பிள்ளையார் சுழி 'உ' போட்டு தொடங்குவது ஏன்? மகாபாரதம் கூறும் அதிசய உண்மை!

நீங்கள் பிடித்து வைக்கும் ஒரு பிடி விநாயகர் உங்கள் வாழ்க்கையையே மாற்றும் அற்புத ரகசியங்கள்!
பிள்ளையார் வழிபாடு - Vinayagar Benefits
பிள்ளையார் வழிபாடு - Vinayagar BenefitsImage credit: Gemini
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on

ந்த செயலும் தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போடும் மரபின் ஆன்மிகப் பொருள், ‘உ’ எழுத்தின் வட்டம் பிரபஞ்சத்தையும் விநாயகரின் எல்லையற்ற தன்மையையும் குறிக்கும் என விளக்கப்படுகிறது. வேத வியாசர் மகாபாரதம் எழுதும்போது பிள்ளையாரின் தந்தத்தை எழுத்துக் கருவியாகப் பயன்படுத்திய ஐதீகமும் கூறப்படுகிறது. முதற்கடவுளை வணங்கினால் தடைகள் நீங்கி காரியங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வலியுறுத்தப்படுகிறது.

பிள்ளையார் வழிபாடு:

எந்த ஒரு புதிய செயலையும், அல்லது எழுத்தையும் தொடங்கும் முன்பு தடைகள் நீங்கி நன்மைகள் பெருகவே பிள்ளையார் சுழி போடப்படுகிறது. பிள்ளையார் சுழியை 'உ' என எழுதும்போது முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது. வட்டத்திற்கு முடிவே கிடையாது.

விநாயகரும் அப்படித்தான் அவரை அறிந்துகொள்வது என்பது பிரம்ம பிரயத்தனம். 'வட்டம்' என்பது இந்த பிரபஞ்சத்தை குறிக்கிறது. இதற்குள் பலவித உலகங்களும் வான் மண்டலம் அடங்கியுள்ளது. ஏதாவது விநாயகர்தான் காட்டுகிறது. இந்த வயிற்றுக்குள் அவர் சர்வ லோகத்தையும் அடக்கி உள்ளார் என்பது நம்பிக்கை.

முதல் கடவுள் ஆன விநாயகரை வழிபட்டு தொடங்கும் செயல்கள் எந்த தடையும் இன்றி வெற்றிகரமாக முடியும்.

‘ஓ’ என்ற எழுத்து காத்தல் தொழிலை குறிப்பதால் நான் தொடங்கும் காரியத்தை இறைவன் பாதுகாப்பார் என்ற ஐதீகம் உள்ளது.

 எந்த செயலையும் செய்யும் முன்னால் பிள்ளையாரை வணங்கி விட்டு செய்தால் அவர் துணை இருந்து எந்த தடையும் வராமல் அந்த செயலை செய்து முடிக்க உறுதுணையாக இருப்பார். அதனால் எந்த வேலையாக இருந்தாலும் பிள்ளையார் சுழியை  போட்டு துவங்கி நன்றாக வரவேண்டும் என்று இறைவன் துணையோடு ஆரம்பித்து முடிக்கிறோம்.

பிள்ளையார் வழிபாடு - Vinayagar Benefits
பிள்ளையார் வழிபாடு - Vinayagar BenefitsImage credit: Gemini

வேத வியாசர்  மகாபாரதம் எழுத துவங்கும் முன்பு தடை இல்லாமல் தனது எழுத்து நடைபெற பிள்ளையாரின் ஆசியை வேண்டினார். அவருக்கு காட்சி கொடுத்த பிள்ளையார்,  தனது ஒரு தந்தத்தினை  உடைத்து அதை கொண்டு வியாசர் சொல்ல மகாபாரத கதை எழுதியதாக புராணங்கள் கூறுகிறது.

பிடித்து வைத்தால் பிள்ளையார் பலன்கள்:

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சால சௌபாக்கியமும் கிடைக்கும் காரிய சித்தி தருவார்.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளை படிப்பில் வல்லவராக்குவார்.

புற்று மண்ணால் பிள்ளையார் செய்து வணங்கினால் நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வியாபாரம் பெருகிடும்.

வெல்லத்தில்  பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலின் உள்ளேயும் வெளியே உள்ள கட்டிகள் கரையும். நல்ல உடல் ஆரோக்கியம் தருவார்.

உப்பில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும் எதிரிகளை விரட்டுவார்.

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி சூனியம் விலகும். செல்வம் உயரச்செய்வார்.

விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால், உஷ்ண நோய்கள் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை’யின் பொருள் தெரியுமா?
பிள்ளையார் வழிபாடு - Vinayagar Benefits

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறுகிடைக்கும்.

சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் நீங்கி வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

வெண்ணையில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

பசுஞ்சாண விநாயகர் நோய்களை நீக்குவார். கல் விநாயகர் வெற்றி தருவார். மண்ணால் விநாயகர் செய்து வழிபட சகல விதமான சவுபாக்கியங்களை கொடுப்பார்.

புற்று மண், அரைத்த மாவு, சாளக்கிராம நதிக்கல் ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகிவிடுமாம்.

இதைத்தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கையான பழமொழியாக சொல்கிறார்கள்.

இந்த ஆன்மீக வழிகாட்டியின் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே எந்தெந்த பிள்ளையார் செய்து வழிபாட்டால் கடன் தொல்லை, நோய்கள் மற்றும் செவ்வாய் தோஷம் நீங்கும் என்ற தெளிவைப் பெற்று, உங்கள் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் உடனடியாக அடைய முடியும்.

இதையும் படியுங்கள்:
விநாயக சதுர்த்தியை இப்படி கொண்டாடினால் செல்வம் பெருகும்!
பிள்ளையார் வழிபாடு - Vinayagar Benefits
logo
Kalki Online
kalkionline.com