போது மகாலக்ஷ்மியை அவமதிப்பதுப் போல ஆகிறது. நீங்கள் கைராசி என்று நினைக்கும் நபரிடம் பணம் சிறிது வாங்கி பர்ஸில் வைத்திருப்பது பணம் மென்மேலும் பெருகுவதற்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com