பிப்ரவரி மாத நாள்காட்டி: மகா சிவராத்திரி முதல் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!

ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் 28-ம்தேதி வரை வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
february month spiritual events
february month calendar, marriage, lord shiva
Published on

பிப்ரவரி 1 : பௌர்ணமி, தைப்பூசம், வடலூர் ராமலிங்க ஸ்வாமிகள் அருட் பெருஞ்ஜோதி, முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாள், மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம், திருப்பதி ஏழுமலையான் கோவில் ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம், ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் புஷ்கர உற்சவம்.

பிப்ரவரி 2 : தேய்பிறை பிரதமை, தேவமாதா பரிசுத்தரான திருநாள், திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பவுர்ணமியையொட்டி கூப்புச்சந்திரபேட்டை உற்சவம்.

பிப்ரவரி 3 : தேய்பிறை துவிதியை, குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் தெப்போற்சவம், சகல சிவன் கோவில்களில் உள்ள அம்மனை வழிபட நல்ல நாள்.

பிப்ரவரி 4 : தேய்பிறை திரிதியை, திருமயம் ஆண்டாள் புறப்பாடு, அமிர்த யோகம்,

பிப்ரவரி 5 : தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகபெருமான் தங்க கவசம், வைரவேல் தரிசனம்.

பிப்ரவரி 6 : தேய்பிறை பஞ்சமி திதி, சுபமுகூர்த்த நாள், இன்று வாராகி அம்மனை வழிபட உகந்த நாள்.

இதையும் படியுங்கள்:
ஜனவரி மாத நாள்காட்டி: தைப்பொங்கல் முதல் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்...
february month spiritual events

பிப்ரவரி 7 : தேய்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், குச்சனூர் சனி பகவாகனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்ய நன்று, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் சீதா, ராமர், லட்சுமணருக்கு அபிஷேகம்.

பிப்ரவரி 8 : தேய்பிறை சப்தமி, சுபமுகூர்த்த நாள், ராமமேஸ்வரம் ராமநாதசுவாமி உற்சவாரம்பம், திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 8 முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது, திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், திருப்பதி கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று முதல் 16-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

பிப்ரவரி 9 : தேய்பிறை சப்தமி மாலை சுவாதி, ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்சம் அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதிஉலா, திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா

பிப்ரவரி 10 : தேய்பிறை அஷ்டமி, காளஹத்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் இத்தலங்களில் சிவபெருமான விழா தொடக்கம், திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி காலை பூத வாகன, இரவு சிம்ம வாகன வாகன வீதிஉலா, ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.

பிப்ரவரி 11 : தேய்பிறை நவமி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் இத்தலங்களில் சிவபெருமான் பவனி வரும் காட்சி, திருப்பதி கபிலேஸ்வரர் காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா.

பிப்ரவரி 12 : தேய்பிறை தசமி, ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகன புறப்பாடு, திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் காலை திருச்சி உற்சவம், இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா.

பிப்ரவரி 13 : தேய்பிறை ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், விஷ்ணுபதி புண்ணிய காலம், திருப்பதி கபிலேஸ்வரர் காலை வியாக்ர வாகன வீதிஉலா, இரவு கஜ வாகன வீதிஉலா, திருப்பதி கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் மாலை தங்கத்தேரோட்டம், இரவு கஜ வாகன வீதிஉலா.

பிப்ரவரி 14 : தேய்பிறை துவாதசி, சனிப்பிரதோஷம், சிவன் கோவில்களில் சிவபெருமான் சேஷ வாகன பவனி, திருப்பதி கபிலேஸ்வரர் காலை கல்ப விருட்ச வீதிஉலா, இரவு குதிரை (அஸ்வ) வீதிஉலா.

பிப்ரவரி 15 : தேய்பிறை திரயோதசி, சுபமுகூர்த்த நாள், ஸ்ரீமகா சிவராத்திரி, திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்ககோத்பவ தரிசனம், இன்று சூரிய வழிபாடு நன்று, திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் காலை போகி தேரோட்டம், இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா.

பிப்ரவரி 16 : தேய்பிறை சதுர்ததசி, போதாயன அமாவாசை(மதியம் ஆரம்பரம்), சுபமுகூர்த்த நாள், திருவோண விரதம், நத்தம் மாரியம்மன் விழா தொடக்கம், திருப்பதி கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, மாலை கொடியிறக்கம்.

இதையும் படியுங்கள்:
நவம்பர் மாத நாள்காட்டி: அன்னாபிஷேகம் முதல் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்...
february month spiritual events

பிப்ரவரி 17 : சர்வ அமாவாசை, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம், நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டு விழா, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் காலை சஹஸ்ர கலசாபிஷேகம், இரவு அனுமந்த வாகன வீதிஉலா.

பிப்ரவரி 18 : வளர்பிறை பிரதமை, சந்திர தரிசனம் நன்று, நத்தம் மாரியம்மன் புறப்பாடு, அமிர்த யோகம்.

பிப்ரவரி 19 : வளர்பிறை துவிதியை, காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் இத்தலங்களில் சிவபெருமான் கிரிப்பிரதட்சணம், ரமலான் நோன்பு ஆரம்பம்.

பிப்ரவரி 20 : வளர்பிறை திரிதியை, சுபமுகூர்த்த நாள், திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், நத்தம் மாரியம்மன் பால் காவடி உற்சவம்.

பிப்ரவரி 21 : வளர்பிறை சதுர்த்தி, சதுர்த்தி விரதம், இன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட உகந்த நாள், திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவாரம்பம்.

பிப்ரவரி 22 : வளர்பிறை பஞ்சமி, சஷ்டி விரதம், காங்கேயம் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி.

பிப்ரவரி 23 : வளர்பிறை பரணி, கார்த்திகை விரதம், மதுரை இன்மையில் நன்மை தருவார் கேடய சப்பரத்தில் புறப்பாடு.

பிப்ரவரி 24 : வளர்பிறை சப்தமி, கோவை கோணியம்மன் விழா தொடக்கம், காரமடை அரங்கநாதர் விழா தொடக்கம், நத்தம் மாரியம்மன் பாற்குடக் காட்சி.

பிப்ரவரி 25 : வளர்பிறை நவமி, கோவை கோணியம்மன் புலி வாகன பவனி, காங்கேயம் முருகப்பெருமான் தெய்வானையுடன் காட்சி. குடந்தை ஸ்ரீசக்கரபாணி கருட வாகனத்தில் பவனி.

பிப்ரவரி 26 : வளர்பிறை தசமி, நத்தம் மாரியம்மன் பவனி, திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரீராஜபெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.

பிப்ரவரி 27 : வளர்பிறை ஏகாதசி, சர்வ ஏகாதசி, கரிநாள், காங்கேயம் முருகப்பெருமான் ரதோற்வசம், நத்தம் மாரியம்மன் சந்தனக்குட காட்சி.

இதையும் படியுங்கள்:
டிசம்பர் மாத நாள்காட்டி: கார்த்திகை தீபம் முதல் வைகுண்ட ஏகாதசி வரை...
february month spiritual events

பிப்ரவரி 28 : வளர்பிறை துவாதசி, கரிநாள், கோவை கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புனர்பூச நட்சத்திரத்தையொட்டி காலை சீதா-ராமா் திருக்கல்யாண உற்சவம், மாலை ஊஞ்சல் சேவை..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com