தங்க நாதஸ்வரம்: நெல்லையப்பர்–காந்திமதி திருக்கோவிலின் அபூர்வ மரபுகள்!

வசந்த உற்சவத்தில் நீர் நிரப்பப்பட்ட மண்டபத்தில் சிறப்பு பூஜைகள், தங்க நாதஸ்வரம் மீண்டும் ஒலிக்கும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் தொன்மையும் தனிச்சிறப்பும்
golden-nadaswaram
golden-nadaswaram
Updated on

தமிழ்நாட்டில் தங்க நாதஸ்வரம் உள்ள கோவில்களில் முக்கியமாக  திருநெல்வேலியில்அருள் பாலிக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் உள்ளது. நெல்லையப்பர் கோவிலில் பல அரிய சிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில வேறு எங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

புகழ் மிக்க நெல்லையப்பர் கோவிலில் உள்ளே நுழைந்தவுடன் பத்தடி உயர்த்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும் அது மாக்காளை என அழைக்கப்படுகிறது.அதன் கம்பீரம் பார்ப்பவர்களை வியக்க வைக்கும்.

அதேபோல இந்த கோவிலின் இரண்டாவது பிரகாரம் சற்று பெரியது இங்கே ஏழிசை சுரங்கள்  இசைக்கும் தூண்கள் உள்ளன இவற்றைத் தட்டி பார்த்தால் சுரங்களின் ஒலி கேட்கும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் மட்டுமே மூன்று மூலவர்கள் உள்ளனர்.

சுயம்பு மூர்த்தியாக தோன்றிய வேண்ட வளர்ந்த நாதர் பெரிய லிங்கமாக பிரதான சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நெல்லையப்பர் வேணுவனேஸ்வரர் வெய்மூர்த்தீசர்  ஆகிய திருநாமங்கள் உள்ளன இந்த லிங்கத்தின் மத்தியில் காந்திமதி அம்பிகையின் உருவம் தெரியும் அதனால் நெல்லையப்பர் சக்தி லிங்கம் என்று அழைக்கப்படுகிறார்.

 மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால் சிவலிங்க பூஜை செய்தபடி உள்ளார் அருகில் உற்சவர் மகாவிஷ்ணு மார்பில் சிவலிங்கத்துடன் அருள்பாலிக்கிறார். தன் சகோதரியை மணந்த சிவபெருமானை விஷ்ணு மார்பில் தாங்கினார் என்று கூறப்படுகிறது அவரது கையில் தாரை வார்த்து கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் உறையும் மூக்குத்தி அம்மன் - மூக்குத்தியில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?
golden-nadaswaram

மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூலமகாலிங்கம் சந்நிதி உள்ளது, அகஸ்தியர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படும் பாதாள லிங்கமே ஆதிமூலவர் என்று அழைக்கப்படுகிறார் இவருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது. சிவபெருமானம் சக்தி தேவியும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் பிரதோஷ சமயத்தின்போது இந்த கோவிலில் அம்பாள் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தி பகவானுக்கும் பிரதோஷ கால பூஜை நடைபெறுகிறது. இதேபோல் சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கும் அம்பிகைக்கும் சேர்ந்துதான் நான்கு ஜாம அபிஷேகமும் பூஜைகளும் நடத்தப்படும் எந்த விதத்திலும் சிவனையும் அம்பாளையும் இந்த திருத்தலத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை.

நெல்லையப்பர் கோவிலில் உச்சிகால பூஜையின்போது காந்திமதி அன்னை நைவேத்திய தட்டுடன் ஈசனை நோக்கி புறப்படுவாள். ஒரு மனைவி கணவனையும் விருந்தினர்களையும் உபசரித்து போற்றும் விதிமுறை இந்த தல உச்சிக்கால பூஜை நிகழ்ச்சியில் நிலை நாட்டப்படுகிறது வெறும்  வெறும் சுத்த அன்னம் மட்டுமல்ல கூட்டு பொரியல் என மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தேவி ஈசன் சன்னதிக்கு செல்வாள் அப்போது ஈசனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பின்தான் கொண்டு வந்த நைவேத்தியதை ஈசனுக்கு படைத்து ஆராதிக்கிறாள் காந்திமதி அம்மன்.

பின் ஆலயத்தில் உள்ள அனைத்து பரிவார தேவதைகளுக்கும் நைவேத்தியம் செய்கிறாள். பின்னரே காந்திமதிக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. கணவர் உணவு எடுத்துக்கொண்ட பின்னர் மனைவி உணவு புசிக்கும் பாரம்பரியத்தை இந்த கோவிலில் அன்னை காந்திமதி தினம் தோறும் நிகழ்ச்சி காட்டுகிறாள்.

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில்  வருடத்தில் பன்னிரண்டு மாதங்களுமே பல்வேறு உற்சவங்கள் நடந்து கொண்டே இருக்கும் சித்திரை மாதத்தில் வசந்த உற்சவம் என்ற உற்சவம் நடைபெறும்.

இந்த உற்சவத்தில் வசந்த மண்டபம் வெட்டிவேர்களால் அலங்கரிக்கப்பட்டு குளிர்ச்சியூட்டக்கூடிய அனைத்து வகையான பொருட்களும் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் நீர் நிரப்பப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோடை காலத்தில் வெப்பம் தணியும் வகையில் பிரார்த்தனை செய்யப்பட்டு வெள்ளரிக்காய், பானகம் உள்ளிட்ட பொருட்கள் வைத்தும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
ஒரே சங்கு வடிவ ஸ்ரீ வல்லப சேத்திரம்: திருவாழ் மார்பன், இரட்டை கொடிமரம், மழலை பாக்கியம் அருளும் அதிசய தலம்!
golden-nadaswaram

இந்தத் திருக்கோவிலில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த தங்க நாதஸ்வரம் பழுது பார்க்கப்பட்டு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு முதல் மீண்டும் வசந்த உற்சவத்தின்போது இசைக்கப் படுகிறது. இப்போது வசந்த உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது. தினமும் சுவாமியும் அம்பாளம் வீதி உலா வரும்பொழுது தங்க நாதஸ்வரம் இசைக்கப் படுகிறது. மிகவும் பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த இந்த தங்க நாதஸ்வரம் திருநெல்வேலியில் அருள்பாளிக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் இசைக்கப்படுவது தனி சிறப்பாகும்.

logo
Kalki Online
kalkionline.com