

ஜனவரி 1: வளர்பிறை திரயோதசி, பிரதோஷம், ஆங்கில வருடப்பிறப்பு, பிள்ளையார்பட்டி விநாயகர் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருதல், திருப்பதி சுவாமி பூஷ்பாங்கி சேவை, மதுரை மீனாட்சி அம்மன் வைரக்கிரீடம்.
ஜனவரி 2 : வளர்பிறை சதுர்த்தசி, ஆருத்ரா அபிஷேகம், சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
ஜனவரி 3 : பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம், வட சாவித்திரி விரதம், ஆவுடையார் கோவில் ஸ்ரீமாணிக்கவாசகருககு உபதேசம் செய்தருளிய காட்சி.
ஜனவரி 4 : தேய்பிறை பிரதமை, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ராபத்து உற்சவ சேவை, சமயபுரம் சென்று மாரியம்மனை வழிபட நன்று.
ஜனவரி 5 : தேய்பிறை துவிதியை, திருவள்ளூர் வீரராக பெருமாள், மதுரை கூடலழகர் கோவில்களில் திருவாய் மொழி உற்சவ சேவை.
ஜனவரி 6 : தேய்பிறை திரிதியை, சங்கடஹர சதுர்த்தி, திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் இரபத்து உற்சவ சேவை.
ஜனவரி 7 : தேய்பிறை சதுர்த்தி, ஸ்ரீதியாகபிரம்ம ஆராதனை விழா, திருவையாற்றில் சங்கீத வித்வான்கள் சேர்ந்து பஞ்ச கீர்த்தனைகளும் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
ஜனவரி 8 : தேய்பிறை பஞ்சமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்சவாரம்பம்
ஜனவரி 9 : தேய்பிறை சஷ்டி, முருகப்பெருமானுக்கு விரதம் இருக்க உகந்த நாள், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சி.
ஜனவரி 10 : தேய்பிறை ஸப்தமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி.
ஜனவரி 11 : தேய்பிறை அஷ்டமி, கெர்போட்ட நிவர்த்தி, அஷ்டமி பிரதஷ்ணம், மதுரை மீனாட்சி சொக்கர் சகல ஜீவ கோடிகளுக்கு படியளந்து அருளல்.
ஜனவரி 12 : தேய்பிறை நவமி, திரைலோக்ய கௌரி விரதம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம்.
ஜனவரி 13 : தேய்பிறை தசமி, திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
ஜனவரி 14 : தேய்பிறை ஏகாதசி, போகிப்பண்டிகை, சபரிமலை மகரஜோதி தரிசனம்.
ஜனவரி 15 : தேய்பிறை துவாதசி, தைப்பொங்கல், (காலை 10.30 மணி வரை பொங்கல் வைக்க நல்ல நேரம்) உத்தராயணப் புண்ணிய காலம்.
ஜனவரி 16 : தேய்பிறை திரயோதசி, மாட்டுப்பொங்கல், திருவள்ளூவர் தினம், பிரதோஷம், கரிநாள், இன்று சிவன் வழிபாடு செய்ய உகந்த நாள், மதுரை கூடலழகர் கனு உற்சவ விழா தொடக்கம்.
ஜனவரி 17 : தேய்பிறை சதுர்ததசி, உழவர் திருநாள், மாத சிவராத்திரி, கரிநாள், மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி, கருட தரிசனம் நன்று.
ஜனவரி 18 : தை அமாவாசை, பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நாள்.
ஜனவரி 19 : வளர்பிறை பிரதமை, திருவோண விரதம்.
ஜனவரி 20 : வளர்பிறை துவிதியை, சந்திர தரிசனம் நன்று, திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி வாகனத்தில் புறப்பாடு.
ஜனவரி 21 : வளர்பிறை திரிதியை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் ரதோற்சவம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம்.
ஜனவரி 22 : வளர்பிறை சதுர்த்தி, சதுர்த்தி விரதம், முகுந்த சதுர்த்தி, வர சதுர்த்தி, மிலட்டூர் விநாயக் பெருமான் புறப்பாடு.
ஜனவரி 23 : வளர்பிறை பஞ்சமி, வசந்த பஞ்சமி,
ஜனவரி 24 : வளர்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
ஜனவரி 25 : வளர்பிறை ஸப்தமி, ரத ஸப்தமி, சூரிய சந்திர விரதம், கரிநாள்.
ஜனவரி 26 : வளர்பிறை அஷ்டமி, வாஸ்து நாள் (காலை 10.41 மணி முதல் 11.17 மணி வரை வாஸ்து செய்ய நன்று)
ஜனவரி 27 : வளர்பிறை நவமி, கார்த்திகை விரதம், நவமி, முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்தநாள்.
ஜனவரி 28 : வளர்பிறை தசமி, சுபமுகூர்த்த நாள்.
ஜனவரி 29 : வளர்பிறை ஏகாதசி, சர்வ ஏகாதசி, பெருமாளை வழிபட உகந்த நாள்.
ஜனவரி 30 : வளர்பிறை துவாதசி, பிரதோஷம், சகல சிவாலங்களிலும் நந்தீஸ்வரர் வழிபாட்டு அபிஷேக ஆராதனை செய்ய நன்று, வராஹ துவாதசி வராஹ கல்பாதி.
ஜனவரி 31 : வளர்பிறை திரயோதசி, கரிநாள்,