‘குளிகை நேரம் என்பது ஏதோ ஒரு கெட்ட நேரம், அதில் எதுவுமே செய்யக்கூடாது’ என்று இன்னும் நம்மில் பலருக்கு புரிதல் உள்ளது. ஆனால், அது அப்படி அல்ல. ஒருசில விஷயங்கள் செய்யக்கூடாது, ஒருசில விஷயங்களைச் செய்யலாம். அவை என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் ஒருமுறை நடக்கும் என்பது ஐதீகம். சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும், அசுப காரியங்களைச் செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது.
சுப காரியம் எதுவானாலும், அதைச் செய்வதற்கு பொருத்தமான நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது உலக வழக்கம். ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் யாரும் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். ஆனால், பலரும் குளிகை காலத்தை தேர்வு செய்து சில முக்கியமான விஷயங்களை செய்து வருவது நடைமுறையில் உள்ளது. காரணம், குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்பது ஐதீகமாகவும், பொதுவான நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.
குளிகை கால வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வது, கடனைத் திருப்பிக் கொடுப்பது, தங்க நகைகள் வாங்குவது, பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற விஷயங்களை செய்யலாம். அதன் காரணமாக தடைகள் எதுவும் இல்லாமல் அந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் என்பது மட்டுமல்லாமல், அவை போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்வதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்பதும் மக்களின் மத்தியில் அதிக நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதனால் சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும், அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது. அதன் காரணமாக, அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
இனிமேலாவது குளிகை காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களை தடையில்லாமல் செய்யுங்கள். உங்களுக்கும் தடையில்லாமல் அனைத்து காரியங்களும் நடக்கும். அதேபோல் செய்யக்கூடாத காரியங்களை செய்யாதீர்கள். இதுவே குளிக்கையின் சிறப்பு.