மிஸ் பண்ணிடாதீங்க! வரவிருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது?

famous-temple-kumbhabhishekam
famous-temple-kumbhabhishekam

புண்ணியத்தலங்களில் இறைவனின் சாந்நித்தியத்தைப் புதுப்பிக்க பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பாபிஷேகம் ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிக முக்கியமான நிகழ்வாகும்.  அந்த வகையில் உலக அளவில் பக்தர்களை பெருமளவில் ஈர்த்த 5 மிக முக்கியமான கும்பாபிஷேகங்கள் இதோ:

1. தஞ்சை பெருவுடையார் கோயில் (2020) 

famous-temple-kumbhabhishekam
தஞ்சை பெருவுடையார் கோயில்

1000 ஆண்டுகளைக் கடந்த இந்த யுனெஸ்கோ பாரம்பரிய சின்னத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு 2020- ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் சிறப்பு என்னவென்றால் இதில் தமிழ், மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் மந்திரங்கள் ஓதப்பட்டது. ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதப் படுகிறது. 216 அடி உயர விமானத்தின் கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி உலகப் புகழ்பெற்றது. 

இதையும் படியுங்கள்:
ராமன் ஏன் வென்றான்? மண்டோதரி தந்த விளக்கம்!
famous-temple-kumbhabhishekam

2. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் (2025) 

famous-temple-kumbhabhishekam
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்

உலகின் பெரும் செல்வம் கொண்ட கோயிலாகக் கருதப்படும் இக்கோயிலில் சுமார் 270 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2025- இல் "மகா கும்பாபிஷேகம்" நடைபெற்றது. இதன் சிறப்பு  என்னவென்றால் திருவிழா அரசு குடும்பத்தினரின் முன்னிலையில், ஆகம விதிகளின்படி மிக ரகசியமாகவும், நேர்த்தியாகவும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு கேரளா மற்றும் உலகெங்கிலும் உள்ள வைணவ பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

3. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (2026- இல் வரவிருப்பது) 

famous-temple-kumbhabhishekam
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக 2009-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது கோயில் திருப்பணிகள் குறிப்பாக வீரவசந்தராயர் மண்டபச் சீரமைப்பு முடிவடைந்து 2026 ஜனவரி 26 இல் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மண்டப சீரமைப்பு பணிகள் தற்போதும தீவிரமாக நடைபெற்று வருவதால் வரும் செப்டம்பரில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் சிறப்பாக கூறப்படுவது 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த நிகழ்வுக்காக தமிழக அரசு மற்றும் கோயில் நிர்வாகம் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

4. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ( 2025) 

famous-temple-kumbhabhishekam
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

கடற்கரையோரம் அமைந்துள்ள முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் 16 ஆண்டு களுக்குப் பிறகு 2025 ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதன் சிறப்பாக சொல்லப்படுவது 76 ஓம குண்டங்களுடன் கூடிய பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. இதில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருபதுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (Drones) மூலம் பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது ஒரு புதுமையான நிகழ்வாகும்.

5. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (2015) 

famous-temple-kumbhabhishekam
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கத்தில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகம் உலகத்தரம் வாய்ந்தது. இதில் சிறப்பாக கூறப்படுவது ஆசியாவிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரத்தைக்கொண்ட இக்கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதுதான். லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இதைத் தவிர வெளிநாடுகளில் அரிசோனா (அமெரிக்கா) மற்றும் லண்டன் போன்ற இடங்களில் உள்ள இந்து ஆலயங்களிலும் சமீப காலங்களில் பெரும் பொருட்செலவில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. 

logo
Kalki Online
kalkionline.com