நவம்பர் மாத நாள்காட்டி: அன்னாபிஷேகம் முதல் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்...

நவம்பர் மாதத்தில் 1-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை நடக்க உள்ள முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
aanmigam events
aanmigam events
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஆண்டின் பதினோராவது மாதமான நவம்பர் மாதத்தில் 1-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள், விரதங்கள், நட்சத்திரம் மற்றும் வழிபாட்டு தினங்களை அறிந்து கொள்ளலாம்.

நவம்பர் 1 : வளர்பிறை ஏகாதசி, உத்தான ஏகாதசி, 1040வது ராஜராஜசோழன் சதய விழா, இன்று பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.

நவம்பர் 2 : வளர்பிறை துவாதசி, திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் நூபுர கங்கைகு எழுந்தருளிய காட்சி.

நவம்பர் 3 : வளர்பிறை திரயோதசி, சுபமுகூர்த்த நாள், பிரதோஷம், இன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபட உகந்தநாள்.

நவம்பர் 4 : வளர்பிறை சதுர்த்தசி, திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

நவம்பர் 5 : பௌர்ணமி, குருநானக் ஜெயந்தி, சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம், கார்த்தீக கௌரீ விரதம்.

நவம்பர் 6 : தேய்பிறை பிரதமை, கார்த்திகை விரதம், கரிநாள், வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரதக்காட்சி.

நவம்பர் 7 : தேய்பிறை துவிதியை, கௌரிமாயூரநாதர் விழா தொடக்கம்.

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்
aanmigam events

நவம்பர் 8 : தேய்பிறை திரிதியை, சங்கடஹர சதுர்த்தி, விநாயகரை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.

நவம்பர் 9 : தேய்பிறை சதுர்த்தி, இன்று சூரிய வழிபாடு நன்று, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

நவம்பர் 10 : தேய்பிறை பஞ்சமி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை சஷ்டி விரதம், பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு

நவம்பர் 11: தேய்பிறை சஷ்டி, குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.

நவம்பர் 12 : தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி, ஸ்ரீவைகுண்டர் ஸ்ரீகள்ளர்பிரானுக்கு பால் அபிஷேகம், பைரவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாள்.

நவம்பர் 13 : தேய்பிறை நவமி, நெல்லை ஸ்ரீகாந்தியம்மன் ரதோற்சவம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை

நவம்பர் 14 : தேய்பிறை தசமி, இன்று நிமிஷாம்பிகையை வழிபட உகந்த நாள், திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை, திருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் திருக்கல்யாண வைபவம்.

நவம்பர் 15 : தேய்பிறை ஏகாதசி, ஸ்மார்தத ஏகாதசி, மாயவரம் கௌரீ மாயூரநாதர் ரதோற்சவம்.

நவம்பர் 16 : தேய்பிறை துவாதசி, சுபமுகூர்த்த நாள், வைஷ்ணவ ஏகாதசி, விஷணுபதி புண்ணிய காலம், திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் ரதோற்சவம்.

sabarimala ayyappan viratham
sabarimala ayyappan viratham

நவம்பர் 17 : தேய்பிறை துவாதசி, பிரதோஷம், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலையணியும் விழா, கரிநாள், நெல்லையப்பர் கொலு தர்பார்.

நவம்பர் 18 : தேய்பிறை திரியோதசி, மாத சிவராத்திரி, திருநெல்வேலி ஸ்ரீசுவாமி, ஸ்ரீஅம்பாள் ஊஞ்சலில் காட்சியருளல்.

நவம்பர் 19 : தேய்பிறை சதுர்த்தசி, சர்வ அமாவாசை, திருநெல்வேலி ஸ்ரீசுவாமி ஸ்ரீஅம்பாள் மஞ்சள் நீராட்டு விழா.

நவம்பர் 20 : இன்றும் அமாவாசை தொடர்கிறது, சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை

நவம்பர் 21 : வளர்பிறை பிரதமை, சந்திர தரிசனம், திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

நவம்பர் 22 : வளர்பிறை துவிதியை, திந்திருணி கௌரி விரதம், கருட தரிசனம் நன்று, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சி வரதராஜ பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமான் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

நவம்பர் 23 : வளர்பிறை திரிதியை, சுபமுகூர்த்த நாள், ரம்பாத் திரிதியை, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

நவம்பர் 24 : வளர்பிறை சதுர்த்தி, சதுர்த்தி விரதம், வாஸ்து செய்ய உகந்த நாள் (காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை மனை வாஸ்து செய்ய நன்று), வர சதுர்த்தி.

நவம்பர் 25 : வளர்பிறை பஞ்சமி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் கோவில்களில் முருகப்பெருமான் விழா தொடக்கம், பழனி ஸ்ரீஆண்டவர் திருவீதிஉலா, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

நவம்பர் 26: வளர்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், திருவோண விரதம், கரிநாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் புறப்பாடு.

நவம்பர் 27 : வளர்பிறை சப்தமி, சுபமுகூர்த்த நாள், நந்த சப்தமி, திருவண்ணாமலை அருணாச்சலநாயகர் காலை சேஷ வாகன புறப்பாடு.

நவம்பர் 28 : வளர்பிறை அஷ்டமி, மைதூலாஷ்டமி, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் திருவீதிஉலா.

நவம்பர் 29 : வளர்பிறை நவமி, பிரளப கல்பாதி, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகன பவனி, பழனி ஆண்டவர் புறப்பாடு, கருட தரிசனம் நன்று, குச்சனூர் சனிபகவானுக்கு ஆராதனை செய்ய நன்று.

இதையும் படியுங்கள்:
செப்டம்பர் மாத நாள்காட்டி: நவராத்திரி முதல் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்
aanmigam events

நவம்பர் 30 : வளர்பிறை தசமி, சுபமுகூர்த்த நாள், அமிர்த்த யோகம், சுவாமிமலை முருகன் யானை வாகன பவனி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலநாயகர் மஹா ரதோற்சவம்.

logo
Kalki Online
kalkionline.com