
குடும்பத்தில் வறுமை அகன்று, பணம் கொழிக்க ஃபெங் சுயி வாஸ்து சில வழிமுறைகளைக் கூறுகிறது. அப்படிப் பணம் செழிக்க முதலில் நாம் செய்ய வேண்டியது வீட்டில் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைப் செய்ய வேண்டும். இது குறித்து ஃபெங் சுயி வாஸ்து சொல்லும் சில விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
சுத்தமான வீடு: நாம் வசிக்கும் வீட்டில் அனாவசிய பொருட்களை சேர்க்காமல் இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களால் நேர்மறை சக்திகள் பாதிக்கப்படும். மிகவும் சுத்தமான வீடு நல்ல எனர்ஜியை ஊக்குவிக்கும்.
செடிகள்: வீட்டில் பச்சை நிறச் செடிகளை வைத்து வளர்பபது செல்வச் செழிப்பை அதிகரிக்கும் என்று ஃபெங் சுயி வாஸ்து கூறுகிறது. ஜேட் செடி, மூங்கில் மற்றும் ஆர்க்கிட் போன்றவை வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கக் கூடியது. வீட்டுத் தென் கிழக்கு பகுதியில் இதுபோன்ற செடிகளை வைத்து வளர்ப்பது நல்லது.
இந்த இடம் செல்வச் செழிப்பு சம்பந்தப்பட்ட இடமாகும். இந்தச் செடிகள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். காய விடக்கூடாது. அப்படி இருந்தால் எதிர்மறை அதிர்வுகளே அதிகமாகும்.
கழிவறை சுத்தம்: உங்கள் வீட்டுக் கழிவறையிலிருந்து நல்ல சக்தி வீட்டிற்குப் பாய அதை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நமது நாள் முதலில் அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. அனாவசியமாக குழாய் நீரை கசிய விடுவது நல்லதல்ல. இது நல்ல சக்தியைத் தடுக்கும். சதுரமாகவோ அல்லது ஓவல் வடிவத்திலோ சிங்க் இருப்பது நல்லது. இது பணம் உங்கள் வீட்டில் தங்கு தடையின்றி புழங்குவதற்கு முக்கிய காரணமாகிறது.
ஸ்படிகக் கற்கள்: அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் அதிகரிப்பதில் ஸ்படிகக் கற்கள் முக்கியப் பங்கு ஆற்றுகின்றன.உங்கள் வீட்டில் பல இடங்களில் இக்கற்களை வையுங்கள். இவற்றை செடிகள் வைக்கும் தொட்டிகளிலும் வைக்கலாம். இதிலிருந்து வரும் சக்தி செல்வத்தை ஈர்க்கும். இதற்கு செல்வத்தை ஈர்க்கும் ஆகர்ஷண சக்தி உண்டு என்று ஃபெங் சுயி வாஸ்து கூறுகிறது.
உங்கள் வீட்டு நுழைவாயிலை நல்ல நிலையில் சுத்தமாக வையுங்கள். கதவு சத்தம் போடுவது மற்றும் சரியாக மூட முடியாமல் இருப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்க உப்பைத் தூவுவது நல்லது. வீட்டின் மூலைகளில் உப்பைத் தூவலாம். இதனால் தீய சக்திகள் அழிக்கும்.
வீட்டில் நல்ல மணமான மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி ஏற்றி வைப்பது நல்ல செல்வச் செழிப்பை ஈர்க்கும். சந்தன மணம் கமழும் ஊதுபத்திகள் மிகச் சிறந்தது. இது வீட்டை நல்ல நறுமணத்துடன் வைப்பதோடு, செல்வச் செழிப்பையும் அதிகரிக்கச் செய்யும்.